மகாத்மா

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மா

மகாத்மா..


புத்திலிபாய் கரம்சந்த் காந்தியின் தவப்புதல்வனாய்

 போர் பந்தர் மண்ணில் பிறந்து

 போரை விரும்பாது அகிம்சையை ஆயுதமாக்கி

போராடி வெற்றி கண்ட போராளி....

எளிமையின் சின்னமாய் எழுச்சியின் சொர்ணமே

தண்டியில் உப்பெடுத்து உரிமைக் குரல்தந்து

உத்தமனே உயர்ந்த உள்ளம் கொண்டவரே

தன்னிகரற்ற தலைவனாய் இந்தியாவின் தலைமகனே....

அன்பினால் ஆங்கிலேயரைக் கட்டிப் போட்டு

அகிம்சையால் வெற்றிக் கொடி நாட்டியவரே

தரணியெல்லாம் சுதந்திர காற்றைச் சுவாசிக்கவும்

இனவெறி நிறவெறி தன்மான உணர்ச்சியுடைய

எழில்மிகு இந்திய தேசத்தின் எழுச்சி நாயகனே.....

தேசப்பிதாவே நின் சமாதியில் புதைத்து

உன்னை மட்டுமல்ல உன் கொள்கையையும்தான்

நீதி நேர்மை  மனசாட்சியை அடகுவைத்து

மனித நேயத்தை மறந்துவிட்ட தேசாய் மாறியதே

சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்து

வர்க்க பேதமற்ற வாழ்வை சுவைத்திடவும்

வசந்த  திருநாள் அந்தப் பெண்ணாள்

சுதந்திர திருநாள் விரைவில் விடியலாய்..


-முனைவர் ப.விக்னேஸ்வரி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை.