பார் போற்றும் பாரதி...! 061

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பார் போற்றும் பாரதி...! 061

பார்போற்றும் பாரதி...

இளம்பாரதியே இன்னும் பல பணிகள் செய்ய எழந்து வா!
எங்கள் மனது மீண்டும் ஒரு பாரதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதே!
முண்டாசுக் கவிஞனின் கவி கேட்க ஆவல் கூடுகிறதே!
பெண்மையை உயர்த்திய பேராண்மை கொண்டவரே!
உந்தன் எழுத்துக்களைப் படித்தாலே வீரம் பிறக்குமே!
உந்தன் வரிகள் நாடி நரம்புகளையும் முறுக்கேற்றுகிறதே!
 உந்தன் சொல் கேட்டு செத்தவனும் உயிர்த்தெழுவானே!
சுயசார்புத் தன்மை வேண்டும் என்று ஓங்கி முழக்கமிட்டவரே!
வ.உ. சிதம்பரனாரோடும் சுப்ரமணிய சிவாவோடும் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தவரே!
காதல் வீரம் இரண்டையும் சரிசமமாகப் பார்த்தவரே!
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் என்ற கருத்தை வலி யுருத்தியவரே!
பாரதி அறுபத்தாறு என்ற தலைப்பில் பாசுரங்களை இயற்றியவரே!
பெண்மையை சக்தியின் வடிவமாய்ப் போற்றியவரே!
சுதந்திர தாகத்தை உள்ளம் எங்கும் விதைத்தவரே!
எட்டையபுரத்தில் உதித்த உயர்ந்த வைரமே!
மேலைநாட்டு இலக்கியங்களில் மேதையாக விளங்கியவர்!
பன்மொழித்திறன் கொண்ட பகுத்தறிவா ளரே!
தேசபக்திப்பாடல்கள் இயற்றி ஆங்கிலேயர்க்கு பயத்தை ஏற்படுத்தியவரே!
அரசியல் கூட்டங்களில் கலந்து அறிவார்ந்த கருத்துக்களை தெரிவித்தவரே!
பன்முக ஆளுமை கொண்ட பாரதியே மீண்டும் எழுந்து வா!


-முனைவர். கோ. சுதாதேவி, கரூர்