தமிழும் பாரதியும்...004

தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி

தமிழும் பாரதியும்...004

தமிழும் பாரதியும்...

பாரதியே!
தளை நீக்கி தமிழுக்கு
விடுதலை தந்தாய் என்பதாலோ
உனக்கு தளை பூட்டினார் அவர் ?
வசன ஆடை போர்த்தி
தனித்தமிழை உருவாக்கிய பேகன் நீ!
எண்ணங்களை எழுத்தாகினாய்!
கண்ணம்மா காதலியானாள் !
கண்ணன் சேவகன் ஆனான் !
ஆம்!
பாரதிக்கு சாரதியாய் !
அடிமையாக கண்ணீர்க் கடலில்
யாம் தத்தளிக்க எமக்கு
கரை காணப் போனவன் நீ!
கரை கண்டோம் நாங்கள்,
காலன் எனும் கடலுக்கு 
உன்னை இரையாக்கி விட்டு !
சுதந்திர தாகம் என்று மடியும் என்றுதானே
கேட்டாய் ?
காலனுக்கு கடுங்கோபம் ஏன்?
கணக்கு பார்த்தே வாழ்நாளைத் 
தள்ளும் கடைச்சாதியில் நான் ஒருவன் !
குசேலரிடம் அவல் இருந்தது !
எனக்கும் ஆவல் உண்டு !
மீண்டும் உனை இங்கு காண !
உனைத் தாக்கிய சோகத்தையெல்லாம்
உள்ளுக்குத் தள்ளி
வீரனாய் திமிர்ந்து வாழ்ந்த
உனைப் பார்க்கையில்
எழுச்சி எங்களுக்கும் வரும்; உணர்வு ஓங்கும்!
நம் நாடு எனும் எண்ணம் ஓங்கும்!
வருவாயா நீ ?

முனைவர் இரா.சீதா, இணைப் பேராசிரியர், புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு.
--------------------