தமிழும்... பாரதியும்... 003

தமிழ்ச் சுட விருது கவிதை போட்டி

தமிழும்... பாரதியும்... 003

தமிழும்...பாரதியும்...

தமிழ், தமிழ்,தமிழ்!
எதிலும் எங்கும்தமிழ்
கனவிலும் 
நனவிலும் தமிழ்
பேச்சிலும் எழுத்திலும்
மூச்சிலும் மௌனதிலும் தமிழே!!

எட்டையாபுரம் ஈன்ற  தவ புதல்வன்,
தமிழில் கவிதைத் தொகுக்க ,
புதுமை புகுத்தி நெஞ்சை கிள்ளி விட்ட
நவீன தமிழ் கவிதை யின் தகப்பன் பாரதி.

செல்லம்மாவின் செல்ல கணவர்,
செல்வம் இல்லையேனும்
செந்தமிழ் நாட்டு மொழி செல்வம் செவிக்கு உணவு என்றார்!!

மகாகவி அறிந்த மொழி பல ஆயினும்,
பாரதியின் உயிர் மொழி தமிழ் அன்றோ?
தமிழ் மூச்சானதால் பேச்சாகி நின்றான்!!

முண்டாசுக்குள் தமிழை சுருட்டி வைத்து, வேண்டபோதில் விரித்து எம்மை மகிழவைத்தவன்

மீசையை முறுக்கியும் நேசத்தை காட்ட முடயுமா?
ஓசை நயம் மிக்க தமிழில் "முடியும் "என்று சொன்ன மீசை கவிஞர்!!

"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ," போற்றினார் .
நான்காவது வேதத்தை தேன் தமிழில் மொழிபெயர்த்து
பாமரனுக்கும் புரிய வைத்தார் கீதையை!!

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,
அதைத் தொழுது படித்திடடி பாப்பா "
தமிழால் பெருமை பாரதிக்கா
 தமிழுக்கு புகழா பாரதியால்?
தாகம் தணிய தமிழ் ஆறுபெருகியது
மோகம் மடிய தமிழ் சங்கு முழங்கியது!
ஓங்கி,ஓங்க! ஓங்கவே!!

தமிழும், தமிழைப் பாடிய பாரதியின்
புகழும்,இந்த
வானும்  வையகமும்,
காற்றும் கடலும் உள்ள வரை நிலையாகும்!!

-திருமதி.விஜயலட்சுமி கண்ணன் ,

சென்னை.