தந்தை பெரியார்

பெரியார் பிறந்த தினம் கவிதை

தந்தை பெரியார்

தந்தை பெரியார்

ஈரோடு ஈன்றெடுத்த ஈடில்லா தலைவரவர்
ஈர்த்திடும் கொள்கை கொண்ட இதயமவர் !
சாதி சமயங்களை இறுதிவரை எதிர்த்தவர்
சாமானிய மனிதனை சமமாக பாவித்தவர் !

சீர்திருத்த கருத்தை சிந்தையில் விதைத்தவர்
சுயமரியாதை சுடரொளியை ஏற்றி வைத்தவர் !
தன்மான உணர்வுதனை உலகிற்கே ஊட்டியவர்
பகுத்தறிவு பாதையை படம்பிடித்து காட்டியவர் !

மூடர்களாய் ஆக்கிடும் மூடநம்பிக்கையை
முழுவதுமாய் ஒழித்திட அரும்பாடு பட்டவர் !
ஆணும் பெண்ணும் அகிலத்தில் சமமென்று
ஆதிக்க கலாசாரத்தை வேரோடு களைந்தவர் !

மகளிர்க்கு சமஉரிமை உண்டென அறிவுறுத்தி
மகத்துவம் பெற்ற சமத்துவத்தை போதித்தவர் !
அனைத்து பிரிவினரும் ஒன்றாய் வாழ்ந்திடவே
சமத்துவபுரம் அமைந்திட அடித்தளம் இட்டவர் !

கலப்பு திருமணம் விதைவைக்கு மறுமணம்
அனைவரும் அர்ச்சகர் சாதியற்ற சமுதாயம்
அனைத்தும் நடந்திட ஆணிவேராய் ஆனவர்
சமூகநீதி மலர்ந்திட மண்ணிலே வித்திட்டவர் !

நாற்றமடைந்த சமுதாயத்தை மாற்றிடவே
நாட்டைச் சுற்றிச்சுற்றி பயணம் செய்தவர் !
நலிவடைந்த போதிலு இப்ம் நாடு பொலிவுபெறடாக்டர்.சி.தங்க
இறுதிவரை உறுதியாய் போராடிய பெரியார் 

டாக்டர்.சி.தங்க லட்சுமி மேல அரியப்பபுரம் பெண்களுக்கான யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசி