தந்தை பெரியார்

பெரியார் பிறந்த தினம் கவிதை

தந்தை பெரியார்

தந்தை பெரியார்...:

பகுத்தறிவு பகலவன்
தந்தைப் பெரியார்...
தென்னாட்டு சாக்ரடீஸ்;சமுதாய மாற்றமே...
தமிழ்நாட்டில் எழுத்துரு 
புரட்சியின் நாயகனே..
ஈரோட்டின் வெண்தாடி 
வேந்தராக உலாவந்தார்...

நீதிக்கட்சி தோற்றம்;
திராவிடக் கட்சியானதே...
பெண்கல்வி வேண்டினார்; மூடநம்பிக்கை ஒழிப்பு...
இளம்பெண் திருமணம்
மறுப்பினிலே உறுதியாமே...
தமிழகத்தின் விடிவெள்ளி;
தமதுழைப்பு
முழுதாச்சே...

எளிமையின் வேந்தரவர்;
ஏழைகளின் தோழரவர்...
வலிமையுடன்
எதிர்ப்பாகும்;
கொண்டகொள்கை
பிடிப்பாகும்...
கைத்தடியே உடைமையாய்;
தடம்மாறாப்
பெருநடையாய்...
சமத்துவம், சகோதரத்துவம்,
செயலில் வேண்டியவராய்...

எவர்க்கும்
வழிகாட்டி;
அறிஞரண்ணா
ஆசானாய்...
விடுதலையோடு
சமுதாயத்தில்
சறுக்கல்கள்
தடுப்பவராய்...
சாதியப் பாதிப்பினில்,
அனைவர்க்கும் பொதுவாளராய்...
கல்வியினில்
யாவர்க்கும்
கிடைப்பதில்
பெருந்தூணாக...

இந்தியெதிர்ப்பு போராட்டம்
தமிழகம் முழுவதுமாக..
கோயில்கள் அனைவரின்
வழிப்பாடு;வெளிப்பாடு...
அரசியலில் எவர்க்கும்,
சரித்திரம் சொல்லும்..
மதுவிலக்கு, அனைத்திலும் பதவிகள் வேண்டுதலே...


        சா.சையத் முகமது
              கிருட்டிணகிரி