அஞ்சல் மீதான காதல்

உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9

அஞ்சலகம் மீதான காதல் 

தூரத்தில் நட்புகளும், உறவுகளும்...
உள்ளத்தில் அவ்வப்போது எழும் நினைவுகளும், நிஜங்களும்...
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக 
இவ்வளவு தொலைபேசி,
அலைபேசிகளின் பயன்பாடு இல்லையே. 
நினைவில் பிரியமானவர்கள் 
வரும் போதெல்லாம் 
கடிதங்கள் பேசிக்கொண்டன...
வெளிப்படையாக சொல்ல 
அஞ்சல் அட்டை போதுமானதாக இருந்தது. 
அளவாக சொல்ல 
நீல நிற கடிதம் நிரம்பியது...
அளவுக்கு அதிகமாக 
உணர்வுகள் பிரதிபலிக்க..
வெள்ளைத்தாள்கள் இறுக இடம் பெற்றது..
அஞ்சல்தலையுடன்...
அன்பையும், ஆசையையும் இன்பமாக   சொன்னது...
கடிதத்திற்காக காத்திருந்த நாட்கள்
தபால்காரரின் வருகைக்கு வழி மீது 
விழி வைத்து காத்திருந்தது...
தெருக்களில் நடந்து 
செல்லும் தருணங்களில்  ...
தெருவோரம் அஞ்சல்பெட்டிகள் 
ஏதோ ஒரு அன்பை 
வெளிக்காட்டியது...
பிரியமானவர்களின் கடிதத்தை 
என்னிடம் சேர்த்த 
அஞ்சலகம் மீதான காதல்...
இன்றும் பசுமையாக இருக்கின்றன...
காலம் மாறியதால் 
கடிதங்கள் குறைந்தன...
ஆனால் அஞ்சலகத்தில் 
மீதான அன்பும், ஆசையும்...
இன்றும் சிறகடித்து 
பறக்கிறது...
மீண்டும் ஒரு அன்பு மடல்..
எவரேனும் எழுதுவார்களா என்று 
நினைவலைகளில்....

இரா.காயத்ரி,ஆசிரியை 
ஊ.ஒ.ந.நி.பள்ளி,எலுமிச்சனஅள்ளி, தருமபுரி மாவட்டம்