கவிஞர் சுரதா

உவமை கவிஞர் சுரதா பிறந்த தினம் கவிதை

கவிஞர் சுரதா

உவமைக் கவிஞர் சுரதா..

செய்யுள் மரபு மாறாமல் எழுதி
மரபுக் கவிதை தொகுப்புகள் தந்து
உவமை தருவதில் தனிப் புகழீட்டி உவமை கவிஞரான சுரதா!

இயற்பெயராம் இராச கோபாலனை,
பாரதிதாசனிடம் கொண்ட பற்றினால்
சுப்பு ரத்தின தாசனாக்கி,
தபால் அட்டையில் பெயரெழுதிட 
இடப் பற்றாக்குறை காரணமாக,  
சு.ர.தா. என மாற்றி/ பெயரெழுத்தின் நடுவில் தேவையில்லாத ஆணிகள் 
எதற்கென புள்ளி ஆணிகளைப் 
பிடுங்கி பாரறிந்த கவியான சுரதா!

தமிழன்னை உளமதில் உலா வர
சீர்காழி அருணாசல தேசிகரிடம்
தமிழிலக்கணம் கற்றறிந்த ஞானி!
நூல் வெளியீட்டுக்கு துணைநிற்றல், பாடல்களின் படியெடுத்தல் ,
அச்சுப் பணிகளை கவனித்தல்
என பாவேந்தனின் கவிப்பணியில்
மாதம் 20 ரூபாய் சம்பளப் பணியாளர்!

சொல்லடா எனும் தலைப்பு கவியை *பொன்னி இதழில்*  வெளியிட்டு,
*தலைவன் இதழில்* சிறுகதைகள்
அளித்து துணையாசிரியர் பதவி,
*சிவாஜி இதழில்* கவிதைகள் தந்து,
*திருச்சி வானொலி* யில் கவிதை
ஒலிபரப்பு பணியாற்றி/அகிலத்தில்
பாரதிதாசனின் பரம்பரைக் கவியாக அறிமுகமான பாநயப் பாவலன்!

இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள்! பிரிந்தால் பொருளில்லை என்ற புகழ்பெற்ற வரிகளின் முகவரி!
மங்கையர்க்கரசி படத்தில் உரையாடல் 
எழுதி/ஆடி அடங்கும்  வாழ்க்கையடா என்ற யதார்த்த வரிகள் அளித்த 
சமூக விழிப்பு தரும் யதார்த்தவாதி!

சாவின் முத்தம் எனும் 
முதல் நூல் பிரவேசம் தொடர்ந்து,
வி.ஆர்.எம் செட்டியார் வெளியீட்டில் பட்டத்தரசி எனும் காவிய நூலின் அரங்கேற்றம் கண்ட எழுத்தாளர்!

புதுக்கவிஞர்களை அறிமுகம் செய்யும் 
*முரசொலி இதழில்* தொடர்ந்து கவிதைகள் அளித்த பிரம்மன்!
திரைப்பட நடிகைகளின் வாழ்க்கை கவிதைகளாக ஆனந்த விகடனில் எழுதப்பட்டு/சுவரும் சுண்ணாம்பும் என்ற நூல் வடிவில் யாத்த குயவன்!

அரிய நூல்களை இல்லத்தில் 
நூலகம் அமைத்து வரிசையாக்கி,
1955ல் *காவியம் இதழ்* துவங்கி,
உலகின் அரிய செய்திகளை தினம்
தினம் பட்டியலிட்டு பதிவிட்டவர்!

நாத்திகம்/ஆத்திகம் கடந்த நிலையில், மனித மாண்புகளை மட்டும் போற்றி, தனக்கென தனிநடை உருவாக்கி,
எழுத்துலகில் தனக்கென தனி நடை உருவாக்கிய சுய சிந்தனையாளர்!

பிறந்தோம் என்பது முகவுரை மறந்தோம் என்பது நித்திரை 
மரணம் என்பது முடிவுரை என்றும்,
வகுப்பார் அதுபோல் வாழ்ந்ததில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை என இரண்டு வரிகளில் 
வாழ்வியல் தத்துவத்தை எழுதியவர்!

"விழுதின் ஆலமரம் போல் 
விரிந்து பரவும் பான்மையில் எழுதுங்கள்!" என்று மற்றவர்களையும் எழுத ஊக்கப்படுத்தியவர்!

ஒழுக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ்விலே ஒழுக்கத்தை 
அனுதினமும் கடைப்பிடித்தவர்!
எண்ணங்களின் வெளிப்பாடே புதுக்கவிதை என்றும்,
பசிக்கு சோறு உரைநடை 
என்றும் வரையறை பகுத்தவர்!  

தமிழ் மொழியை தாய்ப்பாலாக,
 பிற மொழியை நாய்ப்பாலாக,
ஆடும் மயிலின் அடிகள் இரண்டை
ஈர நொச்சியின் இலைகளாக, 
ஆதிமந்தியை வரலாற்றுப் 
பேரழகியாக எடுத்துரைத்து,
இடுகாட்டிற்கு வர யாரும் விரும்புவதில்லை/வந்தபின் யாரும் திரும்பவதில்லை என நிஜத்தின் வெளிப்பாடாக்கி/பளிங்கு போல்
வரி கொடுத்து வெளிப்படுத்தியவர்!

கவிதை என்பது வரப்பிரசாதமல்ல 
பழகும் தோறும்/படிக்கும் தோறும்
தேர்ச்சி பெறுவதென புதுமை
இலக்கணம் அளித்தவர்!  
ஈர உடை போல் நான் அவர் உடலில் ஒட்டிக் கொள்வேன் என காமத்துப் பெண்ணை புகழ்ந்து/மனங்களில் ஒட்டியதால் வசியக் கவிஞர்
 *வாலி* யால் "அவன் உரைக்காத உவமை இல்லை/ அவனுக்குத்தான் உவமை இல்லை!" என்றுரையானவர்!  

அலைகளை அடுக்கி வைத்து அனுப்புதல் போல வானில் கலையாத நடைப்பயிலும் *மேகம்*  என்றும், வழிநடை செய்பவருக்கு வாய்மொழியே நல் வாகனமான *உலகம்*  என்றும்,
தண்ணீரின் ஏப்பமே *அலைகள்*  என்றும் கவி படைக்க,
மற்றொரு பாரதி பிறந்து விட்டான் என்று *வ.ராமசாமி* வரியானவர்!

திரை உலகிற்கு *கு.சா.கிருட்டிண  மூர்த்தி*  அறிமுகம் செய்ய, 
கண்ணில் வந்த மின்னல் போல் காணுதே என்றும்/அமுதம் தேனும் எதற்கு?என்றும் உவமைகளால் 
தமிழர் உள்ளத்தை தமிழன்னை இதயத்தைக் கொள்ளை கொண்டவர்!


படகு/கப்பல்/விமானம் என
வினோதமான கவியரங்கங்களாக
நிகழ்த்த தமிழக அரசால்
பாரதிதாசன் விருதுடன்
கலை மாமணி விருதையும்,
குன்றக்குடிகளாரால் 
கவி அரசர் பட்டமும்,
ஒரு லட்சம் பணத்துடன் 
ராஜராஜன் விருதையும் பெற்று,
1987ல் மலேசிய தமிழ் பாராட்டிற்க்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்!

நாட்டுடையாமை ஆக்கப்பட்ட நூல்களுடன் 10 லட்சம் பரிசும் 
பெற்ற சிறப்புக்குரிய சுரதா,
*கவிஞர் திலகமென* 
சேலம் கவிஞர் மன்றம்,
*உவமை கவிஞர்* என ஜெகசிற்பி,
*தன்மானக் கவிஞரென* 
மூவேந்தர்  முத்தமிழ் மன்றம்,
*கவிமன்னர்* என மறைந்த 
கலைஞர் கருணாநிதியால்
புகழப்பட்ட  மகுடமேந்திய
சுரதாவை வாழ்த்துவோமே!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.