தமிழரின் பெருமைகள்...011

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள்...011

தமிழரின் பெருமை ..!

முன்னுரை:

 ‌      இந்த  கட்டுரையில்     
தமிழரின்  பெருமை எந்த  அளவு உயர்ந்தது   ‌என்றும் தமிழர்கள் நடை, உடை, பாவணை, பண்பாடு, நாகரிகம், கலை, வீரம், போன்றவற்றில் எவ்வாறு  சிறந்து விளங்குகின்றான் என்று இக்கட்டுரையில் காண்போம்!

தமிழன்  என்று சொல்லடா!
தலை  நிமிர்ந்து நில்லுடா!

 

கலை

        ‌‌ தமிழன் கலைகளில்  சிறந்து விளங்கினான். நாடகம், பாடல், தெருக்கூத்து, மேடை நாடகம் போன்றவற்றில் தமிழர்களின் பெருமையை எடுத்துக்கூறினார். தமிழ் நம்  தாய்மொழி மட்டுமல்லாது தொன்மையான, பழமையான, செம்மொழி ஆகும். கலைகளை போற்றிப்பாதுகாப்பதில்  சிறந்தவன் தமிழனே!


வந்தாரை வரவேற்கும் தமிழன்

      தமிழன்  எப்போதும் தனது  வீடு தேடி எதிரியே  வந்தாலும் அவனை  வரவேற்று உபசரிப்பதில் சிறந்தவன். தமிழர்கள் வெளியூர், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும்  தனது பாரம்பரியத்தையும், தனது  நாட்டு  பழக்க வழக்கங்களையும் கடை   பிடிப்பதில் சிறந்தவன். எந்த நாட்டில்  இருந்தாலும் தமிழர்களை  தனியே பிரித்து  காட்டும்  சக்தி உடையவன், தமிழர்களின் பண்புகள், நற்குணங்கள் அவனை  விட்டு  நீ ங்காது.

கல்வி 

 தமிழன்  எப்போதும் கல்விக்கு  முதல்  இடம் கொடுப்பான்.


"ஒழுக்கம் விழுப்பம் தரலான்  ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

கல்வி  கற்கும்  போதே ஒழுக்கத்தைப் பற்றியும்  சொல்லி கொடுத்து வளர்ப்பார்கள். பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளுக்காக உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வார்கள்.


உடை

     எல்லா நாட்டவர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் அழகான உடை அணிவார்கள்.புடவை,வேட்டி சட்டை, பாவாடை தாவணி போன்ற ஆடைகள் அணிவார்கள்.மற்றவர்கள் முகம் சுளிக்காமல் பார்த்து கொள்வார்கள்.


"கந்தையானாலும்கசக்கிகட்டு
கூழானாலும் குளித்து குடி".

     போன்ற பழமொழிகளுக்கு ஏற்ப தனது ஆடை அலங்காரம் இருக்கும்.
ஏழ்மையை இகழேல் என்னும் கருத்துக்கு ஏற்ப தங்களது வறுமையை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள்.தனக்கு சாப்பிட இல்லையென்றாலும் மற்றவர்களுக்கு கொடுத்து நானும் உண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவன் தமிழன்.


வீர விளையாட்டுகள் 

      தமிழர்கள் வீரத்திலும் சிறந்தவர்கள்."வீண் வம்புக்கு போக கூடாது வந்த சண்டையை விடக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்,அதே போன்று செயலிலும் காட்டுவார்கள்.வீர விளையாட்டுகளான சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு,கபடி, சேவல் சண்டை,குத்து விளையாட்டு,எறி பந்து, சறுக்கு மரம் ஏறுதல்,கயிறு இழுத்தல்,பானை உடைத்தல் போன்ற வீர விளையாட்டுகள் விளையாடி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் தமிழர்கள்.இவ்வாறு வீரம் ஆனாலும் விளையாட்டு துறையானாலும் தமிழனை வெல்ல எவருமே இவர்.

கலை மற்றும் அறிவியல் 

        கலைத்துறையில் இன்றைய தமிழர்கள் முந்தைய காலத்தை விட மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.தனது‌ பிள்ளைகளுக்கு பரதநாட்டியம்,குச்சுப்புடி,கும்மியாட்டம்,கரகாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,மயிலாட்டம்,பொய்கால் குதிரையாட்டம்,புலியாட்டம், காவடியாட்டம்     போன்ற கலைகளில் சிறந்து வாழ்பவர்கள் தமிழர்கள்.

கட்டிடக்கலை

    தஞ்சை பெரிய கோயில் கட்டியதும் தமிழனே !கல்லணை கட்டியதும்,நம் தமிழன்தான் .இதேபோன்று கோயில் கள் ',ஆலயங்கள் , மசூதிகள் போன்றவை கடவுளுக்காக‌ காட்டிக்கொடுக்கும் தமிழன் தான்.கன்னியாகுமாரி‌ககடல்தனிலே  திருவள்ளுவருக்காக. 133 அடி‌உயரத்தில்‌ சிலையை தீட்டிய வரும் தமிழன் தான்.இதே போன்று தமிழனின் பெருமையை சொல்லி க்கொண்டே போகலாம் .


உணவு

              உணவு பழக்கவழக்கங்களை  நாம்‌ எடுத்து பார்க்கும் போது விதவிதமான  உணவுகள் , பானங்கள் ,மாமிசங்கள்  போன்றவற்றை வித விதமாக சமைத்து அனைத்து நாட்டு மக்களும் விரும்பும் விதத்தில்  சமைத்து ருசித்து சாப்பிட வைப்பவர்களின் தமிழர்களை தாண்டி வேறு கால் பதிக்க ‌ முடியாது.தமிழர் விருந்தினரை உபசரிப்பதில்  மிகவும் சிறந்தவர் கள்  வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு தலை வாழை இலை போட்டு இனிப்பு , துவர்ப்பு , காரம் போன்ற உணவு வகைகளை சமைத்து அவர்கள் பக்கத்தில் இருந்து உணவு பரிமாறி‌ அவர்கள் மனம் கோணாதவாறு நடந்து கொள்வார்கள் . இவ்வாறு தமிழனின் பெருமை மைக் கூறிக் கொண்டே போகலாம்


அரசியல் 

    இன்றைய  கால கட்டத்திற்கு ஏற்ப தமிழர்கள் அரசியல் துறையில் சிறந்து விளங்குகின்றார்கள் ,  மாணவர்கள் படிக்கும் போது அரசியலும் ஒரு பாடமாக கொண்டு நாளிதழ்களில் வரும்  நாட்டு  நடப்புகளை அறிந்து  கொள்வதில்  ஆர்வம்  காட்டி வருகின்றனர்.
  
       "களவும்  கற்று  மற என்னும்  பழமொழிக்கேற்ப நமது  வீரப்பன் கள்வன்  ஆனாலும் ஒரு தமிழன் என்பதில்   ஐயமில்லை. வீரப்பன் தமிழனாக பிறந்து தமிழ்மக்களுக்கு உதவியன். ஒரு புறம் அரசுக்கு விரோதமான. செயல் என்றாலும்  மறுபுறம் மக்களுக்கு  உதவிவனாக இருந்தான்  .எனவே தமிழர்களின் மனதில் இடம்  பிடித்தான்.


சுற்றுலா தலங்கள்

  கன்னியாகுமரியில்  விவேகானந்தர்சிலை  ,காந்தி மண்டபம்  ,திருவள்ளூர் சிலை ,குற்றாலம்  ,மணிமுத்தாறு, அருவிக்கரை கொடைக்கானல் ஊட்டி  ,மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோவில்  மெரீனாகடற்கரை இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.

 அறிவியல்  

         டாக்டர்  A P J. அப்துல்கலாம்  தமிழனின் பெ.ருமைக்கு ஒரு எடுத்துக்காட்டு .வளர்ந்து வரும் மாணவர்க்கும் இனி வரும் தலை முறைக்கும் ஓர் எடுத்து காட்டு.

உழைப்பு

       தமிழன் என்ற பெருமையை சேர்ப்பது அவனின் உழைப்பு. தன் இரத்ததை வேர்வையாக சிந்தி உழைப்பவன் தமிழன். எந்த வேலையாக இருந்தாலும்  முழு மனதுடன்  செய்து  முடிப்பவன் தமிழன்.  இவ்வாறு தமிழனின் பெ.ருமையைக் கூறிக்கொண்டே போகலாம்.

முடிவுரை 

      "ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம்"  என்ற பழமொழிக்கேற்ப தமிழன் எங்கு கால்  பதித்தாலும்  தமிழன்டா! என்று சொல்லும் அளவுக்கு தமிழனின் பெருமையை நம்மால்  கூற  முடியும். உணர்வுக்கும் உயிருக்கும் மதிப்பு கொடுத்து உறவு முறைக்கு  மரியாதை கொடுப்பவன் தமிழன் தான்.இவ்வாறு  தமிழனின் பெருமையை  நாம் ஒவ்வொரு பேச்சு , செயல், போன்றவற்றிலும் நம்மால் உணர முடியும் காண முடியும்.

வாழ்க தமிழ்!!!

வளர்க நம் தமிழரின் பெருமை!!!

- பெஹாஷினி.தே.ஆ.
இளங்கலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்.
எஸ்.என். எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.