பார தீ ... 32

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பார தீ ... 32

சுப்பிரமணியம், பாரதியாய் மாற்றம்!

எட்டயபுரத்தில் சின்னச்சாமி இலக்குமிக்கு! மகனாய்!
ஏழு வயதில் கவி பாடுவதில் ஏற்றம்!

எட்டயபுரத்து எட்டப்ப நாயக்கரால்!சுப்பிரமணி, என்றவர் பாரதியாய்! மாற்றம்!

எண்ணற்ற நூல்கள் படைப்பாளராய்!
தமிழ் ஆசிரியராய் பணி தொடங்கி!
ஏற்றுமிகு இந்திய சுதந்திர வேட்கையை இந்திய பத்திரிக்கை வழியாய்!

இந்தியாவில்,  தமிழகத்தில் விடுதலை வேட்கை தீயை ! தமிழ் கவிதை வரிங்களால் மூட்டி!

இந்தியத் தாயின் அடிமை விலங்கை ஒடிக்க வித்திட்ட மகா கவியாய்!

பெண் விடுதலௌயே!! நாட்டின் விடுதலை என பேசி! முழங்கிய ரத சாரதியாய்!

பெண்ணடிமையை அறவே !ஒழிக்க பாடுபட்டவர்!
ஜாதிகளை வெறுத்தொழிக்க நினைத்தவர்!

 தான் உயர்ந்த ஜாதி என்ற வர்க்கத்தில் பிறந்தாலும்!
காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி !எனஒன்றென பாடியவர்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று! குழந்தைகள் மனதிலே கோடு கிழித்த முதல் கவிஞர்!

இந்தியாவில்! இவர்தமிழ் இலக்கியநூலே முதல் பொதுவுடமை ஆக்கப்பட்டது!!

விடுதலை வேட்கை நேரத்தில்! அச்சம் மில்லை !அச்சமில்லை !அச்சம் என்பதில்லையே! உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும்!
 என்று அச்சம்தவிர்த்த ஆசாண்!!

பால கங்காதர திலகரை அரசியல் குருவாக ஏற்று!
நிவேதிதாவை ஞான குருவாக ஏற்று!

படைப்புக்களில் சிறந்தது !கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதமென ஏற்று!

பல புனைப் பெயர்களை தாங்கியவர் !
நீடு துயில் நீங்க பாடிவந்த நிலா அவர் !
சிந்துக்குத் தந்தை! முண்டாசு கவிஞன்
செந்தமிழ் தேனி இன்னும் பல,,!

செல்லம்மாளை மணந்து! செல்லமாகவே! அவள் தோள்களில் கைஇட்டு தெருவில் நடந்து!

பெண் அடிமை பார்க்கின்ற நேரத்தில்! பெண்ணிற்கு சுதந்திரம் கொடுக்க! தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்!!

புதிய கோணங்கி பாடியவர்!
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் !போவான்! ஐயோ !என்று போவான்! என, படித்தவரை ஒழுக்கமாக வாழ வழி சொன்னவர்!

பார தீ!
பாரதத்தில் பாமர இளைஞர்கள் மத்தியில்!விடுதலை வேட்கை வித்தை பற்ற வைத்த தீ !!

வாழ்ந்த காலம், வளர்ந்த காலம் 39 ஆண்டுகளே!

வாழ்க்கையை இளமையில் முடித்தாலும்!
தேடிச் சோறு நிதம் திண்று !சின்னஞ்சிறு கதைகள் பேசி! திரியும் சில வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ!

இந்த வீர வரிகளை இந்தியாவின் இளைஞர்கள்!
இன்றும் படிக்க உணர்ச்சி பொங்கி! வீரம் வருகிறது!

சாதாரண சுப்பிரமணி!! சாதனை சுப்பிரமணியம்மாய்! பாரதியாராய்! தேசிய கவியாய் மாறியது! தமிழ் மீது கொண்ட பற்றும்! தமிழர் மீது கொண்ட தனியாத ஆசையும் ! அவர் படைத்த வீர உரைநடைகளும்! கவிதைகளுமே! பாரதியாராய் மாற்றியது!

ஏழ்மையிலும் இரக்க குணம் உடையவரை!உலக நாடே! இன்றும் அவரை போற்றியது!

கவிதை மாணிக்கம்.