என் தேசத்தின் நேசக்கவி..! 026

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

என் தேசத்தின் நேசக்கவி..! 026

என் தேசத்தின் நேசக்கவி..

இளமையில் கவிதை இயற்றியவரே!
இயற்கையை அதிகம் நேசித்தவரே!
இறையியல் சிந்தனை உடையவரே!
இன்பத்தமிழின் கவியூற்றுக் கவிஞரே!
இதழியல் பணியில் சிறந்தவரே!
இல்லாமை நிலையைச் சாடியவரே!
செல்லமாவின் அன்புமிகு  கணவரே!
செக்கிழுத்த வ.உ.சியின் உயிர்த்தோழரே!
 திலகரின் அரசியல் சீடரே!
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பக்தரே!
சாதிய வேறுபாட்டைக் களைந்தவரே!
சமதர்ம நிலையைக் கடைப்பிடித்தவரே!
புதிய ஆத்திச்சூடி கண்டவரே!
புதுமைப் பெண்களை உருவாக்கியவரே!
பட்டங்கள் பற்பல பெற்றவரே!
பன்நோக்குப் பார்வை   கொண்டவரே!
பல்சுவைப் பாடல்கள் பாடியவரே!
பாரத விடுதலைக்கு முழங்கியவரே!
பார் போற்றும் தேசத்தின் மகாகவிஞரே!
பாமாலை சூட்டி இன்னாளில் மகிழ்கிறோம்.


படைப்பாக்கம்
கவிஞர் ச.குமார்
சிவகங்கை -630561