இனிதொரு தொடக்கம் நால்வராய்....

நால்வர்

இனிதொரு தொடக்கம் நால்வராய்....

இனிதொரு தொடக்கம் நால்வராய்..

இனியவள் கைகோர்த்து 
இனிதாய் இன்சொல் 
இன்னொரு இன்பம் 
இவ்வீட்டில் இயங்க 
ஈரைந்து திங்கள் 
இடையற்று இசைந்து செல்ல 
இடையில் இடைப்பிணி
இச்சுழலும் உலகில் 
இரவில் இரவல் பயணம் 
இந்திரன் சாரதியாய் மாந்தர்
இறைவிகள் புடைசூழ் 
இரைச்சலில் இனியவள் 
இக்கணம் போய்
வைகறை வாய்த்தல் இனிதென கூற 
இல்லம் விரைந்து 
இலகுவாய் இசைக்க 
இடைஞ்சலாய் காலசக்கரம் சுழல 
இதோ !
இதிகாசம் இயற்ற 
இயலாமையை இடைநிறுத்தி 
இன்னும் இன்னும் என 
இசையூட்டி இனியவளே 
இடைகுறுக்கி வலியில் வாட 
இடைவிடாது இம்முயற்சியென 
இறைவிகளும் இணக்கமாய் 
இயந்திர உலகில் 
இல்லாள் இனிதாய் 
இல்லறம் இன்புற - ஈன்றாள் 
எங்கள் இறைவியை "நிர்விகல்பா"
- ©️ஹரி