அன்பின் தீபாவளி

தீபாவளி கவிதை

அன்பின் தீபாவளி

அன்பின் தீபாவளி:

கார்மேக தூறலும் 
புல்வெளியில் பனித்துளியுமாய்  
காரிருளை போக்க
புத்தாடை பளிச்சிட 
திதிப்புகள் தித்திக்க 
புதுவெடிகள் படபடக்க 
பொன்னான நன்னாளை
பொலிவோடு வரவேற்று
சுயநல நரகாசுரனை
சுயத்தில் வீழ்த்தி
அப்பழுக்கற்ற அன்பை
அறியாதவனிடமும் பரிமாறி
அழகாய் இணைந்து
அவனியில் கொண்டாடுவோம் 
அன்பின் தீபாவளியை.
  
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 - ஹரி