அறிவர் அம்பேத்கர் 026

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவர் அம்பேத்கர் 026

அறிவர் அம்பேத்கர் 

அகிலமே நினைத்து கவிதை எழுதியது
வாழ்ந்த வாழ்க்கையில் சாதனை பிறந்தது
பாராட்டு மழையில் உள்ளம் குளிர்ந்தது
அறிவு ஆற்றலும் தைரியமாக நின்றது

சொதனையைத் தாண்டி வெற்றி அடைந்து
கனவுகள் கண்ணில் கலையாமல் இருந்தது
கண்ணில் தூக்கம் மறைந்து போனாது
உலகமே வியந்து விருது வழங்கியது

கல்வியென்னும் சிகரத்தில் ஏறி முடித்து
பாமர குடும்பத்தில் மலர்ந்து வந்து
மனிதம் குலத்தில் வைரமாய் மின்னும்
அரசியல் தந்தை சமுக நாயகனே..

சாதியென்னும் செடியை வெட்டி எறிந்து
மக்கள் மனதில் நல்லதைப் புகுதி
வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாகி தந்த
பாரத ரத்ன மக்களின் நாயகனே

காலத்தில் அழியாத தியாகம் தலைவனாய்
நூலகமே நிமிர்ந்து பார்க்கும் அறிவுபெட்டகமாய்
முன்னேற்றப் பாதையை காட்டி கொடுத்த
மாமேதை அறிவர் அம்பேத்கர் மாணிக்கமே

இரா.சி.மோகனதாஸ்