காதலர் தினம்... 033

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதலர் தினம்... 033

காதலர் தினம்

அன்பின் மறு பெயர் காதலோ?
அழகே அமுதே அதுவும் நீ தானோ?

கண் முன் நின்று கல கல என சிரித்த செவ்வந்தி பூவே,
 எண்ணில்லா கதைகள் பேசி காதலை சொல்ல வந்த கிளியே!!


பெண்ணே, உன்னை கண்ட நாள் முதல் கனவிலும் நனவிலும் தென்றலாய் வருகிராய்,
கண்ணே மணியே என்று கொஞ்சவோ
என்னில் உன்னை பார் என்று கெஞ்சவோ?

ராமன் தேடிய சீதை யும், 
கண்ணன் களி யாடிய ராதையும்
முக்கண்ணன் கைபிடித்து 
உமையும், என் காதில் கூறுவது
எனக்கு நீயும் உனக்கு நானும் என்றே!!

காலம் காலமாக பாடி வரும் காதல் ராகம்,இன்று அவள்,மேளதாளம் கொட்ட சொல்லி விட்டாள் .
இனி தொடர்ந்து காதல் ராகம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பாலோடு தேன் கலந்து, அன்போடு மனம் திறந்து, காதல் வசமாகிய நாம் காலங்கள் உள்ள வரை இன்று போல் என்றும் வாழ்ந்து காட்டுவோம்.

காதல் கொண்ட நெஞ்சங்கள் இனிதே வளமுடன் வாழ்க!
காதலர் தினம் பல்லாண்டு ,வாழ்க வாழ்கவே!!

- விஜய லட்சுமி கண்ணன், சென்னை.