சுதந்திர காற்றை சுவாசிப்போம்...16

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...16

சுதந்திர காற்றை சுவாசிப்போம்

டம் டம் டம் என
கொட்டியது போர் முரசம்
பரங்கியரின் வியாபார படையை எதிர்க்க

கொல் கொல் கொல்
வெள்ளையனை என்று
கொதித்தன இளம் இரத்தம்

பொரு  பொரு பொரு என
அகிம்சை உபதேசம் சொன்னது
மூர்த்தோர் மொழி

விடுதலை விடுதலை என 
ஜெய பேரிகை கொட்டியது
தீன் தமிழ் முழக்கம்


நிழலாய் வந்த வணிகபடையோ
மறைந்தே போனது ஓர் 
நல் இரவில்


சிவப்பு சாயத்தில் 
ஊரிய பாரத தாய்
பசும்புடவை உடுத்தாள்
நாம்
சுதந்திர காற்றை சுவாசிக்க என்று

த.ரக்ஷனா, 
தூத்துக்குடி