சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் 5

சுதந்திர தினம் கவிதை

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்  5

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...
பாரத அன்னைக்கு நவரத்தின மாலை:
சீர்மிகு " " நல்வையிரம் " போன்று
சிறந்த நல்லறிவு பெற்றவர் இந்தியர்கள்

மூன்று பக்கமும் "நீலம்" போர்த்திய ஆழ்கடல் அற்புதம்

பன்மொழி, கலாச்சாரம் படைத்த "முத்து" போன்ற தேசம்

தேசம் காக்கும் இராணுவ வீரர்களின் "பவளம்"போன்ற உறுதியான அஞ்சாநெஞ்சம்

உலகுக்கே உணவளிக்கும் பசுமை புரட்சி செய்த "‌மரகதப்பச்சை"

"மாணிக்கம்"போன்ற மின்னும் புராண இதிகாசங்கள், உபநிடதங்கள்

விடுதலைப் போராட்டத்தில் பூக்களாய் உதிர்ந்து போன "புஷ்பரகங்கள்" தியாகிகள்

மகாத்மா வரிசையில் எண்ணற்ற தலைவர்கள் "வைடூரியங்களாக'

கோபுரமாய் உயர்ந்த வராலாற்று சிற்பங்கள் "கோமேதகமாக"

அனைத்து வளங்களையும் அணிய பெற்ற அன்னைக்கு இவ்நவரத்தின மாலையை அணிந்து மகிழ்வோம்...

கவிப்புயல் தி.கோமதி
வேளச்சேரி
சென்னை.