சுதந்திர காற்றை சுவாசிப்போம்...15

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...15

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 

கருவேலங்காட்டுக்குள் 
கூட்டுப்பலாத்காரம் செய்த 
வடநாய்கள்
அழுகி கிடக்கும் 
பெண் உடலின் 
நாற்றத்தை ஏந்தி நிற்கும்  
காற்றை சுவாசித்து 
ருசிப்பது தான்
சுதந்திரம் 
ஆகா..! என்னா..? சுதந்திரம்
கற்பழிப்பு

மீனவனின்
மீன்பிடியில்
வலையில் 
எத்தனை மீன்கள் என்பதை மறந்து
மார்பில் எத்தனை 
தோட்டாக்களென்றே தேட ஆரம்பிப்போம்
மறுநாள் அண்டைநாடு 
நட்பு நாடாகும் 
மீனவன் வீட்டில் 
எழவு எதார்த்தமாகும்..!!!
ஆகா..! என்னா..? சுதந்திரம்
 மீனவனின் உயிர்

மாணவனின் 
மருத்துவக் கனவை கனவில் ஒழியச்செய்வோம் 
சம உரிமையென்று கேட்டால் தேசதுரோகம் வழக்குத்தொடுப்போம் 
ஆகா..! என்னா..? சுதந்திரம்
மாணவனின் கல்வி

கட்டில் சுகத்தை 
தொலையா காட்சியாக 
தொலைக்காட்சி மனதில் 
நிறுத்தும் போது கொஞ்சம் 
சிரமம் தான் பேருந்தில் 
அவளை உரசாமல் பயணிப்பதும்  
கேட்டால் இது சுதந்திரமென்பான் 
பேருந்தின் ஜன்னல் காற்றை மறைத்து 
அவனின் இச்சைக் காற்றை சுதந்திரமாய் உலவ விடுகிறான்...!!!
ஆகா..! என்னா..? சுதந்திரம்
மூன்றுவயது குழந்தை வன்புணர்வு

வாயிருப்பவன்
எல்லாம்
வாய்க்கால் மூடுவான் கேட்டால் 
இது வளரும் நாடென்பான் 
ஆகா என்னா சுதந்திரம்
காடுகளை அழித்தல்

மதமென்று 
அவனை திட்டு 
சாதி என்று சப்ப கூப்பாடு போட்டு 
இன்னும் சா தீயை மூட்டுவது யாரோ தெரியவில்லை…! 

காலம் மாறி 
கலகம் மாறி 
கழகம் மாறி 
சாதி குரலை தூக்கி கூறி 
பழுதானது சுதந்திர காற்று பஞ்சாயத்து…!!!
ஆகா என்னா சுதந்திரம்
நீ என்னா சாதி   

 - மு.கருணாசபா ரெத்தினம்
          நாகை.