சுதந்திர காற்றை சுவாசிப்போம்...17.

சுதந்திர தின கவிதைகள்

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...17.

கற்காலம் விட்டு கணினி காலம் நுழைந்தோம் சுதந்திர சுவாசத்தோடு திராவகம் தவிர்த்து திராவிடம் போற்றுவோம் சுதந்திர சுவாசத்தோடு. 
 ஏட்டுறுரிமை பெற்று சுதந்திரம் சுவாசித்தோம் ஆங்கிலேயனிடம் இன்னும் திருமண பந்தத்தில் நாம் சுவாசிக்கவில்லை சுதந்திரம் மன பொருத்தம் தேட

கரண்டி விட்டு கணினி கற்றோம் விண்கலம் படைத்தோம் விண்ணுலகம் சென்றோம் இன்னும் திராவகத்தில் திளைக்கிறோம். 
 ஆணவக்கொலை விடுத்து சாதி மத மற்ற சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று
 மனச்சிதைவில்லா சுதந்திர சுவாசம் கொடுப்போம் மழலைகளுக்கு. 

மண்ணைக் காத்து குடியுரிமை பெற்றோம் சுதந்திர சுவாசத்தோடு ரசாயனம் தவிர்த்து மண்ணுரிமை காப்போம் மண்ணின் சுதந்திர சுவாசத்திற்காய். 

கரண்டிக்கணை வெட்டு கணிப்பொறி கண்டு சுதந்திரம் சுவாசித்தோம். 

செல்லிடப்பேசி எடுத்தெறிந்து செம்மையாய் சுதந்திரம் சுவாசிப்போம்

பணத்தால் பறிக்கப்படும் கருத்துரிமை வேண்டும் சுவாசக்காற்றாய் என்றும் 

அதிகாரத்தால் அலைக்கழிக்கப்படும் அடிப்படை உரிமை இன்னும் வேண்டும் சுதந்திரம் சுவாசிப்போம் சுவாசிப்போம் சுவாசிப்போம்....

எட். பிரியதர்ஷினி, 
உதவி பேராசிரியை, 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி-11