தமிழும் பாரதியும்..! 043

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்..!  043

தமிழும் பாரதியும்:

எட்டையப் புரத்தானே//
எழுத்தான்ட எழிலோனே//
நீ காலத்தால் அழியாத//
கவிமனியின் கலைநயமே//
கன்னித் தமிழ் பெற்றெடுத்த//
காவியத்தின் தலைமகனே//

சுதந்திரத்தின் வேட்கையினால்//
சுயமரியாதைக் காத்தவனே//
முருக்கு மீசை முன்டாசும்//
முத்தமிழால் தறித்தவனே//
முக்கடலும் சங்கமிக்கும்//
முத்தானத் தமிழ்மகனே//

மூத்த மொழித் தமிழ் மொழியை//
முதற் மூச்சாய்க் கொண்டவனே//
கன்னல் தமிழ்க் கற்க்கன்டே//
காவியத்தின் சொற்க்சொற்க் உள்ள கொன்டே//
கனிச்சுவையாய்தமிழுக்கு//
கவி மகுடம் சூட்டிவிட்டாய்//

உன் நாவினால் மனக்கும் தமிழ்//
நாடெல்லாம் பரவச் செய்து//
நல்லத் தமிழ் தந்திட்டாய்//
தமிழ்மனக்கும் பாரினிலே//
இனி என்ன வேன்டும் தமிழுக்கு//
உன் உள்ளம் வேன்டும் உலகிற்கு//


-புலவர்.சோனா.மதியழகன்
குறிச்சி.நாகப்பட்டினம் மாவட்டம்.