முண்டாசு கவிஞன் பாரதி...! 055

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

முண்டாசு கவிஞன் பாரதி...! 055

முண்டாசுக் கவி பாரதி

எட்டயபுரத்தின் எல்லைச்சாமியே!!

 ஆங்கில ஏகாதிபத்தியத்தின் எதிரியே!!

 முண்டாசு கட்டிய மகாகவியே !!

முறுக்கு மீசை முறுக்கிய முப்பாவலனே!!

பாரதத் தாயின் தவப்புதல்வனே!!

பாரதத்தின் சிம்மக் குரலோனே !!

பாட்டு திறத்தால் பாரத மக்களை!!

பண்படுத்திய பாவலனே!!

 பாட்டுக்குத் தலைவனே!!

 பாப்பாவின் தோழனே!!

 கண்ணம்மாவின் காதலனே!!

 கண்ணனின் கவிதையே!!

 குயிலுக்கு கவி தந்தவனே !!

குருவிக்கு இறை தந்தவனே !!

கும்மிக்கு இசை தந்தவனே!!

குழந்தைக்கு பாடல் தந்தவனே!!

 பெண்ணிற்கு குரல் தந்தவனே!!

 வலிமைக்கு தோள் தந்தவனே !!

காக்கைச்சிறகிற்கு சந்தம் தந்தவனே!!

 புரட்சிக்கு புயல் தந்தவனே!!

 அச்சத்தினை துரத்தும் அச்சாணியே!!

 விடுதலைக் கனியின் வித்தே!!

 சுதந்திரத் தாயின் சுந்தரனே!!

 வீரத்தின் விளை நிலமே !!

வீரர்களின் விடிவெள்ளியே!!

பாரதத்தின் பாட்டுக்கவியே!!
 
பாழ் பட்டுக் கிடக்கிறது பாரதமே!! 

பண்படுத்த வேண்டும் ஐயா!!

 உந்தன் பாட்டுக்கு மனம் ஏங்குது ஐயா!!

 எப்போது பிறப்பாய் இந்த பாரதத்தில்!!

- மா. மகேஸ்வரி ஆசிரியை ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம்