மலைத்தொடர்

சிறுகதை

மலைத்தொடர்

மலைத்தொடர்
          வேலங்குடி என்ற ஊர் மலை அடிவாரத்தில் இருந்தது.அங்கு சுற்றிலும் மலை தான் நடுவில் ஊர் இருந்தது. அங்கு வாழும் மக்கள் மிகவும் அடி மட்ட நிலையிலேயே வாழ்ந்தனர் .  அவர்கள் எந்த வசதியையும் அனுபவிக்கவில்லை. அவர்கள் ஆதி கால மக்கள் வாழ்க்கை  என்னமுறையில் வாழ்ந்தார்களோ அப்படி வாழ்க்கையை வாழ்ந்தனர் எந்த ஒரு வசதியுமில்லை. 
          உண்ண உணவு கூட சில நேரங்களில் இருக்காது மலையை அரணாக்க் கொண்டதால் மலையிலிழுந்து விழும் அருவி நீரைக் கொட்டியது அழகோ அழகு. மூலிகைச் செடிகள் மரங்கள் வானுயர்ந்த நிலையில் வளங்கள் பலவற்றைக் கொடுத்த இயற்கை அவர்கள் வாழ்க்கைக்கு வாழ அத்தியாவசிய வசதிகள் செய்யவில்லையே என்ற வருத்தம் எல்லோரின் மனதிலும் உண்டு. ஏனென்றால் அவசர காரியத்துக்கு ஏதாவது வாங்க வேண்டுமென்றால்கூட மலையைக் கடந்தாக வேண்டும். மலையை வயதானவர்களோ சிறுவர்களோ ஏற இயலாது. இளைஞர்களும் பலம் பொருந்தியவர்களும் தான் ஏற முடியும்
           இதனால் பலர் பல துன்பம். பட்டவாறிருந்தனர். இதனைக. கண்ணுற்ற இனியன் மிகவும் ஆழமாகச் சிந்தித்தான் அவனது சிந்தனைக்கு காரணம்  அங்கு நடக்கும் மக்களின் துன்பங்கள் தான் காரணம். உடல் நலமின்மை பிரசவம் மாரடைப்பு என்று அநளகப் பேர் இறந்துவிட்டனர்  இது அடிக்கடி நிகழ்ந்தது . இதனை மாற்றத் தான் இனியன் இடையறாது யோசித்தான் அதனால் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது என்னவென்றால் மலையை ஒரு புறத்தில் கொஞ்சம் பாதை அமைக்க வேண்டும் என்று உணர்ந்தான். அதனை வைத்து தனது நண்பர்களிடம் கலந்து யோசித்தான்
அவர்களும் இந்த யோசனை சரி என்று  சொல்லி மலையை கொஞ்சம் கொஞ்சமாகக் குடைந்து பாதை அமைக்கும் பணி செய்வது தான் சிறந்தவழி யாகும் என்று முடிவு செய்து  இளைஞர்கள் ஒருவர் ஒரு வீட்டிலிருந்து வரவேண்டும் என்றனர் எல்லோரும் சம்மதப்பட்டு வந்தனர் மலையில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது . நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மலையின் வழி பாதை உருவானது. இதனைக் கண்ட ஊர்மக்கள் அனைவரும்  மிகவும் மகிழ்ந்தனர் இந்தச்செய்தி  எல்லா ஊர்களிலும் பரவியது. இதன் பணி நிறைவுற்று பாதை கிடைத்து மக்கள் மகிழ்ந்தனர் இந்த விசயம் அரசுக்கு எட்ட அமைச்சர்கள் இங்கு வந்து பார்த்தனர் மக்களின் செயல் கண்டு பாராட்டினர் . இதற்கு காரணமே இனியன் தான் என்றறிந்து  இனியனைப் பாராட்டி அரசாங்கம் விழா எடுத்து கொண்டாட முடிவு செய்தனர் அதனால் விழா எடுத்து இனியனைப்  பாராட்டி விருது வழங்கிச் சிறப்பித்தனர். இனியனது பெற்றோரை அழைத்து அமைச்சர் பாராட்டினார். இனியனது பெற்றோர் மனம் மகிழ்ந்தனர் ஊரே இனியனைக் கொண்டாடியது இவ்வாறாக கண்ணியமான  நிகழ்வு நடந்தேறியது இவ்வாறு தான் ஊரில் நல்லது நடந்தது . இதைப் போல மற்ற ஊர் மக்களும் பின்பற்றி எல்லோருக்கும் உதவ்வேண்டும் என்று எண்ணினர் .இது பெரிய முன்னேற்றமானது .மக்கள் நல வாழ்வு  மலர்ந்தது.

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி,
மதுரை