சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திர தின கவிதை போட்டி

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திர காற்றை சுவாசிப்போம்

ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு கொண்டிருந்த நம்மை

எப்பாடு பட்டாவது நம் நாடு

என்ற உணர்வை அனைத்து இந்திய

மக்களுக்கும் உணர்த்த சுதந்திரம் அடைய

வேண்டும் என்பதை உணர்ந்து எத்தனையோ 

மகான்கள் அரும்பாடு பட்டு நமக்கு

இத்தகைய சுதந்திரத்தை வாங்கி கொடுத்தனர்

அன்று அவர்கள் சுதந்திரம் வாங்காமல் 

இருந்திருந்தால் இன்று நம் நாடு 

அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி

இருக்காது என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை

இப்போது சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து

ஆண்டுகள் ஆன பின்னரும் சுதந்திரத்தை 

வழங்கிய அனைத்து உள்ளத்தையும் போற்றவே 

மனம் வருகிறதே  தவிர அவர்களை இகழல்ல

கலப்படமில்லா சுதந்திர காற்றை சுவாசிக்க

வழிவகை செய்த மகான்களுக்கு நன்றி

இனிய எழுபத்தி ஆறாவது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

ஜெய்ஹிந்த்....
       வந்தே மாதரம்...

-பா.கீர்த்தனா,
  திருப்பூர்.