சொற்கள்

புதுக்கவிதை

சொற்கள்

சொற்கள்

உதிர்த்த வார்த்தைகள் அலைகின்றன
காற்றில் இறகாக

அவைகள்
தற்கொலை செய்வதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன  அசையும் வாய்களை .

வாய்களுக்கோ
 கருவிகளாவதைத் தவிர
வேறு வழியில்லை
வாய்பொத்தி நிற்கின்றன 

என் தேவனே என் தேவனே!

ஏன் என்னை கைவிட்டீர்

சொற்களின் சிலுவை
சுமக்க வா?

உடம்பினை முறுக்கி 
நரம்புகளை திருகி
கண்கள் சுருக்கி 
ஏதோ ஒரு விலங்காய்
ஊளையிட்டு நாம் தவிக்க

ஏளனமாய் பார்த்துப் போகின்றன
இந்த சொற்கள் 

அப்படியென்றால்,
கடவுளை ஜெயிப்பதற்கு
இதை சாத்தான் தானே படைத்திருக்க வேண்டும்

 பிறகு ஏன் 
அவர் . எப்பொழுதுமே 
மெளனத்தின் பின்னே
ஒளிந்திருக்கிறார்?

தங்கேஸ்