காந்தி மகான்

காந்தி ஜெயந்தி கவிதை

காந்தி மகான்

காந்தி மகான்

அகிம்சையின் அவதாரம் !

அன்பிற்கோர் அடையாளம் !
காண்போரை எளிமையால் 
கவர்ந்திழுத்த
கருணைமா சிகரம் !
எளிமைக்கு ஓர்
எடுத்துக்காட்டாய் விளங்கிய
இந்தியாவின் இதயம் !
மெத்தப் படித்த 
மேதையாய் திகழ்ந்தும்
உடைகள்
மெச்சும்படியாய் அணியாத
உலகமகா உத்தமர் !
மக்கள் பலத்தோடு
மிரளவைக்கும் சக்தி பெற்றும்
உயிரை வதைக்கும்
உண்ணாநோன்புகள் நோற்றே
ஆங்கிலேயர்களை
உறக்கமிலா செய்தவர் !
ஆயுதமில்லா மிதவாதத்தால்
அனைவரையும் திரட்டினார் !
அறப்போராட்டக் களங்கள்மூலமே
அந்நியர்களை விரட்டினார் !
சத்தியத்தின் வழிநின்றே
சரித்திரத்தை படைத்தவர் !
சுதந்திரக்காற்றை நாமும்
சுவாசித்திட
இந்தியத்தாயின்
விலங்கினை உடைத்தவர் !
மகாத்மா காந்தி எனும்
மகத்தான வடிவமே !
இன்றும்,
பாரதத்தின் பெருமையை
பறைசாற்றி நிற்கும்
அடையாள சின்னம் !
அண்ணலின் புகழோ
அவனி உள்ளவரை
அழியாது என்றும்...!

 கவிஞர் து.ரா.சங்கர்,
 கடலூர்.