பெண்களும்.. மாற்றமும்...

பெண்களும்.. மாற்றமும்...

பெண்களும்
மாற்றமும்
பேருலகின் 
கிளர்ச்சி//

மண்ணிலும்
பெண்ணிலும்
மறு உயிர் 
வளர்ச்சி//


தாயெனும் 
பெண்ணினால்
தரணியில் 
உதித்தவள்//

சேயாகி 
வளர்ந்து
பல்லுயிர் 
பதித்தவள்//

புரிந்திடா 
பேதையாய்
பெதும்பையாய்த்
துளிர்ந்தவள்//


தெரிந்திடும்
மங்கையாய்
மடந்தையாய்த்
தளிர்ந்தாள்//

அரிவையாய் 
தெரிவையாய்
அகத்தில் 
வாழ்கிறாள்//

பெரியவள் 
பேரிளம்  பெண்ணாய்
ஆள்கிறாள்//

உள்ளவர் 
ஏழையர் 
உற்றவர்
மற்றவர்//

கள்ளவர்
நல்லவர்
கற்றவர்
மூடர்கள்
ஒள்ளியர்
குண்டவர்
ஒன்றி 
மணக்கிறாள்//

பிள்ளையாய் 
வளர்ந்தவள் 
பிள்ளையும் 
பெறுகிறாள்//

தெள்ளிய 
அறிவொடு
திறனாய்
வளர்கிறாள்//

பிள்ளைகள்
படித்திடில் 
நீக்கம் 
செய்கிறாள்//

அள்ளி 
அறிவை
ஆசானாய்
அளிக்கிறாள்//

வள்ளலாய்
அன்பை
வழங்குபவள்
தோழியாய்//

மற்றவர் 
பசிக்கு
மாண்பாய்
சமைக்கிறாள்//

குற்றமே 
செய்யினும்
குடும்பம்
இணைக்கிறாள்//

சுற்றம் 
சொந்தம்
சூழப்
பிணைக்கிறாள்//

கற்பினைக்
காக்கிறாள்
கற்பனை 
நீக்குறாள்//

உருவமும் 
தோற்றமும்
உலகினில்
ஏற்றமும் 
பருவத்தில் 
ஆற்றலும் 
பலநிலை மாற்றமே//

மனைவியாய்த்
தாயாய்
பாட்டியாய்
வாழ்க்கையில்//

அனைத்திலும்
மாற்றம் 
அடைவது பெண்களே//


கவிதாயினி:- வினாயகமூர்த்தி-அபிவர்ணா

மூங்கிலாறு வடக்கு,
உடையார்கட்டு,
முல்லைத்தீவு,
இலங்கை.