தமிழரின் பெருமை 021!

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமை 021!

தமிழர்களின் பெருமை

தமிழர் பண்பாடு,தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், இயல் இசை நாடகம், தமிழ் சைவ சித்தாந்த , வைணவ சம்பிரதாயம்,சமய நூல்கள், கோயில் சிற்பக்கலை,
சாத்திரங்களும், புராண கால பதிவு களும், இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
தமிழர்களின் பெருமையை நம்மால் ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ சொல்லி ஒடுக்கிவிட முடியாது.
மிகவும் பழைமை வாய்ந்த கலசரம் நம்முடையது.
 காலத்தால் அழிக்க முடியாத கலாச்சாரம் நம் தமிழர் பண்பாடு.
தமிழர் கொண்டாடும்
பண்டிகைகள்,
அதிலும்,
விருந்தோம்பல் நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழி.
 சேர சோழ பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டிய கோவில், குளம் நம் தமிழர்களின் சிற்ப கலையில் இருந்த வல்லமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
63 நாயன்மார்கள் செய்த சைவ பக்தி இயக்கம் இலக்கியம் ஆகும்.

12 ஆழ்வார்கள் பாடிய பக்தி இயக்கம் வைணவ சமய சம்பிரதாயம் ஆக புலப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கலோ பொங்கல்!
இது நாம் சுவாசிக்கும் காற்று க்கும், ஒளி தரும் சூரியனுக்கும்

தை மாதம் பிறக்கும் போது முதல் நாளே தைப் பொங்கல் என கொண்டாடி நம் தமிழர் பண்பான நன்றி மறவாமை
எடுத்து காட்டுகிறோம்.
 
இயற்க்கை தாய் நமக்கு எப்பவும் என்றும் அள்ளி அள்ளி தந்து பூவும்,காயும்,பழமுமாக  நம் பசியை தீர்த்து வைக்கும் அவளுக்கு நாம் நன்றி சொல்லும் ஒரு அருமையான திருநாள் பொங்கல்.

பால் தரும் பசுவிற்கு மாட்டு பொங்கல்,
காக்கைகளுக்கு வண்ண நிற அன்னம் வைத்து ,கரும்போடு காணும் பொங்கல்,குடும்பத்தோடுநாம் சுவாசிக்கும் காற்று,பருகும் நீர், உணவு அளிக்கும் பூமித்தாய்,உழவர் திருநாளாக,பசுமையையும் ,நெருப்பயும் வணங்கி நன்றி செலுத்த
நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு உண்டு என்றால் அது பொங்கல் திருநாள் என்றால் மிகை ஆகாது. 
சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
பொங்கல் தமிழர்களையும் தாண்டி,ஜாதி, மத,வித்தியாசங்கள் இன்றி, இந்த வையகமும்,மானிடருமுள்ளவரை,
எல்லோரும் அன்போடும்,மகிழ்வொடும்ப் பொங்கல் திருநாளை கொண்டாடி வாழ்வோமாக.

மற்ற கலாச்சாரங்கள் நம் கலாச்சாரத்தை பின்பற்ற விழைகிரார்கள் என்பது இதற்கு முக்கியமான எடுத்துக் காட்டு. தமிழர் பண்பாடு தான் தமிழர்கள் பெருமை. இந்த பெருமையை உணர்ந்து பெருமையோடு, போற்றி வாழ்ந்து,
வளர்ந்திடுவோம்!!
விருந்தோம்பல் பற்றிய நம் அறிவு நம்மை அறியாமல் சிலிர்க்க வைக்கும்.
முன் காலத்தில் கூட்டு குடும்பத்தை ஆதரித்தனர். தினம் தினம் உணவு அருந்துவதற்கு வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.
இன்று நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுளளன.
சிறு குட்டும்பங்கள்.
ஒன்றாக.அமர்ந்து உணவு அருந்துவதில்லை.
பண்டிகை நாட்களில் மட்டும் தான் இருந்து எல்லோரோடும். உண்ணவும் உணரவும் முடிகிறது.
 ஆனாலும் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் உள்ள சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று தான் ஆசை.பாரம்பரியம் அப்படிப்பட்டது.
 எல்லா ஊயிரினங்களிடுமும் பாசத்தோடு , பரிவோடு பழக கற்றுக்கொண்டோம்.
 பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் எழுப்பிய கடல் ஓர கோவில்களும்,சிற்பங்களும், ஓவியங்களும் தமிழர் வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டது.
ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய  கோவில்,குளம் நந்தி மண்டபம் என எண்ணில் அடங்கா நற்சாட்சியங்கள்.
கம்ப இராமாயணம், வில்லி பாரதம், சேக்கிழார் பாடிய பெரிய புராணம், நந்தனார் 
சரித்திரம், மணி வாசகர் அருளிய திருவம்பாவை, திருப்பள்ளிஎழிச்சி,ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாசுரங்கள், நாச்சியார் திருவாய் மொழி, தமிழர்களின் ஆன்மீக வளர்ச்சி மற்றும் இறை த்தொண்டில வளர்ந்ததை காட்டுகிறது.

 சொந்த பந்தகள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகள் நம் வீட்டுக்கு வந்த வர்கள் யாரா இருந்தாலும், வாங்க,வாங்க என்று அன்போடு அழைத்து அமர செய்து குடிக்க நீர் அல்லது மோர் கொடுத்து உபசரித்து உண்ண உணவு பரிமாறி தமிழர் விருந்து படைப்பது பழக்கம். 

இசை மற்றும் நாட கங்கள் அரங்கேர காரணம் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான். 
பண் இசை நம் தமிழர் சொத்து.
ஓதுவார்கள் அம்பலத்தில் இறைவனைத் துதித்து வழிபடுவர்.
இதை தவிர கிராமிய கலைகள்,பொய்க்கால் குதிரை,மயிலாட்டம், உழவர் பாட்டு, அய்யனார் வழிபாடு ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
ஹரிசந்திரன்,நந்தனார்,கர்ணன்,இராமாயணம் ,பாஞ்சாலி சபதம் போன்ற சரித்திரக், கதைகளை 
நாட கமாக மக்கள் முன் கொண்டு வந்துநிறுத்தினார்கள். சமுதாய மக்களின் அன்றாட வாழ்வில் நடந்த எல்லா விதமான நிகழ்வுகளுக்கும் நல்ல அஸ்திவாரம் இவை.

சின்ன சின்ன விஷயங்களில் கூட தமிழரின் கை வண்ணம் தெரிகிறது, கலை அழகு வெளிபட்டு வீட்டின் அழகுக்கு அழகு சேர்ப்பது வாசலில் கோலம் போட்டு காவி நிறம் தீட்டி, பலவிதமாக பூக்கள் நிரப்பி குழந்தைப் பருவத்தில் இருந்து முதியோர் வரை எல்லோரையும் 
கவரும்.மார்கழி மாதத்தில் தான் இது பெரிய அளவில் மிகுந்த சிறப்போடு எல்லோர் வீட்டிலும் நடை பெறும்.
காவடி எடுத்து கொண்டு வேலும் குத்தி கொண்டு தமிழ் கடவுளான முருகனை காண பல்லாயிரம் தமிழ் பக்தர்கள், அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா என்னும் நாடுகளில் இருந்து ஆண்டு ஆண்டு காலமாக வருகிறார்கள்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக நம் தமிழர் கலாச்சாரம் பண்பாடு வியக்க வைக்கிறது.
தமிழ் மக்கள் பல இடங்களில் பரந்து விரிந்து காணப் படுவதால் நம் கலாச்சார தூதுவர்கள் நாமே.

 அதிசய மூலிகை செடிகள் பற்றி நமக்கு சித்தர் பாடல்கள் தொகுப்புகளில் வழி கிடைக்கிறது.
ஆயுர்வேத மருத்துவம் தலை சிறந்து விளங்கிய து தமிழ் மக்களிடையே.
.தமிழர்களுக்கு சொல்லமுடியாத அளவிற்கு பெருமை சேரப்பது நம்முடய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே.
தமிழ் மொழி என்ற பெயரில் உள்ள எத்தனை விதமான சுவகைகள்!!
கொங்கு தமிழ்,
 தமிழ் மொழி என்ற பெயரில் உள்ள எத்தனை விதமான சுவைகள்!!பேச்சு வழக்கில்
கொங்கு தமிழ், மதுரை தமிழ், பட்டின தமிழ்,நெல்லை தமிழ் என்று வகை வகையாக உள்ளது ஒரு சிறப்பு.
இத்தகைய வளமான, பழமை வாய்ந்த கலாச்சார மிடுக்கில் தமிழரும்,தமிழரின் பெருமையும் என்றும் வீர நடை போடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

-விஜயலட்சுமி கண்ணன், சென்னை