அலைபேசி யுத்தம்

காதல் கவிதை

அலைபேசி யுத்தம்

தொலைபேசியை தொல்லையாய் நினைத்தாய் நித்தம்! அன்று!!

தொலைபேசியில் தொலைந்தே போகிறதுஉன்சித்தம்! இன்று!!

தொடுதிரை வாசல் கதவுகள்! இதயம்
சுருங்கிவிரிவதைவிட
கூடியே போகிறது!!!

தொடமறுத்த தொலைபேசியை!
தொடர தனிநேரம்ஒதுக்கி!

தொந்தரவுஇல்லா‌! இடம்பார்தேபதுக்கி!!
தொலைந்தே போகிறாய் சில மணிநேரம் ஒதுக்கி!

வைத்தபொருளை மறந்துதேடச் செய்கிறது!
வாங்கச்சொன்ன பொருளை மறக்கச் செய்கிறது!

தொடுதிரைபார்த்து தானே! நகைக்கச்செய்கிறது!
உண்ணவும் உறங்கவும் நேரம் கடக்கிறது!!

உனக்குள்ளும்! எனக்குள்ளும் ! நாளும்,, புது உலகப்போர் யுத்தம்!!

உற்ற உறவுகளுக்கு
கேட்காது நடக்குது
இந்தசப்தம்!!

அலைபேசியின் அலறல் !
அன்புபோரின்ஆயத்த குமுறல்!!

அடித்துகொள்கிறது
அவருக்குள்! வார்த்தை உளறல்!!

புயலுக்குப்பின்
அமைதிஎன்றார்கள்!
வேண்டாம்,,! வேண்டாம் ! இதுபழைய நட்பு புயல்தானே!! வீசிக் கொண்டே இருக்கட்டும்!!

விழியாலும்!! விரலாலும் !!ஏவுகணை கொடுத்துக் கொண்டே!! இருக்கட்டும்!!

விடைபெறாது! விடியல் இல்லாது!!
விரைந்துநடக்கடும்!

இருவர் இதய நாடுகள் தானே!! சேதாரம் இன்றி நட்பில் ஆதாயம் தேடுகிறது!!

புன்னகை பூக்கள் பூக்கட்டும்!!
போர்நாடுகள் நேரேபார்க்கட்டும்!

சமாதானகொடியா!
பச்சைக்கொடி யா!
முடிவில்லா!! மூன்றாம் உலகப்போர் யுத்தம்!

-கவிதை மாணிக்கம்