தாயின் வளர்ப்பினிலே குழந்தை...! 025

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

தாயின் வளர்ப்பினிலே குழந்தை...! 025

தாயின் வளப்பினிலே குழந்தை!

பள்ளி ஆண்டு விழாவில் நித்யாவிற்கு சிறந்த மாணவிக்கான பரிசு கிடைத்தது. நித்யா எட்டு வயது மாணவி.  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் இந்தப் பெண்ணிற்கு எதற்காக இவ்வளவு பெரிய பதக்கமும்,  ஐந்தாயிரம் பணம் கொடுத்திருக்கிறார்கள்.  படிப்பிலும் சுட்டி கிடையாது. சுமாரான படிப்பு தான் படிப்பாள் என்று ஆளாளுக்கு மாணவி நித்யாவை கடினமாக பேசினார்கள்.

நித்யாவின் அம்மாவோ சாதாரணமாக வீட்டு வேலை செய்யும் பெண். நித்யாவின் அப்பா தள்ளுவண்டி கடையில் மாலை நேரத்தில் போண்டா, பஜ்ஜி,  வடை போட்டு விற்பனை செய்கிறவர். மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அப்பாவுக்கு துணையாக மாலை நேரத்தில் சிறிது நேரம் கடையில் இருந்து விட்டு மீண்டும் 8 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களை படிக்கவும் எழுதவும் செய்வாள்.

சிறிய குழந்தையாக இருந்தாலும் அவள் படிக்கும் வகுப்பில் வகுப்பு தோழிகளுக்கு மூக்கில் சளி இருந்தால் நித்யா சங்கடப்படாமல் மூக்கை துடைத்து விட்டு சுத்தப்படுத்தி விடுவாள்.  குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் சாப்பாட்டை வைத்திருந்தாலும் நித்யா ஊட்டி விடுவாள்.

ஒரு நாள் காலையில் இறைவணக்கம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பெண் வாந்தி எடுத்தாள். நித்யா உடனே அந்த தோழியை மெதுவாக கையை பிடித்து அழைத்துச் செல்ல பின்னாடியே வகுப்பு ஆசிரியர் சென்றார்.

அதன் பிறகு நித்யா  தோட்டத்தில் உள்ள விளக்கமாறும்,  முறத்தையும் கொண்டு வந்து வாந்தி எடுத்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இதை தலைமையாசிரியர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

வயதில் சிறிய குழந்தையாக இருந்தாலும் எந்த ஒரு அருவருப்பும் படாமல் அந்த இடத்தை சுத்தம் செய்தது தலைமை ஆசிரியருக்கு ஆச்சரியமாக இருந்தது.

எந்த உதவினாலும் பணத்தைத் தவிர அனைத்தையும் தன் தோழிகளுக்காக செய்தாள் நித்யா. வகுப்பு ஆசிரியர் நித்யா செய்யும் செயல்களை எல்லாம் சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டார்.

ஆனால் தலைமை ஆசிரியர் நித்யாவின் செயல்களை பார்த்த பிறகு அவளை அழைத்து பாராட்டி இதேபோல எப்பொழுதுமே அனைவருக்கும் உன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என பாராட்டினார்.

நித்யா பள்ளியில் செய்த நற்காரியங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு தலைமையாசிரியர் கூறும் போது அவளை கடிந்து கொண்ட சில பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த சிறுவயதிலேயே பிறருக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட நித்யாவிற்கு பதக்கமும், பள்ளியின் சார்பாக ரூபாய் 5000 பணத்தொகையும் பரிசு என்ற வார்த்தையை கேட்டவுடன் மேலே ஏறி பரிசை வாங்கிக் கொண்டாள் நித்யா.

நித்யா பதக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரூபாய் ஐயாயிரம் பணத்தை பள்ளியின் சில நலத்திட்டங்களுக்காக இந்த பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்ல பெற்றோர்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது.

-சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்,மதுரை.