வீர மங்கை அருணிமா சின்ஹா 027

புதுமைப்பெண் விருது கட்டுரை போட்டி

வீர மங்கை அருணிமா சின்ஹா 027

வீரமங்கை அருணிமா சின்ஹா.

அருணிமா சின்ஹா தேசிய அளவிலான கால்பந்து மற்றும் கைப்பந்து வீராங்கனை உத்தர பிரதேசத்தில் பிறந்தவர்.

    அன்று ஏப்ரல் 2011 பத்மாவத் எக்ஸ்பிரஸ் ரயிலியிலிருந்து டெல்லிக்கு தேர்வெழுதுவதற்காக சென்று இருந்த போது தனது தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற ஐந்து பேரால் ரெயில்லிருந்து தூக்கி எறியப்பட்டார். இது சில அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டது.

   தூக்கி எறியப்பட்ட அருணிமா நகர முடியாமல் தவித்தார். ஒரு ரயில் அவரை நோக்கி வந்து கொண்டிருந்ததை உணர்ந்த அருணிமா எழுந்திருக்க முயற்சித்தார். கண்ணிமைக்கும் நொடிகளில் அந்த ரயில் அவர் கால் மேல் ஏறியது முழங்காலுக்கு கீழே நசுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தன் நினைவுகளை இழந்து மயக்க நிலையில் தள்ளப்பட்டார்.

  அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பாதிப்பு அடைந்த காலை துண்டித்தனர்.

  போலீசார் வழக்கு பதிவு செய்தது.  அரசு ரயில்வே போலீஸ் அருணிமாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். இது பொய் என்றும் தன்னை 5 பேர் சங்கிலி பறிப்பு செய்து தன்னை தூக்கி எறிந்தார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  அருணிமா கூறிய கொள்ளை முயற்சி சாட்சிகள்  உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டார் மனரீதியாக.

   பல நாட்களுக்குப் பிறகு மகிலா அயோக் அறிக்கை கூறிய போது தண்டவாளத்தில் சிதைந்து ரத்தம்  வடிந்து கிடந்த போது 49 ரயில்கள் அவரை கடந்து சென்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது.  ஒவ்வொரு முறை ரயில் அவர் கால் மேல் ஏறும்போது துள்ளித் துடித்தும் வலியால் கத்திக்கொண்டும் இருந்தாராம்.  விடிந்ததும் அவர்கள் புது நம்பிக்கை உதித்தது.  அவரை மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் சென்றனர்.

   இரண்டு ஆண்டுக்குப் பிறகு இவர் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.  எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையைப் பெற்றார்.  2015ல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

    அவர் அனைத்து முரண்பாடுகளை கடந்து பலரால் நினைத்துப் பார்க்க முடியாத சிகரத்தை அடைந்தார் அருணிமா. 

    அருணிமா சின்ஹா உத்திரகாசியில் உள்ள நேரு மலை ஏறும் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் டாட்டா ஸ்டீல் அட்வெஞ்சர்ஸ் ஃபவுண்டேஷனில் எவரெஸ்ட் சிகரத்தை எறிய முதல் பெண்மணி என்ற பாராட்டைப் பெற்றார்.  டிசம்பர் 25 அவர் 6960.8 மீட்டர் உயரத்தில் உள்ள அசோன்சாகுவா அர்ஜென்டினா மலையை கைப்பற்றினார். உலகில் ஏழு உயரமான சிகரங்களில் ஐந்தை கைப்பற்றியுள்ளார்.

   அருணிமா மேற்கு மற்றும் தெற்கு அறை கோலங்களில் மிக உயரமான இடத்தை அடைய தனது பயணத்தை தொடங்கினார்.  அது 13 நாட்கள் நீடித்தது ஆசியாவில் வெளியே உள்ள மிக உயரமான சிகரத்தில் இந்திய கொடியை ஏற்றினார்.

   முடிவுரை:

     அருண்மா சின்ஹா அன்று கால் சிதைந்து மனம் உடைந்து குத்துயிருமாக கிடந்தார்.  இன்றோ உலகின் உச்சியில் தனது பலவீனத்தை வெற்றிகரமான சக்தியாக மாற்றி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவரின் சாதனையை நம்பிக்கை இழந்தவருக்கு புது இலக்கை உருவாக்க அவரின் வாழ்க்கை ஒரு பாடமாகவும் ஊக்கமாகவும் திகழும். 

 நம் வாழ்க்கை இலக்கை அடைய உடல் ஊனம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்பதை ஏழு சிகரங்களை வென்ற அருணிமா சின்ஹா ஒரு எடுத்துக்காட்டு.  நன்றி.

எழுதியவர்:
ஏ. யாஸ்மின் பேகம்
சென்னை.