பன்மொழி வித்தகன் பாரதி...! 020

தமிழ்ச் சுடர் வருது கவிதைப் போட்டி

பன்மொழி வித்தகன் பாரதி...! 020

பன்மொழி வித்தகன் பாரதி... 

பதினான்கு மொழிகளறிந்த பன்மொழி வித்தகனே...
சொல்லில் உயர்வாம் தமிழ் சொல்
அதை தொழுது படித்திட செய்தவனே
வெல்லும் மொழியாம் செந்தமிழ்
தேனாய் பாயுது என் காதினில் என்றவனே... 

பெண்ணியம் பேசியவனே
மாந்தர்க்குண்டு சுதந்திரம் என்று மார்த்தட்டியவனே...
நாட்டு விடுதலையும் பெண் விடுதலையும்
இரு கண்களென்றுக் கொண்டவனே...
உந்தன் எழுதுகோலால் தீட்டிய 
புதுமைக் கவிகளோ
ஏராளம் இப்பாரினில்... 

தீண்டாமையை தீயிலிட்டுப் பொசுக்கி
நல்லதோர் வீணை செய்தவனே...
காக்கையும் குருவியும் எங்கள் சாதி என்றுரைத்தவனே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே என்று
வீரத்தினை பறைச்சாற்றியவனே..

யானுமே அறிந்த மொழிகளில்
யவ்வனம் தமிழ் போல் இல்லை
என்றுரைத்தவனே .. 
ஊனிலே கலந்திட்ட 
உயிர்த் தமிழ் உரைத்திட
சத்தியமும் கூடும் என்று வீறுக்கொண்டவனே... 

நீர் இன்னும் வீழவில்லை ஐயா
என்றுமே வீழ்ந்து விடா
பெரும் வியப்பு நீ - பாரதி( தீ)
தமிழ் உள்ளவரைத் 
தழைத்தோங்கும் நின்புகழ்
என்றும் எங்களின்
நீங்காத நினைவுகளில் நீ - பாரதி(தீ)!

கோ. ஶ்ரீ அஹிலேஷ்
கும்பகோணம்.