என் பள்ளி தோழி...

என் பள்ளி தோழி...

அன்று நீ! சிற்றாடையில் சித்திரமே!!

அந்த அழகிய நிலவொன்று தரை‌ 
இறங்கி நடைபயின்றுவருமே!!

பள்ளிக்கு நடந்துவந்த காலம் இன்னும் பார்வையில்,, நீங்கலையே!!

பாவிமக நெஞ்சிக்குள்ள, பாடா 
படுத்தினேயே!!
பரஸ்பரமா சொல்லி திரிய!! நீ

என் சொந்த உறவும் ஆகலையே!

இரட்டை சடைஇரண்டும்!
இரண்டு தோலிலையும் தாளமிட!

காதோரம் லோலாக்கு
கண்ணத்தை உரச போராட!!
கண்ணிரண்டும்
கயல் மீனாய்துள்ளி அம்புவிட!
கண்மணியே நீவரும்பாதை பாத்திருப்பேன்!!

உன்னிடம் சொல்லிவிடத்தான் ஆசை!!
எனக்கு பெரிய ஆளுன்னுமுளைக்கலையே மீசை!!

உன் நண்பனிடம் கேலிகிண்டல் பேசியே!!
காலங்கள் கடந்தாலும்,,,,!

என் நெஞ்சம் எனக்குள்ளே! 
ஏழையென்று சொல்லிதடுத்துவிட!

ஏளனமா போயிடுமோ!
எதிர்பார்த்த வேலைகிடச்சா!!

என் கண்மணியே
உன்னை தான்
கரம் பிடிக்க ஆசைபட்டிருப்பேன்!!

இதயகூட்டுக்குள்ளே வீடுகட்டி!
கடலோர மணல் வீடாச்சே!! கடல் அலை அடிச்சி
அழிச்சிடுச்சே!

என் ஆசை வீணாச்சே!
ஏம்புள்ளை எப்படியிருக்க
எனகேட்க !!
நட்போடே காத்திருக்கேன்!!

நாளும் பொழுதுமாய்
நாளுகவிதை!! உன்னை நினைச்சி 
எழுதிருக்கேன்!!

என்றும் நட்புடன்
கவிதை மாணிக்கம்!