பாரதம் போற்றும் பா ரதி...! 067

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதம் போற்றும் பா ரதி...! 067

பாரதம் போற்றும் பா ரதி..

இலக்குமியின் கருவைச்                                  சுமந்த  இலக்கியவாதியே, 
உலகோர் போற்றும்
 உன்னத தியாகியே, 
 எட்டாத உயரத்தை 
நான்கு எட்டால் எட்டிப்பிடித்த
 எட்டய புறத்தானே , 
தேச விடுதலைக்கு 
வீறு கொண்டு கர்ஜித்து 
புரட்சிப் பாடல் புனைந்தாயே , 
பெண் விடுதலை
 வேண்டும் என்றாய் , 
கண் போல் பெண்களை 
காக்கவும் செய்தாய் , 
பட்டங்கள் ஆளவும் 
சட்டங்கள் செய்யவும்
 பெண்களை பாரினில் 
வளரச் செய்தாய் , 
தீண்டாமை என்னும் 
தீவினை அழிக்க
 ஆண்டாண்டு காலம்
 உரக்க உரைத்தாய் , 
சாதிகள் இல்லையென்றே
வாதித்த வேதிகனே , 
ஏர்முனை போன்ற 
எழுதுகோலின் 
கூர்முனை கொண்டு
 பாரதம் உழுதாய், 
 பன்மொழி கற்றதாலா
 நீ அறிந்த மொழிகளிலே
 தமிழ்மொழி போல் 
யாதுமில்லை என்றாய், 
 காசி நகர் செய்த 
புண்ணியமா உன் 
பாதம் சுமந்தது
 நான்கு ஆண்டுகள் , 
கங்கையும் கருணையாய்
 தமிழை நாடி 
பொங்கியே வந்தாள்
 உன் சுவாசம் தேடி, 
தனி ஒருவனுக்கு 
உணவில்லை எனில் 
ஜகத்தை அளிக்க 
வேண்டும் என்றாய் , 
காக்கை குருவிக்கு 
கூட பசியாற்றி
 யாக்கை குளிர
 பாட்டும் பாடினாய் , 
பா புனைந்த பாரதியே 
என்றும் பாரதம் 
போற்றும் பா ரதியே 
தமிழ் உள்ள வரையில் 
உன் நாதம் ஒலிக்கட்டும் , 
தலை வணங்குகிறேன் 
உன்னால் பாரதம் 
ஜொலிக்கட்டும். ...


- நன்றி கவிஞர் 
முனைவர் சகுந்தலா ராமலிங்கம், உடுமலைப்பேட்டை.