சமத்துவ சிந்தனையாளர் அம்பேத்கர் 009

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சமத்துவ சிந்தனையாளர் அம்பேத்கர் 009

சமத்துவ சிந்தனையாளர் அம்பேத்கர்

இந்திய அரசியல் சட்டத்தின் தந்தையே....

பாலின சமத்துவம் வேண்டிய சிந்தையே....

கண்ணாக மணியாக அல்ல....

இவள் கண்ணியமாக பேசிட காரணமும் நீயே.....

சம வேலைக்கு சம ஊதியம் என்றாய்.....

பெண்களின் உழைப்பினையும் மதித்திட வைத்தாய்..... 

சமத்துவம் நிலைநாட்ட பெண்களும் கொடி நாட்ட....

சட்டங்கள் மூலம் அழியா சரித்திரம் படைத்தாய்..... 

விழியிருந்தும் துளியுமில்லை விழிப்புணர்வு.....

நாள்தோறும் எடுத்தோதியது உன் நாளிதழ் எழுத்து.....

பெண்ணுக்கான பேருடை கல்வியென்று....

ஓய்வோடு அவசியமாய் நிதி உபகாரமும்..... 

பேரு கால பெண்ணுக்கும் தாயாகி போனாய் ....

மணவிருப்பமும் விலக்கும், அவளுக்கான சுயஉரிமை.... 

அறிவுக்குள் தெளிவும் ஊட்டிய அண்ணலே.....

நின் பொதுக்கூட்டம் மங்கைக்கும் சேர்த்தது பெருமறிவு....

அவசிய போராட்டமே உன் ஆலய நுழைவு......

கற்பி, ஒன்று சேர்,போராடு..... 

பெண்ணுக்கான நல்லாசனாய் உந்தன் பேராணை.....

சமத்துவம் போற்றும் சமூக சிந்தையே.....

உங்களின் இலக்கிற்கு எங்களின் சமர்ப்பணம்......

-சு.சுஷ்மிதா
சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905