அதியும் பைரவும்...015

சிந்தனைப் சிற்பி விருது சிறுகதை போட்டி

அதியும் பைரவும்...015

ஆதியும்  பைரவும்...
      பள்ளி வாகனத்தில் இருந்து ஆதி வேகமாக ஓடி வந்தான். பைரவ் இருந்த இடம் மிக சுத்தமாக இருந்தது. மாடிக்கு ஓடினான். அங்கேயும் காணவில்லை. ஒருவேளை  வீட்டுக்குள்ளே இருப்பானோ,  வீட்டுக்குள்ளே அம்மா விடவே மாட்டாங்களே, வீட்டிற்குள் சென்று பார்த்தான். அங்கும் இல்லை. அழ ஆரம்பித்தான். கோவென்று  கத்தினான் .அம்மா உடை மாற்றி பால் அருந்து என்று கூறினாள். எதுவும் காதில் விழவில்லை. அழ ஆரம்பித்தான் படிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை, அம்மா பைரவ் எங்கே? என்றான். யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என்றாள்.  அம்மா படிக்க வைக்க எவ்வளவு முயற்சி செய்தும் படிக்கவும் இல்லை .சாப்பிடவும் இல்லை .

      அடுத்த நாள் முதல் வகுப்பில் காலாண்டு தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என்று ஆதியின் அம்மாவுக்கு ஆசிரியர் போன் செய்தார் .வீட்டிற்கு வந்த ஆதி மறுபடியும் அழுதான் .பைரவ் வந்தால் தான் சாப்பிடுவேன் என்று அம்மாவிடம் அடம் பிடித்தான். காலாண்டு தேர்வில் முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும். என்பதற்காகத்தான் பைரவை தோழி வீட்டிற்கும் , தாத்தாவை அத்தை ஊருக்கும் அனுப்பி வைத்தாள். வேறு வழி இன்றி ஆதியின் அம்மா போன் செய்து தன் தோழியிடம் இருந்து பைரவை கொண்டு வர சொன்னாள்.  நீ படிக்காமல் இருந்தால்  பைரவை (நாய்க்குட்டியை) மறுபடியும் அனுப்பி விடுவேன் என்று  கூறினார் . படித்து விடுவேன் அம்மா என்றான்.
 ஆதி மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தான். பைரவுக்கும் ஏதோ புரிந்தது போன்று அமைதியாக ஆதி படிக்கும்போது தொந்தரவு செய்யாமல் இருந்தான். இருவரும் அண்ணன் தம்பியாக பழகுவதை புரிந்து கொண்டாள் .அதைப் பார்த்து  ஆதியின் அம்மா நாய்க்குட்டிக்கே படிக்க விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பொழுது தன்  மாமியாரையும் மாமனாரையும் ஆதி க்கு செல்லம் கொடுத்து படிக்க விட மாட்டார்கள் என்று நினைத்து நாத்தனார் வீட்டிற்கு அனுப்பி விட்டது ஞாபகம் வந்தது . நாய்க்குட்டியை பிரிய முடியாத ஆதிக்கு எப்படி தாத்தாவையும் பாட்டியையும் பாட்டியும் பிரிய முடியும் .மனம் வருந்தினாள். தவறை உணர்ந்தாள் என்னங்க ,என்னங்க, அத்தையையும் மாமாவையும் உடனே அழைத்து வாங்க என்று கணவரிடம் கூறினாள். ஆதியின் யின் அப்பாவும் உடனே தன் அப்பாவை அழைத்து வர கிளம்பி விட்டார் .  ஆதியின்  அம்மா  நாய்க்குட்டியே  நம்மைப் அன்பு செய்யும்  பொழுது, தாத்தாவையும், பாட்டியும் ஆதியிடம் இருந்து பிரித்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்தாள்.  ஒரு பொழுதும் அவள் முதியோர் இல்லத்திற்கு தன் மாமனாரையும் மாமியாரையும் அனுப்ப மாட்டாள். பைரவ் என்ற நாய்க்குட்டின் மூலம் அன்பை புரிந்து கொண்டாள்.

       மை  .மதலை மேரி ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
நரசிம்மநாயக்கன்பாளையம்,
கோயம்புத்தூர்- 31