புரட்சியின் பூர்வீகம் அம்பேத்கர் 017

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சியின் பூர்வீகம் அம்பேத்கர் 017

புரட்சியின் பூர்வீகம் அம்பேத்கர்...

நம் இந்திய அரசியல் சாசனத்தின்
தலையாய தந்தை அவர்
சட்டம் பயில்வோர்கள்,
சமத்துவம் போற்றுவோர்கள் போன்ற
ஏனைய மக்களின் குரு அவர்...

ஆற்றலின் அடைமொழி 
அகிம்சையின் தத்துவம்
உண்மையின் உருவம்
அடக்கத்தின் அடையாளம்
எழுச்சியின் அறிமுகம்
புரட்சியின் பூர்வீகம்
இந்தியாவின் கலங்கரை விளக்கம்...
எத்தனை புரட்சிகள்
எத்தனை சாதனைகள்
இவையாவும் உன்னையன்றி
வேறு யாரால் முடியும்...

பணத்தாலும் பலத்தாலும்
அதிகாரத்தாலும் என்றும் சிறைபட்டு
மனத்தாலும் செயலாலும்
செய்யும் பணியாலும்
வதைபட்டு வாடிய மனம் புண்பட்ட
ஏழை சாதியருக்கு
மண்ணுரிமை வாங்கித் தந்த
பண்பட்ட மனிதர்... 

சாதிகளை ஒழிக்கவே சாதித்தவர்
தீண்டாமையை வேரறுக்க
சட்டங்களை வரையறுக்க
திட்டமிட்ட வல்லுநர்.. 
ஏழை பங்காளர்... 
பாரதம் போற்றும் பன்முகத் தலைவர்
வாழிய வாழியவே...

செல்வன். கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.