மாயை...!

Mayai,kalai neera sinthanai,

மாயை...!

மாயை
என்பது........................
அறிவுக்கு எட்டாத
அனைத்தும் தான்.......

கண்கட்டி
வித்தையாலும்........

கருத்தை 
மழுங்க செய்யும்
சக்தியாலும்.............

பொய் பேசும்
புத்தியாலும்...........

பார்வையால் உணராத
செயல்களாலும்........

நாகரீகம் என்ற பெயரில்
மதியில்லாமலும்......

விரதமென்ற பெயரில்
தன்னை வருத்துதலும்...........

நேர்த்திக்கடன்
என்ற பெயரில்
தன் கடனை அதிகபடுத்துதலும்.......

மாயையின் நிகழ்வுகளே..........

அது 
மட்டுமல்ல.................

நிலவில் பாட்டி
வடை சுடுவதாகவும்....

மலை மீது
மேகம் உரசுதலும்........

தூரத்தில் தெரியும்
கானல் நீரும்..............

கடலும் வானமும்
இணைந்த தோற்றமும்.............

கண்டு உணராத
காட்சி பொருளும்........

நாடகமாடி உதிர்க்கும்
கண்ணீரும்.............

நம்ப வைக்கும்
நயவஞ்சக பேச்சும்......

அரண்ட கண்ணுக்கு
இருண்ட பேயும்........

ஓடும் இரயிலில்
உடன் வரும் நிலவும்...

தூக்கமில்லாமல் விரிக்கும் மெத்தையும்.............

மறு பிறவி உண்டெனற மடமையும்..............

உண்மையை தவிர்த்து
உதிர்க்கும் வார்த்தையும்......,.....

இவையும் மாயையே...

எனவே..........  .....

மாயையை புரிந்து
விலகிடு.................

அறிவால் நீ
தெளிந்திடு................