சுதந்திர காற்றே சுவசிப்போம்...22

சுந்தர் தின கவிதை

சுதந்திர காற்றே சுவசிப்போம்...22

இனி அன்னியமென்பதெல்லாம்
 பழசாய் போச்சு
இப்போ என் தேசம் அன்பின் உருவில் புதுசா ஆச்சு
வானும்  நிலவும்  அழகா ஆச்சு
சூரியன் என்பது அன்னை மணிமுடியில்
சூடிய வைடூரிய வைர அணியாச்சு
திரைக்கடல் ஒடி தேடிய திரவியமெல்லாம்
என் பாரத தேசத்தின் நிறைந்து வழியும் செல்வமாச்சு
அறிவியல் ஆராய்ச்சு கணினி தொழில் 
வானமேவிய ராக்கெட்டிலெல்லாம் என் தேசம்
முன்னனியாச்சு
கலையும் இறையும் அருளும் பொருளும்
ஆன்மிகம் அறம் அத்தனையும் பெரும் சிறப்பாச்சு
நீரும் நிலமும் வளமும்
யோக மனமும்
அவள் அகப்பொருள் ஆச்சு
அன்பும் ஆனந்தமும்  பொங்கி நிறைந்தாச்சு
சாதி மதம் இனம் எல்லாம் ஒன்றினைந்தாச்சு
இனி உலகம் என் தேசத்தின் வழி நடக்கும்
அன்னை பாரததின் அடி தொழுவோம்
விடுதலை உணர்வில் சுதந்திரம் கலப்போம்
தேசம் செழிக்க ஒன்றினைந்து உழைப்போம்
வாருங்கள் ஆனந்த சுதந்திர காற்றை சுவாசிப்போம்
-பாபு,
கவிதா விலாசம்