அன்னையர் தினம்

அன்னையைப் போற்றுவோம் "கவிதைத் தென்றல் விருது" கவிதைப் போட்டி கவிதைகள்

அன்னையர் தினம்

அன்னையர் தினம் "கவிதைத் தென்றல் விருது" கவிதைப் போட்டி கவிதைகள் 

001. அன்னையைப் போற்றுவோம்
அகிலத்தின் சக்தியிவள்

அகிலத்தின் சக்தியிவள்
அன்பின் முக்தியிவள்
மகிழம்பூவாக மலர்ந்திடும்
மனதின் மகிழ்ச்சியிவள்

கன்னல் மொழிக்குள்
கருத்தான கருவிவள்
அன்னை யென்னும்
அனிச்சை மலரவள்

விழிக்கு ஒளியாய் 
விளக்கான தாயிவள்
வேலியாய் இருந்தும்
வேர்போல தாங்கியவள்

அறிவும் ஆற்றலும்
அழகாய்ப் புகட்டுபவள்
பரிவு கொண்ட
பாசத்தின் நிழலவள்

வலிகள் கண்டாலும்
வாடாத பலமிவள்
மொழியும் நாவுமாய்
மோகனமாய் இணைந்தவள்

வரமாக வாய்த்த
கடவுளின் கொடையவள்
தரத்தில் தங்கமாய்
தரணியின் சொத்திவள்

கவித்தாரகை 
கிருஷ் அபி மன்னார் மாவட்டம் இலங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

002.

அன்னையர் தின
வாழ்த்துகள்  02
************************
அகிலத்தின் சக்தியிவள்
****************************
அரியதோர் உதிரந்தந்து
அச்சமேதும் இல்லாமல்
அந்தரங்கம் தழுவியதும்
அகிலத்தின் சக்தியிவளே

அழகுக்கு மெருகேற்றி
அயராது உழைப்பளும்
அழைப்பு மேதுமின்றி
அஞ்சனமை தீட்டுபவளே

அப்பாவின் கொஞ்சலில் 
அனைத்தும் மறந்துமே
அங்கிங் கெனாதபடி
அமரத்துவம் அடைபவளே

அக்கினிக் குஞ்சுகளை
அடைகாக்கும் கோழியாக
அக்கணமும் வயிர்தடவி
அத்தனையும் இன்பமே

அன்னைக் குருதியில் 
அன்பூட்டிக் கருவாக்கி
அழுகின்ற குழந்தைக்கு
அமுதூட்டி மகிழ்பவளே

அன்றலர்ந்த தாமரைபோல்
அவதரித்த தாரகையிவள்
அன்னப்பறவை போலாகி
அன்றாடம் பகுத்தறிபவளே!

தமிழ்க்கவியோகி
முனைவர் சி.அண்ணாதுரை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையர் தின
வாழ்த்துகள்  02
************************
அகிலத்தின் சக்தியிவள்
****************************
அரியதோர் உதிரந்தந்து
அச்சமேதும் இல்லாமல்
அந்தரங்கம் தழுவியதும்
அகிலத்தின் சக்தியிவளே

அழகுக்கு மெருகேற்றி
அயராது உழைப்பளும்
அழைப்பு மேதுமின்றி
அஞ்சனமை தீட்டுபவளே

அப்பாவின் கொஞ்சலில் 
அனைத்தும் மறந்துமே
அங்கிங் கெனாதபடி
அமரத்துவம் அடைபவளே

அக்கினிக் குஞ்சுகளை
அடைகாக்கும் கோழியாக
அக்கணமும் வயிர்தடவி
அத்தனையும் இன்பமே

அன்னைக் குருதியில் 
அன்பூட்டிக் கருவாக்கி
அழுகின்ற குழந்தைக்கு
அமுதூட்டி மகிழ்பவளே

அன்றலர்ந்த தாமரைபோல்
அவதரித்த தாரகையிவள்
அன்னப்பறவை போலாகி
அன்றாடம் பகுத்தறிபவளே!

தமிழ்க்கவியோகி
முனைவர் சி.அண்ணாதுரை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையர் தினம் 03

எல்லோரும் ஆலயம்
போனார்கள்
சிலர் கோயிலுக்குப்
போனார்கள்
பலர் மசூதிக்குப்
போனார்கள்
ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்
ஆம் கடவுள் என்ற அம்மா அங்கே
இருக்கிறாள்

ரிஷிகள் இமய மலைக்குப்
போனார்கள்
சித்தர்கள் குகைகளுக்கு
போனார்கள்
சாமியார்கள் காசிக்கு
போனார்கள்
முனிவர்கள் காட்டுக்குப்
போனார்கள்
ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்
ஆம் கடவுள் என்ற அம்மா அங்கே
இருக்கிறாள்

நிம்மதி தேடி
நிர்மல்யம் நாடி
நித்திரை வேண்டி
நிரந்தரம் காண நிலையில்லாத உலகில் எங்கெங்கோ அலைகிறார்கள்....
சமையலறையில்-
அம்மா உன் பாதங்களில்
காண்கிறேன் அந்த
சந்நிதியை...

உழைப்பின் மேன்மைக்கு எத்தனையோ உதாரணங்கள் சொன்னார்கள் நான்
உன்னைக் காட்டுகிறேனே அம்மா

படைத்தவன்
பிரம்மா எனில்
பாடு பொருள் உயிர்
உற்பத்தி மென்மையின்
இலக்கணமே நீயும்
கூட கடவுளின் அவதாரமான பிரம்மா தானோ?

கவிஞர்.
இரஜகை நிலவன்
மும்பை!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம் 04
*************
பத்து மாதம் சுமந்து பெற்றவள் 
பூங்காற்றாய் தென்றலாய் வலம் வருபவள்
சோகத்திலும் ஆறுதலாய் நமக்கு கை கொடுப்பவள் 
எதையும் விலக்கி வாங்கலாம் 
தாய் பாசத்தை வாங்க முடியாதே
பாலூட்டி சீராட்டி வளர்த்தவள்
தான் கஷ்ட பட்டாலும் பிள்ளை கஷ்டத்தை அனுபவிக்க கூடாது என நினைப்பவள்
சுகமான ராகங்களோடு நெஞ்சில் சுமந்தவள்
எதற்கும் ஆசை படாதவள்
குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவள்
காற்று இல்லையெனில் மனிதனால் உயிர் வாழ முடியாதே
தாய் இல்லையெனினும் உயிர் வாழ முடியாது
பெற்றவள் இருந்தால் மட்டுமே  குழந்தையை ஆதரிப்பாள்
இல்லை யெனில் குழந்தை நிலை என்னவாகும் 
செல்வம் இருந்தாலும் தாய்க்கு ஒன்றும் ஈடாகதே
வாழும் நாளில் தாயை கண் கலங்காமல் பார்ப்போம்
முதியோர் இல்லத்தில் விட வேண்டாமே
நம்மை வளர்த்து ஆளாக்கி விட்ட பிறகு
மீண்டும் குழந்தையாகிறாள்அவர்களை பாசத்தோடும் அரவணைப்போடும் கண் கலங்காமல் பார்க்க வேண்டுமே
நம்மை பெற்ற தாய் நமக்கு தெய்வமே 
தெய்வத்தை தேடி கோவிலுக்கு செல்லாதே
வீட்டிலே இருக்கிறார்கள் 
ஒவ்வொரு முறையும் அவர்களிடம் ஆசி பெற்று செல்வோமே
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம்!!!!! .  05

                அன்பின் மறு உருவமே   எனக்கு உயிர் கொடுத்த என் ஆருயிர் தெய்வமே.     நீ இல்லாமல் இவ்வுலகில் எந்த அனுவும் அசையாது.   வலிகளை யெல்லாம் விழிகளில் காண்பிக்காத என் அன்னையே. 

 உன் இன்பத்தை உனக்குள் வைத்து எங்கள் இன்பத்தில் இன்பம் காண்பவளே.                 

ஆயுள் முழுதும் ஓய்வே இல்லாமல் உழைப்பவளே.  உடல் தேய்ந்து உள்ளம் தேய்ந்தாலும் ஊக்கத்தை ஊட்டுபவளே.        பெண்மையே போற்றும் பேரழகே.                                      நீ இல்லாமல் குடும்பமே தன் சுழற்ச்சியை நிறுத்திவிடும்.                  சமையல் அறையிலே அதிகநேரம் செலவு செய்கிறாய்.          அன்பையும்,அரவனைப்பையும் உணவாக ஊட்டுபவளே.   ஊக்கத்தையும் அள்ளி தருபவளே.    உன்னைப்போல் நானும் பெண்மையின் மகத்துவத்தை உணர்கிறேன் அம்மா.             ப.லெட்சுமி,திருப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

உயிர் கொண்ட சிலையவள்... 06

அம்மா...
அகிலமெங்கும் ஒலிக்கும்
அழிக்கவியலா மந்திரச் சொல் அவள்
தியாகத்தின் திருவுருவம் அவள்... 

தன்னுயிரை வருத்தி என்னுயிர் தந்தவள்
தன்னுடல் வளர்த்து என்னுடல் காத்தவள்...

தாய்பாலோடு சேர்த்து தாயன்பினையும்
ஊட்டி மகிழ்ந்தவள்... ஆம்... 
அன்பை மட்டுமே அள்ளியள்ளி ஊட்டும்
அட்சய பாத்திரம் அவள்...

அவளிட்ட முத்தத்தின் எண்ணிக்கையோ
முடிவிலியாய் இருக்க...
நானுண்ட எச்சிலையும் 
அமுதமென ருசிப்பவள் அவள்...

அன்னையவள் மடி போலொரு சொர்க்கம்
ஈரேழு உலகிலும் தான் ஏது?..
அவளின் பேரன்பின் முன்னே
பெரிதென்று ஏதுமில்லை இப்பேரண்டம்தனிலே...

உயிர் கொண்ட சிலையாய்
நடமாடும் தெய்வமாய்
நம் முன்னே தோன்றியவள்... 

தனக்கே இல்லா அல்ல அல்ல
தன்னிகரில்லா  சிறப்புகளோடு
தாயவளைப் படைத்திட்ட இறைவனுக்குதான்
எத்தனை கருணை... 

கடவுள் வாழ்வது கருவறையாம்
அந்த கடவுளுக்கே கிடைத்திடா பெரும்பாக்கியம் எனக்கு கிட்டியது
அது.... 
எந்தன் அன்னையவள் கருவறை

தாய் பற்றி கவியெழுத முனைகையில்
தாய்மொழியிலும் வார்த்தைகள் 
வற்றித்தான் போகின்றது...
இலக்கணமும் இலக்கியமும்
ஏதோவொன்றை தேடித் திரிகின்றது...

அம்மா... 
உனைப் பற்றி எழுதா கவிதைதான்
கவிதை ஆகுமா?...
இதோ... உனைப் பற்றி எழுத முனைந்து
தோற்றுத்தான் போகிறேன் நான்.. 

எந்தன் எண்ணங்களும்
எழுத்துருக்களும்
உனக்கே உரிமை அம்மா...

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தாய்மையைப் போற்றுவோம்... 07

உருவம் தெரியாமலே 
கருவில் இருக்கையிலே
நம்மை நேசித்த முதல் உறவு அம்மா
நாம் நேசித்த முதல் உறவும் அவள்தான்...

நமக்கு முகவரி தந்தவளின்
கருவறைக்கு
இணை என்று இந்த
உலகினில் ஏதொன்றும் இல்லை...

அகிலத்தை காண வைத்து
அனுதினமும் மகிழ வைத்து
அணுஅணுவாய் நம்மை ரசித்தவள் அவள்... 

அவரவர் உதிரத்தில் கலந்து
இதயத்தில் உயிராய் வாழும்
உன்னதமானவள் அவள்... 

சுமையென்று நம்மை இறக்கி வைக்கவும் இல்லை
தூக்கம் களைபவனென்று வெறுக்கவும் இல்லை அவள்... 

நம்பசி போக்கிட  தன் பசியை துறந்தவள் அவள்
நம்நலன் காத்திடவே நாளும் உழைத்தவள் அவள்.. 

கவிதைக்குள் அடக்கிடவியலா கலையவள்
நம்மை பற்றி மட்டுமே
கனவு காண்பவள்...

நாம் ஊர் மெச்சிட வாழ்வதைக் கண்டு
உள்ளம் நெகிழ்பவள்
தெய்வமும் அவள் போல் இல்லை...
ஆம்.. 
பாவ புண்ணிய கணக்கு பார்த்து 
கருணை காட்டுவது தெய்வம்
பாரபட்சமின்றி அன்பு காட்டுவதே தாய்மை... 
தாய்மையைப் போற்றுவோம்...

செல்வன் கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@#

அன்னையர் தினம்*08
***********************************
பத்து திங்கள் பக்குவமுடனே சுமந்து/
செத்து பிழைச்சு தந்திட்டாள் அறிவுமுத்து/
நித்தமும் அழகோவிய 
வனப்பாய் மேனியை/
பத்திர மாதத்
தங்கமாய் அழங்கரிப்பாளே/

பாடசாலை சென்று 
பாங்கோடு பரிமாணமடையவே/
பட்டினி வாழ்வையும்
தாங்கிடும் சுமைதாங்கியாய்/
பாச புதல்வனின் 
பசியாற்றிடும்  புனிதமாக/
பகுத்தறிவின் ஆரம்பப் 
பள்ளி ஆசானாயிருப்பவளே/

நிலை குலைந்திடா 
நீதி வாழ்வடையவே/
கலைமகனாக காலம் போற்றும் மன்னவனாக்கிடவே/
சிலையாய் செதுக்கிடும் 
வேளைதனில் தாங்கிடும்/
சிற்பமாக இல்லா பொழுதினில் நெஞ்சமுடைகிறதே/

கட்டியணைத்து கரும்பெனவே வளர்த்த புதல்வன்/
எட்டி உதைத்து எட்டா தூரம்சென்று/
வயோதீக பருவக் குழந்தையாக மாறுகையில்/
வாடி வந்த தருணம்
தேடியென்னபயன்/
கோடி கொடுத்தாலும்
தாயன்பு கிடைக்காதே/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம் 09

'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் என்னை ! 
உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள் என்னை !
உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள் என்னை !
வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள்  என்னை !
மாதர் குலத்தின் மாணிக்கம்  அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் என்னை ! 
கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள்  என்னை !
பாசத்தை மழையெனப் பொழிந்தாள்  அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் என்னை ! 
உயிர்  தந்துப் பெற்றாள்  அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள் என்னை !
மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள்  என்னை !
அன்னையின்றி உயிர்கள்யில்லை, நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !
அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை 
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !              
உலகில் யாரை  மறந்தாலும் நான் ! 
ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்க மாட்டேன் !

 வி.கணேஷ் பாபு, ஆரணி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"அன்னையைப் போற்றுவோம்" 10

அரிவையோ தெரிவையோ
கருவடிக்க மாதாமாதம் தவமிருக்கிறாள்...

வலி உணர்ந்து
மனம் உறைந்து
ஈன்றெடுக்கும் நாழிகைக்காய்
ஏங்கி நிற்கிறாள்...

உயிர் நகைத்து
உடல் இளைத்து
தன் வலி உணர்கையில்
நம் முகம் கண்டு சிரிக்கிறாள்...

பசி மறந்து துயில் மறந்து
தூளி கட்டும் நேரத்திற்காய் காத்திருக்கிறாள்...

காமமே கண்ணென ஆடவர் நினைத்த மார்பினில் அவள் குழவிக்காய்
உணவு சமைக்கிறாள்...

முள் ஒடித்து கல்லுடைத்து
முட்டி நோக வேலை செய்து
மூன்று வேளை உணவளிக்கிறாள்...

சிசுவினது உயிர்வளர்த்து
பசித்திடாத வயிற்றை
தான் மட்டும் பெற்றுக்கொள்கிறாள்...

கருவறையோ கல்லறையோ
எட்டி மிதிக்கும் போதெல்லாம்
என் பிள்ளையென தாங்கிக் கொள்கிறாள்...

பேரழகும் இல்லை
பேரறிவும் இல்லை
ஊரு கண்ணு படுமென
உச்சந்தலை
சுற்றுவாள்...

கடனில் மூழ்கினாலும்
கண்ணீரில் வாடினாலும்
கல்லூரி நாம் படிக்க
கரும்புகையில்
வெந்திடுவாள்...

ஆசைகளும் இல்லை
ஏக்கங்களும் இல்லை
என் பிள்ளை வாழட்டுமென
எண்ணிடுவாள்...

தனக்கென வாழாமல்
நமக்காய் வாழும்
அன்னையைப் போற்றுவோம்...

புலவர் பெ. மீனா,
பட்டாபிராம்,
திருவள்ளூர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம்: 11


அகிலத்தையே தனக்குள் வைத்திருப்பவள் அம்மா.!
அவளின் தாலாட்டின்றி
நிலவும் உறங்கிடாது.!
உடலுக்குள் பத்து மாதங்கள் சுமந்தவள்.!
உயிராய் ஆயுள் முழுவதும் சுமந்திடுவாள்.!

இருளும் சுகமானது
கருவினில் உறங்கிடும் போது.!
வெளிச்சமும் கண்
கூசிடவில்லை அவள்
முகம் பார்த்திடும் போது.!
அவளின்றி குடும்பங்கள் வளர்ந்திடாது.!
அவள்போல் பாசங்கள் காட்டிட இயலாது.!

நீராட்டி ஒப்பனை செய்து
பள்ளிக்கு அனுப்பிட அம்மா.!
விதவிதமாய் உணவு
சமைத்திட அம்மா.!
சமைத்த உணவை
பரிமாறிட அம்மா.!
பாத்திரங்களை சுத்தம்
செய்திட அம்மா.!

துணிகளை சலவை செய்து
மடித்து வைத்திட அம்மா.!
பள்ளி, அலுவலகம் சென்று
திரும்பி வீட்டிற்குள்
நுழையும் போது
அம்மா.!
சமையலறை நுழைந்தால்
அம்மா.!
கவலையில் மடி
சாய்ந்திட அம்மா.!
மகிழ்ச்சியைப்
பகிர்ந்திட அம்மா.!

எதற்காயினும் தேடிடும்
சொல்லும், உருவமும்
அம்மாவாக இருப்பின்.!
அநாதை இல்லம்
அனுப்பிடாது
அரவணைத்திடுங்கள்.!

அன்னையின்றி அகிலமும் இயங்கிடாது என நாள்தோறும் அன்னையை போற்றுவோம்..

முதலில் பேசிய வார்த்தை
'அம்மா'
என் முதல் காதல் நீதானே
அம்மா..!

ஓவியாமாணிக்கம்
ஈரோடு மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 12 அன்னையைப் போற்றுவோம்

அன்பை அள்ளித் தருவதில் அட்சய பாத்திரம் நீங்கள்!

ஆசையாக அரவணைத்து அழைத்துச் சென்றவர் நீங்கள்!

இறைவனின் மறு உருவில் இருப்பதும் நீங்கள்!

ஈதல் குணத்தை நல்கியதும் நீங்கள்!

உள்ளத்தில் நல்லவற்றை விதைத்ததும் நீங்கள்!

ஊராரிடம் நற்பெயரை பெறவைத்ததும் நீங்கள்!

எளிமையாக வாழ கற்றுக் கொடுத்ததும் நீங்கள்!

ஏணியாய் எனை  புகழின்உச்சிக்கு ஏற்றியதும் நீங்கள்!

ஐம்புலனையும் அடக்கி வாழச் சொன்னதும் நீங்கள்!

ஒற்றுமை குணத்தை உணர்த்தியதும் நீங்கள்!

ஓதுவதில் என்னை சிறக்க வைத்ததும் நீங்கள்!

ஔடதமாய் மனதின் காயத்தை ஆற்றியதும் நீங்கள்!

இஃதுபோல் வேறுயார் என வியக்க வைக்கும்,

என் அன்பிற்குரிய அம்மா நீங்கள்..!!

உன் பொற்பாதங்கள் இறைவனின் திருவடிகள்..!!

சு.உஷா, திருவண்ணாமலை.
13

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இப்பிறவி ஒன்று போதாது அம்மா!

என்னை ஈன்ற நாதம் நான் பயின்ற முதல் வேதம்

அம்மா என்ற ஆனந்த கீதம் ஆண்டவனும் அடித்தோழும் பாதம்

தலையில் சுமைதாங்கி தோளில் என்னைத் தாங்கி எண்ணிலா துயரங்களை எனக்காய் நீ சுமந்தாய் அம்மா

எண்ணிலாத் துயரங்களை எனக்காய் நீ சுமந்தாய் அம்மா

என்னை கரை சேர்க்க கலங்கரை விளக்காய் காத்து நின்றாய் அம்மா

சுற்ற மெல்லாம் சும்மா சொல்லொனாத் துயரத்தில் துவண்டு நான் நின்னா என்னை சொல்லால் கரை சேர்ப்பாயே  அம்மா ....

ஆதியந்தமும் அடிதொழுது
ஆகாய கங்கையும் வணங்கிடும் அம்மா

வாடிய போதெல்லாம் எனக்கு துணையாய் நின்றிடும் உன்
கருணையில்
 கரும்பாறையும் கைக்கூப்பி மெழுகாய் உருகிடும்
 உயர் வென்று ஒன்று ஏது தாயே உன்னை தாண்டி ஒன்றும் கிடையாது இடை வந்ததெல்லாம் இமியளவு இருக்காது எனை ஈற்ற உனை வணங்க இப்பிறவி ஒன்று எனக்கு போதாது?  அம்மா!

அம்மா அம்மா...

கவித்தேடல்  எம். மொய்தீன் மத்திய சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆத்திசூடிவரிசையில்
*********
விழிகளில்  வேர்க்கிறேன்...14

அன்னையின் அரவணைப்பில்//
ஆனந்தமாய் விழிமூடி//
இன்பமாய் தாலாட்டுப் பாடி//
ஈகைத் திறன் கொண்டு//
உலகமே தாய்மடி என்றிருந்து//
ஊரெல்லாம் போற்ற//
என் அம்மாவை முத்தமிட//
ஏக்கமாய் ஏமார்ந்து//
ஐயத்துடன் நான் தேட//
ஒன்றே உலகம் தாயியெண்றிருந்து //
ஓசைப்படாமல் என் பின்னால் நிற்க//ஔவ்வளவும் கனவாகி போனதே//
ஃக்தே மெய்படாமல்//
---------------------------------------
கவிந்தளிர்.பிரபா
கோயம்புத்தூர்

@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம்! 15


இறைவனுக் கில்லாத வரமாய்

இறை தந்த வரமானாள்...

ஈரைந்து மாதங்கள்

இன்னல்கள் பல அடைந்தாள்

பத்தியங்கள் பல காத்து

பக்குவமாய் ஈன்றெடுத்தாள்

உயிர் போகும் வழி கடந்தும்

உவகையுடன் கையிலேந்தினாள்

உதிரத்தைப் பாலாக்கி பசிபோக்கி

பாசத்துடன் நீராட்டுவாள்

அமுதுடன் அன்பையும் – நற்

பண்ணையும் சேர்த்தே ஊட்டுவாள்...

தத்தி நான் நடக்கும் போது

எத்தி தானும் நடந்திடுவாள்

மழமை மகிழ்வு காண்பாள்

பள்ளி சென்று படிக்க

பணிவிடைகள் பல செய்வாள்

பாடம் சொல்லித் தந்து

பாதி வழிக்கும் வந்திடுவாள்

நோயெனக்கு வந்த போது

நோவினையால் நீ துடித்தாய்

ஊர் உறங்கும் வேளையிலும்

உறக்க மின்றி தவித்தாய்

வீட்டிலுள்ள அனைவருக்கும்

அறுசுவை உணவு தருவாள்

அடிச் சோற்றை கறிச் சட்டியில்

அள்ளி வைத்தே உண்பாள்

பட்டம் பெற்று பாரினில் உயர

பகலிலும் கனவு காண்பாள்

பிள்ளைகள் வாழ்வு வளம் பெற

பிரார்த்தனைகள் பல செய்வாள்

உயர் தரம் ஆன பின்பும்

உணவை ஊட்டியே விடுவாள்

படித்த விட்டு தூங்கும் வரை

பக்கத்திலே அமர்ந்திருப்பாள்

இரு சடை பின்னி விட்டு

அழகைப் பார்த்து இரசிப்பாள்

அன்புடன் அரவணைத்து – எனக்கு

ஆசை முத்தம் தருவாள்

தன் உயிரையே – அன்று

என் உயிராக்கியவள்

என் கனவையே – இன்று

தன் கனவாக்கினாள்

தியாகத்தின் திரு வுருவாய்

திகழுகின்றாள் பாரில்...

இத்தனையும் செய்த தாய்க்கு

என்ன செய்வோம் கைம்மாறு...

சொர்க்கம் முழுவதையும் அவளுக்கு

சொந்தமாக ஆக்கினாலும்

பெற்ற தாய்க்கு ஈடாகாது

பட்ட சிரமத்துக்கு சமனாகாது...

அன்னையைப் போற்றுவோம்

அன்புடன் அரவணைப்போம்

அன்னையர்த் தினத்தில் மட்டுமல்ல...

அகிலம் உள்ளவரை...!


த.வேல்முருகன், ஈரோடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@:

அன்னை 16


அகிலம் காக்க இறைவன் அனுப்பிய//

கடவுளின் தூதராய் அவனியிலே அன்னை//

கருவிலே சுமந்து கருத்தாய் ஈன்றெடுப்பாள்//

தூக்கம் தொலைத்து பிள்ளையை வளர்ப்பாள்//

பட்டினி கிடந்து பிள்ளையின் பசியாற்றுவாள்//

பாரினிலே பகலவனாய் உலவிட செய்வாள்//

துன்பம் மறைத்து இன்பம் தருவாள்//

சுற்றமெல்லாம் தூர விலக்கினாலும் துயரம் மறைத்தே//


தரணியிலே தங்கம் போல் வளர்ப்பாள்//

ஒவ்வொரு பிள்ளையின் முன்மாதிரி அன்னையே//

அன்பையும் அரவணைப்பையும் மனதில் விதைப்பவள்//

பகைவனையும் நேசிக்கும் பக்குவத்தை கொடுப்பவள்//

அன்னையே அனைத்துமாய் அகிலம் ஆள்பவள்//

சி. சங்கீதா
கிருஷ்ணகிரி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம் 17

அன்னை நல்கிய அமுதான தென்றல்
பன்முக தோற்றத்தின் பாசக் கற்றல்
என்னை வளர்த்த உலகின் ஓவியம்
தன்னைச் செதுக்கிய தாய்மையெனும் காவியம்

தாய்மை பேசும் தனிமை உள்ளம்
தூய்மை காணாத தோல்வியும் பள்ளம்
தோய்வு வந்தால் துணிவும் அன்னை
ஓய்வில்லா உழைப்பே உயர்த்தும் உன்னை

காலமும் நேசி கலைமகள் அன்பை
ஆலமர விருட்சமாய் அன்னையின் பண்பை
நீல வானின் நித்திரை காட்சியாம்
ஆலய வீட்டின் அன்னை ஆட்சியாம்

பெண்மை போற்றும் பேரின்ப வாழ்வு
பண்பாட்டில் தோன்றியதா..? பதுமையின் தாழ்வு
எண்ணத்தில் வீசட்டும் எழிலான செங்காற்று
தண்ணீரின் நலவாழ்வு தாய்மையின் பூங்காற்று


ஈ.தவணிதன்,
பல்லடம்.

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 அன்னையைப் போற்றுவோம்18

தவமாய் தவம் இருந்து ஈன்று எடுத்த பாலகன் எவ் வகையில் உனக்கு கைமாறு செய்து கடன் தீர்ப்பேன் என்று தெரியவில்லை

உன்னக்கு என் மேல் இருக்கும் அன்பு விண்ணுள்ள வரை
மண்ணுள்ள வரை என்றும் மறவாது

என்னுடைய துன்பத்தில் இன்பத்திலும்
என்னுடைய கஷ்டத்திலும் நஷ்டத்திலும்
என்னுடைய தோல்வியிலும் வெற்றியிலும் பங்கு கொண்டு யாராவது தாழ்த்தும் போது எனக்கு எப்பபோதும் துணையாய் இருப்பவளே...

நான் தவறுகள் செய்யும் போது பொறுமையாய் என்னை நல் வழி படுத்தியவளே

நான் கேட்ட முதல் இசை உன் இதயத்தின் துடிப்பு அம்மா..

நான் பேசிய முதல் வார்த்தை அம்மா என்ற வார்த்தை தான் அம்மா

நான் பயின்ற முதல் பள்ளி உன் கருவறை தான் அம்மா

உன் இமை போல் என்னை அனுதினம் காத்த உனக்கு எத்தனை தைவங்கள் வந்தாலும் ஈடாகுமா அம்மா..

உன்னுடைய இந்த உறவு எனக்கு இன்னும் பல ஜென்மங்கள் வேண்டும் அம்மா

எனது தாயின் உறவை தொடர விடு இறைவா..

உயர்வுக்கு வழிவகுக்கும் உறவே நீ தான் அம்மா

கவிஞர்:- ரிப்னா ரஸாக்
 இலங்கை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

அன்னையைப் போற்றுவோம் 19

கருவாக்கி உருவாக்கி
உயிராக்கி பயிராக்கி
உலகில் நிலைநிறுத்திய
தலவிருட்ச மானவளே!
தலைதாழ்த்தித் தொழுவேனே!
மலையாக உயர்வேனே!

கண்ணுக்குள் மணியாக
மணிக்குள் ஒளியாக
சிறகுக்குள் எனைக்காத்த
சிந்தனைப் பெட்டகமே!
நிழலாகத் தொடர்வேனே!
நீலக்கடல் கடப்பேனே!

பாசமெனும் போர்வைக்குள்
பத்திரமாய் பாதுகாத்து
கலங்கரை விளக்கமாக்கி கருத்துப்பாடம் தந்தவளே!
ஆசானின் அடிபணிந்து
தேசமெங்கும் சிறப்பேனே!

அன்பின் அச்சாணியே;
பண்பின் பசுங்கிளியே!
போற்றித் துதிப்பேனே;
ஏற்றம் பெறுவேனே!...

கவிஞர்.ஆசிரியர்.க.தேவிகா
தூத்துக்குடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம் 20

ஈரைந்துதிங்கள் பனிக்குடத்தில் பத்திரமாய்  எனைக்காத்து தொப்புள்கொடி மூலம் பக்குவமாய்
பாங்காய்  ஆகாரமளித்து,
கருசுமந்த நாள்முதல்
எனக்காய் நோன்பு உற்றவளே! வைரமே,
வைடூரியமே!

பெற்றெடுத்த மகவுகளை பாரபட்சம் பார்க்காது
பாசமழையில் நனைத்திடும், தேவைகளை தேடி,தேடி பூர்த்தி
செய்திடும் முத்தே!முத்தாரமே,முகிலே!

அ _உயிரெழுத்து;
ம் _மெய்யெழுத்து;
மா_ உயிர்மெய்யெழுத்து;
கலந்து உயிரும்,மெய்யுமாகி
உயிர்மெய்யாய்,
உயிரிலே, உணர்விலே கலந்த மாணிக்கமே! மணிமகுடமே!

காடு,மேடு,கழனி,
இரவு பகல் பாராது
இன்பம்,துன்ப வேளையில் சோராது
முகமலர்ந்து காத்திடும் தூயவளே!
நான் நேரில் கண்ட தெய்வமே!

தாயாய் தாங்கள் எனக்குக் கிடைத்தது
நல்பாக்கியமே;
பொன்னே! பொற்சித்திரமே!

தவமின்றி கிடைத்த நல்வரமே! கோமேதகமே!கிடைத்தற்கரிய
கோப்பையே!

தலைவலி என்றாலே துடித்திடுவாய்;
பெரும்
நோயென்றால் உயிரே போக நோய்நீங்கிடும் வேளைவரை கசாயம் தான் ஏற்பாய் தங்கமே!
நல்நெறி காட்டி அறவழியில் வளர்க்கும் அறிவின்
சுரங்கமே!

பிரசவ நேரத்தில் அறுவைச்சிகிச்சையில் அசைவற்று நான்கிடந்த வேளையிலே
மகள் ஈன்ற மகவுதனையும் காத்து ,எனைக்காத்த அவ்வேளை ,
இவ்வேளை நினைத்தாலும்
நெஞ்சம் மகிழுது உனை அன்னையாய்
கிடைத்த தருணத்தை நினைத்து! பொக்கிஷமே! பொன்குடமே!

வாழ்வியல்/ நேர்மறை
எண்ணங்களை இதமாய்,பதமாய் கற்றுக்கொடுத்த வேதாந்தமே! என்சித்தாந்தமே!

நான்பட்ட கடன்தீராதம்மா! இதை எப்படி தீர்ப்பேனம்மா?

என்றும் தங்கள் அன்புமழையில் நனைந்திடும் மகள் இவள்!

ந.ராஜசுலோச்சனா,
ஆவடி,திருவள்ளூர்
மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 அன்னையர் தின வாழ்த்து கவிதை! 21
--------------------
மண்ணில் பிறந்திட்ட எல்லோரும் அன்னையின் கருணையாலே

அவள் மடியில் தவழ்ந்திட்ட  சுகம்தான்
இனிவருமோ?

கண்ணை  இமைபோல்
காத்திட்டவள் அன்னயன்றோ!

  உயிர்பெறவே தன் உதிரம் தந்து உடல் வலிமைபெறவே நல்லமுது தந்தே

கண்ணை இமைபோல் காத்தவள் நம் அன்னயன்றோ!

அன்னையை போல்
அவனியில் யாருமுண்டோ?

அடுத்து வந்த உறவுகளெல்லாம்
அத்தெய்வத்திற்கு ஈடாகுமோ?


மண்ணில் பிறந்திட்ட உயிருக்கெல்லாம் அன்னையன்றோ முன்னறி தெய்வம்!

மற்றவரெல்லாம்  அவருக்கு பின்னவர் தானே!

தாய்க்கு பின்னரே தாரமென்பார்
தாயை மறந்தவர்
தன்நிலை இழந்தவராவார்!

அன்னைக்குண்டோ
அடைக்கும் தாழ் என்பார்!

அன்னையை மறப்பது நன்றல்ல  என்றும் நம் அன்னையே நமக்கு துணை!
                  அன்புடன்,
துளசி கிருஷ்ணன்,
சென்னை 600125.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 அன்னையர் தினக்கவிதை 22

சுமையையும் சுகமென கருதியே சுமப்பாளே/1
இமையிலே
வைத்துதான்
என்னையும் வளர்த்தாளே/2
 சாதனையும் செய்திடும் திறமையும் உடையவளே/3
சோதனையும் தகர்த்திட சோர்வினைக் காட்டாளே/4
 பெற்றவள் தாயவள்
பிள்ளையே செல்வமாகும்/5
உற்றவளாய்
உரிமையாய்
உதவிட
வந்திடுவாள்/6
 ஆயிரம் உறவுகள்
அவனியில் இருந்தாலும்/7
பாயிரம் சொல்லியே
பணிவுடன் வணங்கிடுவேன்/8 தன்னலம் நீக்கியே
தாயவள் காப்பாளே/9
என்னலம் தன்னயே
எப்பவும் நினைப்பாளே/10
 அன்னையே அனபையும் அறிவையும் தருவாளே/11 பொன்னுமே வேண்டிடாள் பொருளுமே தேடிடாளே/12
 உன்நலம் ஒன்றையே உளமதில் கொள்வாளே13
 சோதனையை கடந்திட துணிவிணைத் தருவாளே14
வேதனையை விரட்டியே
வெற்றியைத் தருவாளே15
 என்றுமே கருதுவாள்
ஏற்றமாய்
வாழ்ந்திடவே/16 அன்பினை தந்துதான்
ஆற்றலை கூட்டுவாளே/17

குழந்தையாய் மாறியே குதூகலம் கொள்வாளே/18
பழங்கதை பேசியே
பரவசம் கொள்வாளே/19
அழுகையை நிறுத்தவே
அணைத்து தேற்றுவாளே/19
வழக்கமாய் பேசியே
வசந்தமே காட்டுவாளே/20

நோயுமே நோக்கிடாள்
நோகவிடாள் என்னையேதான்/21
பாயிலே படுத்தாலும்
பாங்குடன் காப்பாளே/22
அன்னையின்
அன்பே அகிலத்தில்
உயர்ந்தது/23
ஆண்டவன் அன்பும்
அதற்கினை  ஆகிடாதே/24

அரங்கநாயகி கண்ணன் தருமபுரி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம்  23

முனைவர் இரா சீதா, புனித பிலோமினாள் கல்லூரி, மைசூர்

என் தாய்க்கு நான் கண்ணனாக இருந்ததில்லை!
குகனைப் போல உற்ற துணைவனாகவும் இல்லை!
பரதனின் காலடி மண் கூட என்னில் ஒட்டவில்லை!
வாரி வழங்கும் கர்ணனாகவுமில்லை!
அவளின் கூன் விழுந்த முதுகில்
நான் போடும் என் கவலைகள் ஏராளம்!
என் கண்ணீர் கொட்ட கொட்ட
எனைப் பார்ப்பாள்!
சோக மூட்டைகளைச் சுமப்பதால்
வலிதான் உயிருக்கு !
மறந்து விடு, இல்லை சிரித்து விடு!
மண்ணைக் கீறிக் கொண்டுதான்
விதை கூட வெளி வருகிறது!
வலியில்லையா மண்ணுக்கு?
வலியென்னும் பிரசவத்தில்தான்
சிந்தனையென்னும் வலிமையான
கரு உருவாகும்!
சிந்திப்பதை சுயமாய் கொண்டுவிடு!
உறிஞ்சிய நீரைகூட
மேகம் கொட்டிதான் போகிறது!
எதுவும் யாருக்கும் சொந்தமில்லை!
உன்னுடைய குடுவை காலி என்கிறாய்!
ஓட்டையாய் அடுத்தவனின் பாத்திரம்
இருக்கிறதே!
நிறைவாக்கு உன் நிச்சயப் பொழுதை!
நாளை தேர்வாகும்
என்கிறாள்!
தாயே!
தெறிக்கிறது உண்மை உன் வார்த்தையில்!
ஆனால் என் பிழைப்புதான்
உணர மறுக்கிறது!

முனைவர் இரா சீதா, இணைப் பேராசிரியர், புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

அகரத்தில் தொடங்கி என் சிகரம் 24

மாய உலகின் மந்திரச்சொல் அம்மா

நமக்காக துடிக்கும் நலன் விரும்பி

 தன்னலன் விரும்பா சிறந்த தியாகச்சுடர்

மெழுகாய் உருகி ஒளி கொடுப்பவள்..

 கோடி கோடி வார்த்தைகள்  விரல்களில்

நர்த்தனம் ஆடினாலும் உன் தியாகத்தை எடுத்துரைக்கும் வார்த்தை எது?

 அம்மா என்ற சொல்லால் அனைத்து உறவுகளையும்

 கண்முன் கொண்டு வந்தாய் தோழியாய் தாயாய்

 சகோதரி வரம் தரும் தேவதை

கேட்காத வரத்தை தரும் பராசக்தி

 தாயின் வடிவினில் உலா வரும் தங்கத் தாரகை

உயிர் கொடுத்த பிரம்மாவே

என் பெயருக்கு பின்னால் இருக்கும்

 உயிர்மெய் எழுத்துகளுக்கு சொந்தக்காரி

 என் தலையெழுத்தை திருத்தி பிரம்மாவே

 குறைகளை கூறப்படும் உலகில் என்

நிறைகளை நிதர்சனம் செய்த பொக்கிசம்...

முனைவர் ப. விக்னேஸ்வரி,
 உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம் 25

அளவில்லா அன்பை
 அகத்தில்  கொண்டும்

அனுபவத்தின் அறிவில் ஆலமரமாய் நின்றும்

சுயநல வார்த்தைக்கு
 பொருள் புரியாதவளோ

சுதந்திர உலகில்
 வீட்டுச் சிறையில்//
 
 விரும்பியதையும் விட்டு
கொடுக்கும் தன்மையும்

விருப்பமில்லை என்றாலும்
சகிக்கும் பெண்மையும்

அம்மா என்ற
 மூன்றெழுத்தில் அடங்குகிறது

அகிலத்தில் உள்ள
 அத்தனை தியாகமும்//

உதிரத்தில் தோன்றிய
 கருவிற்காகவே வாழ்பவள்//

உயிர் உள்ள
 வரை மட்டுமல்ல

உயிர் துறந்தாலும்
 உடனிருக்கும் தெய்வம்//

உலகமே இவளாகி
 போனதால் தான்

உடம்பில் வலித்தால்
 உதட்டில் உதிக்கும்

உன்னத பெயர்
 அவளின் நாமமாகிறதோ//

அண்டமே அலறும்  
 படி கொண்டாடுவோம்//

அன்னையர் தினத்தில்
 மட்டும் அல்ல//

ஆயுட்காலம் முடியும்
 வரை//

கவிஞர் சக்திப்பிரியா ஜோதிராஜ் கோவை

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தாய்மை எனும் பூங்காற்று 26


தவமாய்ப் பலர் இருக்கத் தவமெனமே/

என்னை வந்து சேர்ந்தாயோ கண்மணியே/

வரம் எனவே நீ எனக்கு வந்தாயோ/

தாய்மை எனும் பூங்காற்றைத் தந்தாயோ/

ஆண்களுக்கே கிடைக்காத பாக்கியம் தாய்மை/

பெண்ணிற்கு மட்டும் கிடைத்த பரிசு/

ஒரு உயிரை உள்ளே வளரச்
செய்யும் வியப்பு தாய்மை/

கருவறையை விடப் பாதுகாப்பான அறை /

உலகினில் வேறு எங்கும் இல்லை/

பத்து நிமிடம் சுமந்தாலே தோல் கனக்கும்/

பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கணக்காது/

வலி என்றால் உயிர் போவது/

தாய்மையின் வழியோ உயிரைப் பெற்றெடுப்பது/

பிடிச்சோற்றைக் கூட அதிகம் ஏற்காத வயிறு/

உயிருள்ள ஒரு சிசுவை தாங்குகிறது/

தாய்மையின் மகத்துவம் தான் ஏராளம்/

இப்படி அன்னையின்‌ பெருமை ஆயிரம்/

எனக்கு உயிர் தந்து உலகை/

காட்டிய கடவுளின் உருவமே நீயே!

வலியோடு என்னைச் சுமந்தாலும் மகிழ்வோடு /

என்னை வரவேற்றாய் இந்தப் பூமியிலே/

உன்‌‌ அன்புக்கு ஈடு இல்லை இந்த உலகில்/

அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அம்மா! : 27


உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த உயிர்மெய் எழுத்தே அம்மா!
 
தமிழ் மொழியின் இனங்களில் மெல்லினம் அம்மா!

தகப்பனின் உயிரணுக்களுக்கு வடிவம் கொடுப்பவள் அம்மா!

குழந்தைக்கு தகப்பனை மட்டுமின்றி உலகத்தையும் அறிய வைப்பவள் அம்மா!

தன் வயிற்றை சுருக்கி பிள்ளைகள் வயிற்றை வளர்ப்பவள் அம்மா!

தன் ஆசையை நெருக்கி பிள்ளையின் ஆசையை தீர்ப்பவள் அம்மா!

அங்கத்தில் குறைவான கணவனையும் ஆண்டவனாய் போற்றுபவள் அம்மா!
வீட்டில் பின் தூங்கி முன்னெழும் காவல் தெய்வம் அம்மா!

தன்வலி  , தன்னுள் எழும்வலி மட்டுமின்றி தற்கொண்டார் வலியையும் மனதில் போற்றி காக்கும் பொக்கிஷம்  அம்மா!

கிடைத்த வருவாயை பெருக்கும் அட்சய பாத்திரம் அம்மா !
குடும்பத்தில் சுயநலமற்ற பொதுநலவாதி அம்மா !

தான் உருவாக்கும் உயிர் உயிர் போல் வெளிவர தன் உறக்கத்தை
 துறந்தவள் அம்மா !

தியாகத்தின் திருவுருவம் கடவுளின் மறுவடிவும் அம்மா !

எல்லா பணிகளுக்கும் ஓய்வுண்டு - அம்மா எனும் அற்புதப் பணித்தவிர.

தான் ஏழையானாலும் தன் பிள்ளையை- ராஜா போல் வளர்ப்பவள் அம்மா !

தன் உதிரத்தை உணவாக்கும் மந்திரவாதி  அம்மா !
 
உழைப்பை உயர்வாக்கும்
கம்யூனிசவாதி அம்மா !

வீட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றெண்ணும் பொதுநலவாதி அம்மா !

அன்பை கொடுப்பதில் காதலனாய் ,

அறிவை கொடுப்பதில் ஆசானாய்
பண்பை கொடுப்பதில் பாட்டியாய்,

மனிதத்தை கொடுப்பதில் தேவதையாய்

வாழ்ந்து காட்டும் மனித தெய்வம்  அம்மா  !

என் தாயே ! உன்னை நான் அம்மாவாக்கினேன்.

என்னை நீ அனைத்தும் ஆக்கினாய்.

_கவிஞர். லோ. வரகுண பாண்டியன் உத்திரமேரூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

 அன்னையின் அன்பு: 28

கருவாக எனை சுமந்து
உருவாக்கி ஈன்றவளே!

உன் உயிராக எனை நினைத்து
உலகுக்கு தந்தவளே!j

இரவினிலே உறங்காமல்
எனக்காக விழித்தவளே!

உன் இளவயது காலத்தை
எனக்காக கழிச்சவளே!

உன் உதிரத்தை பாலாக்கி தந்தவளே!

நீ பசியாரும் வேலையிலே
என் அழுகுரல் கேட்டு
உன் பசியை நீ மறந்து
என் பசியாற்ற வந்த தேவதையே

பாரம் என்று நினைக்காமல்
பத்து மாதம் உன் கருவறையில் எனை சுமந்தவளே!

அம்மா அம்மா என்று சொன்னால்
தெய்வம் கூட வரும் பின்னால்!

அம்மா என்னும் நாமம்
அகிலம் போற்றும் மந்திரம்!

என் சகலமும் நீ
நான் தினம் தேடும்
உயிரும் நீ....

அம்மா அம்மா அம்மா

பெயர் :. த.சுகந்தலா தேவி
ஊர் : மேல ஆத்தூர், தூத்துக்குடி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 29
 அன்னையைப் போற்றுவோம்...

 கருகாத்த தாயே உயிர் கொடுத்த உயிரே!

 நான் வாழ நீ உன் குருதியை உணவாக்கினாய்!

 எழுந்து நடக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தவள் நீயே!

 ஒவ்வொரு நொடியும்ஓய்வு எடுக்காத காவியம் நீயம்மா!

 அன்னையே முதல் தெய்வம் என ஆன்றோரும் சான்றோரும் வழிகாட்டினர்!

 உன்னை தாங்கி நான் காக்க வேண்டும்!

 உன் மடி மீது துயில் கொள்ள வேண்டும் அம்மா!

 இன்னும் பல ஆண்டுகள் என் உடன் நீ
 இருக்க வேண்டும்


 வணங்குகின்றேன் தாயே உன் பிள்ளை நானே!

 கவிஞர்
 இரா. வாசுகி பொன்னரசு அரசு அரசு பள்ளி ஆசிரியர்,

கள்ளக்குறிச்சி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையர் தின கவிதைப் போட்டி 30

தன்னை   உருக்கி  என்னை தந்தவள்
கண்ணின் மணியாய் என்னை காப்பவள்
தண்மை என்றும் மனதில் உள்ளவள் - தனி
தன்மை வாய்ந்த கடவுள் போன்றவள்

அன்பு பாசம் மிகுதி கொண்டவள்
அகிலமே அவளாய் ஆகி நின்றவள்
தாயைப் போலொரு உறவு ஏதுமில்லை - என்
தாய் என்பாருக்கு எதுவும் நிகரில்லை

வேஷம் இல்லா உறவே தாய்தானே
வேறு உறவுகள் எல்லாம் கீழ்தானே
தாய் அன்புக்கு மாற்று ஏதுமுண்டா? -மன
நோய் தீர்க்கும் மருந்தே தாய்தாண்டா

அன்னையை போற்றி வணங்கி வாழ்ந்திடு
அவள் அன்பினாலே தினமும் மகிழ்ந்திடு
சொல்லால் அன்னையர் தினமென உரைக்காதே -நீ
நல்லாள் என்பதை செயலில் காட்டிடு

தகடூர் சு.தமிழரசன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தலைப்பு: தாய்மை 31

 

பத்து மாதம் சுமந்த தாய்//
உயிர் உள்ளவரை அன்பு கொண்டவருக்கே//
விட்டு கொடுத்து வாழ்ந்து செல்கிறாள்//
தன்னலம் கருதாத் தாய் தெய்வமாய்//
பிறர் நலம் வாழ்நாளில் பேணியே//
தன் வாழ்நாள் கழிக்கும் அன்னையாய்//
உழைப்புக்கு உன்னத எடுத்துக்காட்டு தாய்//
தன் பணியையும்
சரியாக செய்கிறாள்//
வீட்டுவேலையும் கடமையை சரியாக செய்கிறாள்//
சுதந்திரம் இல்லாத கூட்டு கிளியாய்//
வாழும் அன்னையர்
பலர் உலகில்//உனக்கு ஒருநாளே அன்னையர் தினம்// கொண்டாட்டம் வருடமுழுதும் உழைப்பவள் நீ//
பெற்றோரை விட்டு
மணவீடு தியாகம்//
மாமியார் கணவருக்கு எண்ணத்தில் தியாகம்//
பிள்ளைகளுக்கு தன் ஆசையில் தியாகம்//
வருடம் முழுதும்
வீட்டிற்காக உழைக்கும்//
உனக்கு ஒருநாள் கொண்டாட்டம் போதாது//
உழைத்து தன்னைத்
தியாகம் செய்து//
பிறருக்கு உயிராய் இருந்து தேய்ந்து//
பிறரை கவனித்தே
தன்னை பாரமால்//
உழைக்கும் தாய் கடவுளுக்கு மேலானவள்//
கண் எதிரே காணும் தெய்வமகள்//
உயிரினும் மேலானது அன்னை உறவு//

 

கவிஞர்,
சி. சிவப்பிரியா,
பொன்செய்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

32.அன்னையர் தினம்

கவிதைப் போட்டி
அன்னையைப்
போற்றுவோம்

வதைப்பதில் தன்னையும்
விதைப்பில் என்னையும்
விளைவித்தாய் .

அன்னையே போற்றி போற்றி.

தளர்வதில் தாங்களும்
வளர்வதில் நாங்களும் என்று.

வாழ்க்கையை நகர்த்தினாய் அன்னையே போற்றி போற்றி.

நீ விழுந்தாலும் தன்னை இழந்தாலும் எம்மை
திகழச்செய்தாய் உலகம்  புகழச் செய்தாய்
புண்ணிய அன்னையே போற்றி போற்றி .

பிணி உம்மை பிடிப்போடு
பிடித்த போதும்.

பசிபட்டினி அறியாதவனாக எமக்கு
சுடச்சுட பால் சாதமும் ஊட்டச் சத்துக்களும்
ஊட்டி ஊட்டமளித்த
உத்தமியே அன்னையே போற்றி போற்றி.

இடியோசை இசைத்து விட்டால் போதும்
இறைவனையும் .

அர்ச்சுனனையும் எம்மை
அழைக்கச் சொல்லும்
பாதுகாப்பு பேழையே
பத்தரைமாத்து தங்கமே
பத்தினிப் பெண் தெய்வ
அன்னையே போற்றி போற்றி.

எமக்கு நோய் போகும் வரை உமது
வாய் திறந்து நீர்கூட அருந்த மறுக்கும் .

அருந்தவ தேவியே அன்னையே போற்றி போற்றி.

தப்புத்தப்பாய் செலவு செய்யும் அப்பாவை
தண்டிக்காமல் .

கண்டிப்பாக்கி கருணையின் வடிவாய் வாழும் தினங்களை
வசந்த காலமாகவும் இசைந்த கோலமாகவும்
செதுக்கிய சிற்பியாம் அன்னையே போற்றி போற்றி.

நினைவில் வாழும் தெய்வத்தாயே
கனவுகளின் மட்டுமாவது வந்து எம்மை தாலாட்டு பாட்டு பாடி மடிமீது மறுபடியும் தூங்க வை
மங்கையர் திலகமே
அன்னையே போற்றி போற்றி.

உறுதி மொழி

இது என் சொந்த படைப்பு
இக் குழுவிற்கும் மட்டுமே எனது இக்கவிதையை தருகிறேன் என உண்மை சான்றளிக்கிறேன்.

எண்ணமும் கவிதையாக்கமும்

ஆளுமைச்சுடர்
கவிஞர்
முனைவர்
அரங்க சக்திவேல் வணிகவியல் துறை
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி விருத்தாசலம் .

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையர் தின கவிதைப் போட்டி..
@@@@@@@ (33

ஈறைந்து மாதம்
கனவு கண்டாவள்..

என்னைக் கண்டு
வலிகளை மறந்தாள்

தன்னைத்தானே செதுக்கி
என்னை ஈன்றாள்..

தேய்பிறையாக காயங்கள் வளர்பிறையாக நான்..

கனவுகளை மறந்து  நினைவுகளுக்கு உயிரோட்டினாய்..

இன்னும் இன்னும்
சொல்லிட தோணுது..

உன் அன்புக்கு
அகிலமும் சும்மாதான்..

பெற்றெடுத்த சிற்பியவள்
முத்தாக நான்..

இன்னும் இன்னும்
என்ன சொல்ல..

மறுபிறவி இருந்தாலும் உனக்கே மகனாககுனும்..

என்னை மருதாணியாக
பூசிய மரகதமே..

வாழ்நாள் உள்ளவரை  
போற்றுவேன் அம்மா..

ப.பரமகுரு s/o
பச்சையப்பன்
செஞ்சிக்கோட்டை

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம்(34

இரு ஐந்து மாதம் கருவில் சுமந்து//
வலியில் துடித்து எம்மைப் பெற்றெடுத்து//

உதிரத்தை உருக்கி பாலாய்த் தந்து//
பேதையாய் தானிருந்து//
மேதையாய் எம்மை வளர்த்து//

தன் வலியை மறைத்து//
நமக்கு நல் வழியைக் காட்டி//

தன் தூக்கம் கலைத்து//
எம்மை தன் மடியில் தூங்க வைத்து//

பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்த//
அன்னையைப் போற்ற இவ் ஒருநாள்
போதாததே!//

அன்னையே என் ஆயுள் முழுதும்//
உன்னைப் போற்றி பணிந்திட வேண்டும்//

உன் பாதம் தொட்டு//
நாள்தோறும் வணங்கிட வேண்டும்//

டினோஜா  குணசேகரம்
சங்கானை  யாழ்ப்பாணம்

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம்( 35

ஐயிறு திங்கள் கரு சுமந்து
தன் மூச்சினால் உயிர் தந்து
உதிரத்தைப் பாலாக்கி
உணவெனவே  அளித்திடுவாள்
அகரத்தை நான் கற்க
அறிவின் சிகரமாக்கினாள்
அவள் தேவை அதை மறந்தே
பிறர் சேவை தினம் புரிந்தே தியாக உருவின் தீபமெனத் திகழ்ந்திடுவாள்
தவறுகள் செய்கையிலே
தண்டித்தலைத் தவிர்த்துச்
சின்னக் கண்டிப்புடனே செல்லமாய்த் திருத்திடுவாள்
ஆண்டவனைத் தேடியே ஆலயம்தனை நாடாமல்
அன்புத் தாயவளைத் தெய்வமெனப் போற்றிடுவோம்
உறவு சொல்லி அழைக்க
ஆயிரம்பேர்இருக்க
அன்னையெனும் சொல்லிற்கு அடுத்து
நிகரிலையே
தான் பசித்த
வேளையிலும்
தன் மகவின் பசி தீர்த்து
சேய்உண்ட மிச்சமதை
மகிழ்வுடனே
புசித்திடுவாள்
ஈன்ற பொழுதினும்
பெரிதும் உவந்தே
என்னைச் சான்றோன்
ஆக்கி
கற்றோர் உற்றோருடன்
களித்திருக்கச் செய்திட்டாள்
நல் ஆசானாய் தானிருந்து
என்னையும் தன்வழியில்
ஆசானாக்கினாள்
அன்னையவள் மண்ணை விட்டு
மறைந்தாலும்
கண்ணின் மணியாகி
என்னுள் ஒளியாகி
விண்ணுறைத் தெய்வமாய்
வேண்டும் வரம்
வழங்கிடுவாள்

அ. இராதா  ,  திருச்சி
 

*****************************************************************************************

அன்பின் ஆளுமை. ( 36
********
அம்மா-என்னில் பதிந்துள்ள அன்பின்
ஆளுமை கண்களை கலங்க வைக்கிறது ...

பாகுபாடு பார்க்கத் தெரியா பாசக்கார
பாலை ஊட்டி வளர்த்தவளே...

நடிக்கத் தெரியா நன்னடத்தையுடன்
நடைவண்டி நடக்க பழக்கியவளே...

தன்னலம் கருதா தன்மானத்துடன்
தரணியில் வாழ்ந்து காட்டியவளே..

இறுமாப்பு இல்லா இன்சொல்லால்
இரும்புக் கதவைத் திறந்தாயே...

இன்முகத்துடனே இனியவை தினம்சொல்லி
இரவென்றும் பாராமல் வளர்த்தவளே...

என் பிள்ளைதனை தள்ளாத உன் வயதில்
கால்கடுக்க சுமப்பவளே...

என் கண்கள் கலங்கினால் உன்
கண்கள் நீரால் பனிக்குதே...

ஆயிரம் உறவுகளை கடந்துவிட்டேன்
உன் நினைவுகளை கடக்க முடியவில்லையே...

நீ கடந்துசென்று விட்டாய்-உன்
அன்பின் ஆளுமை என்னை ஆளுகிறது.....

ம.லீமா ரோஸ்
திருநெல்வேலி.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையை போற்றுவோம் ( 37

என்பிள்ளை என்குடும்பம் என்வீடென
எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து
நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும்
நலம்வாழ  இறைவனையும் வணங்கிடுவாள்

கணவனின் துயர் நீக்கும் காசுக்காக
கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள்
கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும்
கருணையே வடிவான பெண்மையும்  போற்றிடுவாள்

விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன்
வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள்
விரும்பியதை  ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு
வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள்.

அன்பையே போதிக்கும்  அன்னைய வளுக்கு
ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்

ந. மாரியப்பன்,
 முதலாம் ஆண்டு, கணிதவியல் துறை,
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை


********************************************************************************************************

அன்னையைப் போற்றுவோம்!  (38

அம்மா அம்மம்மா சொல்லத்தான் இங்கு முடியாதம்மா!
அப்பா அப்பப்பா சொல்லவே சொற்கள் இல்லையப்பா!
உயிரை உருக்கி ஊணில் குழைத்து உருவாக்குபவளப்பா!
தவமாய் தவமிருந்து ஈரைந்து மாதங்களில் ஈனுபவளப்பா!

சின்னாபின்னமானாலும் அவள் தியாகத்தின் சின்னமப்பா!
தனக்கென்று வாழாமல் தன்மக்களை வாழவைப்பவளப்பா!
அன்பையே அனுதினமும் அருமையாய் ஊட்டுபவளப்பா!
பண்பையே மக்களுக்குப் பாங்காகக் கூட்டுபவளப்பா!

நடையாய் நடை நடந்து நடைபயில வைப்பவளப்பா!
பேசாமடந்தையாய் இருந்து மக்களை ஊர்பேச வைப்பவளப்பா!
கல்வியில் கரைசேர்க்க தன்னையே மூழ்கடிப்பவளப்பா!
தூங்காத இரவுகளாக்கி, மக்களைத் தூங்கவைப்பவளப்பா!

கண்ணீரைத் தனக்குள் வைத்து, பன்னீரைத் தெளிப்பவளப்பா!
தலைகுனிந்து வேலைகள் செய்து தலைநிமிர வைப்பவளப்பா!
குடும்பத்தின் தூணாய் இருந்து, தாங்கிப்பிடிப்பவளப்பா!
குதூகலம் வீடெங்கும் பொங்க உற்றாரைச் சேர்ப்பவளப்பா!

அயராது உழைக்கும் அகிலத்தின் உயர் தொழிலாளியப்பா!
ஆண்டவனே ஆச்சரியப்படும் அற்புதமான படைப்புதானப்பா!
தாயாக மட்டுமின்றி, தந்தையாகவும் இருப்பது உண்மைதானப்பா!
அம்மம்மா...! அப்பப்பா.. ! உலகுக்கே இது வியப்பே அப்பா..!
-டி.என். இமாஜான், சிங்கப்பூர்


*********************************************************************************************************

அன்னையர் தினக் கவிதைப் போட்டி
புலனக் குழு ( 39


தன்னை உருக்கி யே
   தன்பிள்ளைக் காப்பவள்
என்னதவம் செய்தோம்நாம்
   இப்பிறப்பில் - என்றைக்கும்
அன்னையும் தந்தையும்
   முன்னறி தெய்வம்தான்
அன்னையே அன்பென் றறி..!

நேரிசை வெண்பா

========
அன்னையும் தந்தையும்
   அன்பின் உருவில்
       அமுதமழை
தன்ன லமதைத்
   தவிர்த்த மனிதரில்
       தெய்வமன்னை
மன்னு முயிரில்
   மனிதரில் நேயம்
       மிகுந்தவளாய்க்
குன்றாக் கனிவைக்
   குழந்தைக் கமுதாய்க்
       கொடுப்பவளே.!

கட்டளைக் கலித்துறை
அடிதோறும் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் மட்டுமே வரும்

========
உதிரப் பாலை ஈந்தவளே
  உனக்கே ஈடும் இணையுமிலை.!
மதியைத் தந்த மூலமவள்
  மங்கா அன்பில் மகிழ்பவளே.!
புதிய உறவைப் பிறப்பிக்கும்
  பிள்ளைச் செல்வப் பிறப்பிடமே.!
கதியே எவர்க்கும் நீதானே
  கருவைச்  சுமக்கும் காருண்யள்.!

             அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
=====
பெருவை கி.பார்த்தசாரதி
நங்கநல்லூர், சென்னை :: 600061

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"அன்னையை போற்றுவோம்" ( 40

கூந்தல் மல்லி
இல்லத்தை கவர்ந்திடும்

நெற்றிப் பொட்டு
மங்களம் தந்திடும்

செங்கரும்பு பேச்சி
அறிவை வளர்த்திடும்

சேலைத் தொட்டில்
இசைகள் பிறந்திடும்

வரைந்த கோலங்கள்
உள்ளத்தை மயக்கிடும்

பார்க்கும் பார்வையில்
கவலைகள் மறைந்திடும்

அறுஞ்சுவை உணவில்
நோய்கள் இறந்திடும்

சூரியன் விழிகள்
இருளை நீக்கிடும்

அருகில் நின்றாலே
பாசம் அனைத்திடும்

தலாட்டு பாட்டு
நிம்மதியைக் கொடுத்திடும்

முகத்தை நினைத்தலே
மனகுறை தொலைந்திடும்

அன்பாய் அழைத்தலே
பசியும் பறந்திடும்

கதை சொன்னலே
செவிக்கு குளிர்ந்திடும்

மலர்ந்த சிரிப்பு
ரசிக்க வைத்திடும்

அன்னையார் தினம்
நினைக்க வைத்திடும்

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்
நாடு: மலேசியா

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"அன்னையை  போற்றுவோம்"  ( 41

 பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி, சீராட்டி என்னை வளர்த்தாய் அம்மா

 பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில் பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு அம்மா

 கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில் கேட்காமல் கொடுக்கும் தெய்வம் அம்மா

 அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்

 கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சின  உறவேதும் உலகில் இல்லை .

வெ. யோகசுதன்
சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

அன்னையைப் போற்றுவோம்  ( 42


பத்து மாதம் சுமந்தவளே அம்மா!

 பாலூட்டித் தாலாட்டி வளர்த்தவளே அம்மா!

 பாட்டுப்பாடி உறங்க வைப்பவளே அம்மா!

 கைப்பிடித்து நடக்க வைத்தவளே அம்மா !

நிலாவைக் காட்டிச்சோறு ஊட்டியவளே அம்மா!

 இனிமையாகப் பேச  வைத்தவளே அம்மா!

 பொட்டுவைத்துப் பூவைத்து ரசிப்பவளே அம்மா !

விதவிதமாக
உடையணிந்துப் பார்ப்பவளே அம்மா!

 பண்பையும் பணிவையும்
பகிர்ந்தயளிப்பவளே
 அம்மா!

 கருணையும் கனிவையும்
கற்றுத்தருபவளே
அம்மா!

ஒழுக்கத்தையும் உண்மையும்
உணரவைத்தவளே அம்மா!

குடும்பத்தின் குத்துவிளக்கா இருப்பவளே அம்மா!

அன்றும் இன்றும் என்றும் அம்மா !

என்று சொல்லுவோம் மனமகிழ்ச்சி கொள்ளுவோம்!

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.


கி.மோனிஷா இளங்கலை இலக்கியத்தமிழ் இறுதியாண்டு
சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி கடலூர்

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம்...( 43

திங்கள் முழுவதும் திகட்டாமல் சுமந்தவளே
வலிகள் யாவும் எனக்காய் பொறுத்தவளே
குருதி நிறைத்து கும்பி பிளந்தவளே
என் பசியை பாலால் நிறைத்தவளே
அன்பை முழுவதும் எனக்காய் தந்தவளே
அகிலம் யாவையும் சுற்றி காட்டியவளே
விரல்கள் பிடித்து தமிழை கற்பித்தவளே
நிலவைக் கட்டி கையில் கொடுத்தவளே
விரல்கள் கோர்த்து வீதியில் நடந்தவளே
மகிழ்ச்சி யாவையும் எனக்காய் மகிழ்வித்தவளே
பெண்மையை மதிக்க பண்பை தந்தவளே
உலகை ஆள வீரம் படைத்தவளே
நானும் கவித்தொடுக்க வரியை தந்தவளே
வாழ்வை முழுவதும் எனக்காய் அமைத்தவளே
பசிகளை தாங்கி பாசத்தை நிறைத்தவளே
வறுமை இல்லாமல் வானத்தைத் தந்தவளே
நடக்கும் பாதையில் நற்றமிழை கற்பித்தவளே
விழிகள் இரண்டையும் விழிக்கச் செய்தவளே
முந்தானையில் தொட்டில் கட்டி மூச்சடக்கியவளே
குருதி சேனையில் என்னை வீரனாக்கியவளே
நோவு என்றதும் துடித்துப் போனவளே
கண்கள் மூடாமல் காத்து நின்றவளே
முத்தங்களால் நிறைத்து மூச்சை தந்தவளே
புரண்டு படுக்காமல் தூக்கத்தை தொலைத்தவளே
எனக்கே என்னை தந்திட்ட என்னவளே
என் வாழ்வின் வரம் நீயே...

என்றும் வாழ்வோம் தமிழோடு
கவிதையின் மழலை
கவிஞர் முனு.சரோ.சரத்குமார்
அரசம்பட்டு கள்ளக்குறிச்சி...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

"தாய்மை போற்றும் தாரகை "  44


கருவுற்ற காலம் முதல் மகிழ்ந்து
மசக்கையால் மெலிந்து
வயிறு புடைக்க நான் வளர்ந்து
காணக்கிறதே என்று கலங்காதவள்
என் விருப்பத்திற்கு உண்டவள்
இதயத்தின் மொழி புரிந்து இன்புறுபவள்
என் அசைவால் ஆர்வம் கொண்டவள்
நிறைகூடி பிரசவிக்கும் நேரம்
பிரபஞசத்திற்கு என்னை அழைத்து வந்தாள்
வலியென நீ துடிக்க, விழித்திறக்காது நான் பிறக்க
மிளிர்ந்த நட்சத்திரமாய்
கடவுள் காட்டிய நான் விளித்த முதல் தேவதை -அம்மா

தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி, முதலாம் ஆண்டு, மா. சங்கீதா

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


என்  தாயெனும்  தெய்வம்.  (45
===================
உன்  முகம்  காண தவிக்கிறேன்.

உன்  முந்தானை  பிடித்து  நடக்க வேண்டும் அம்மா.

உன் பேச்சை  கேட்காத நான் நீ பேசுவதை  கேட்டு  கொண்டே  இருக்க வேண்டும்.

உன்  கையால்  ஒருபிடி  சோறு  ஊட்டிவிடும்மா.

இரவில்  தனியாக தூங்க பயமா இருக்கு வாம்மா.

உன் சொற்படி  நடக்கிறேன்  மீண்டும்  வாம்மா.

ஊரில்  என்னை அனாதை  என்கிறார்களே  ஏனம்மா.

நான்  அழுதால் தாங்க மாட்டாயே கண்ணீரை துடைக்க வாம்மா.

பூக்களை  தொடுத்து  எனக்கு  சூடுவாயே என்  தலையில்  நார் கூட இல்லையம்மா.

பசித்தால்  தாங்கமாட்டாயே  சாப்பிட்டாயா என கேட்க யாருமில்லை அம்மா.

தெருமுனை வரை நான் செல்வதை இனி யார்  பார்ப்பார்கள்.

என் தாயெனும் கோவிலை அல்ல தெய்வத்தை காக்க மறந்த பாவி நான்.

என்னவெல்லாமோ உன்னிடம்   சொல்ல வேண்டுமே அம்மா.

இறைவா இந்த உலகில் எனக்கு எதுவும்   வேண்டாம்.

என் தாயை  மட்டும்  தந்துவிடு.

தமிழச்சி மா.சித்ரா.
தருமபுரி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம்!  ( 46

 ‘அ’ முதல் ‘ஔ’ வரை – ஒவ்வொரு வரியிலும் தாய்)

அன்பைக் கொடுத் ’தாய்’  
அறிவைக் கொடுத் ’தாய்’
அகிலத்தைக் காட்டிக் கொடுத் ‘தாய்’

ஆதரவைக் கொடுத் ’தாய்’
ஆடையைக் கொடுத் ’தாய்’
ஆசையை நிறைவேற்றிக் கொடுத் ’தாய்’

இனிய சொற்கள் கொடுத் ’தாய்’
இன அடையாளம் கொடுத் ’தாய்’
இமையாய் என்னைக் காத் ‘தாய்’

ஈகையைக் கற்றுக் கொடுத் ’தாய்
ஈசனை வணங்க வைத் ‘தாய்’
ஈனோர் போற்ற வைத் ‘தாய்’

உணவைக் கொடுத் ’தாய்
உறவைக் கொடுத் ‘தாய்’
உயிரைக்கொடுத்து வளர்த் ’தாய்’!

ஊக்கம் கொடுத் ’தாய்
ஊதியம் கொடுத் ’தாய்
ஊதுவத்தியாய் மணக்க வைத் ’தாய்’

எச்சரிக்கை செய் ’தாய்’
எடுத்துக்காட்டி வாழவைத் ‘தாய்’
எய்யாமை போக்க வைத் ‘தாய்’

ஏடு படிக்க வைத் ‘தாய்’
ஏணியாய் ஏற்றி வைத் ‘தாய்’
ஏராளம் செய்து தந் ‘தாய்’

ஐயத்தைத் தீர்த்து வைத் ‘தாய்’
ஐயனாய் ஆக்கி வைத் ‘தாய்’
‘ஐ’ யெனவே வியக்கவைத் ‘தாய்’

ஒழுங்கீனத்தை விலக்கி வைத் ‘தாய்’
ஒற்றுமையைக் கற்றுக் கொடுத் ’தாய்’
ஒப்பற்றவனாய் வாழ வைத் ‘தாய்’

ஓடமாய் கரை சேர்த் ‘தாய்’
ஓவியமாய் பேசவைத் ’தாய்’
ஓவாத பணி செய் ‘தாய்’

ஔடதமாயிருந்து சரி செய் ‘தாய்’
ஔதாவில் ஏற்றி வைத் ‘தாய்’
ஔவையாய் அறிவுரை செய் ‘தாய்’  

ஆகவே,
 அன்னையே உன்னையே போற்றுகின்றேனே!

 -டி.என்.இமாஜான், சிங்கப்பூர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 தாய் இல்லாமல் நான் இல்லை  (47

 மெத்தை போல் மென் வயிறும்//

மொத்தமாய் உன் உயிரும் என //

சுத்தமாய் என் உதிரம் முழுவதும்//

நித்தமும் தாயே நீயே கொடுத்தாய் //

உறக்கத்தை மறந்து உதிரத்தை உமிழ்ந்தாய்//


இன்பங்கள் புறக்கணிக்க துன்பங்கள் அரவணைக்க //

துவளாமல் நீயு ழைத்து அன்போடு அரவணைத்தாய்

உயர்வுக்கு என்றும் கண் விழித்தாய்//


கண்ணுக்குள் எனை வைத்து காப்பாற்றினாய் //

காவலுக்கு இமைகள் வைத்து சீராட்டினாய் //

ஜென்மம் என்று எனக்கு இருந்தால் //

பிறந்தவுடன் நான் கண் விழிப்பேன் //

தாயாக நீ  /இல்லை  என்றால்  //

தயங்காமல் அன்றே
னான் உயிர் துறப்பேன் //

யுகம் பல ஆனாலும் நான் //

உன் முகம் காண தவமிருப்பேன் //

 இரா.கீதாலட்சுமி  கோவை மாவட்டம்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

: கண்முன்னே வாழும் தெய்வத்திற்கு அர்ப்பணம்   (48
 

சுமைகளை சுகமாக ரசித்து வாழ்பவள்  அன்னை

காண முடியாத சொர்க்கத்தை நமக்கு காட்டியவள் அன்னை

நினைத்து நொடியில் நமது தேவையை அறிந்தவள் அன்னை

நாம் செய்த தவறுகளை பொறுமையுடன் நமக்கு புரிய வைப்பவள் அன்னை

விழும் பொழுதெல்லாம் ஏணியாய் ஏற்றி விடுவள் அன்னை

அனைத்து உறவின் ஒரே உருவமாய் நிற்பவள் அன்னை

தனது ரத்தத்தை பாலாக்கி அமிர்தமாய் தந்தவள் அன்னை

ஆசனாக வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பவள்  அன்னை

நம்மை அலங்கரித்து ரசித்துப் பார்ப்பவள் அன்னை

கைமாறு எதிர்பாராத கருணை உள்ளம் அன்னை

கண் கலங்கி நிற்கும் வேளையில் அள்ளி அணைப்பவள் அன்னை

இன்பத்தை மட்டும் வெளிகாட்டி துன்பத்தை தன்னுள் வைப்பாள் அன்னை

மூன்று தெய்வங்களின்  ஓர் அருள் பெற்றவள் அன்னை
**************
கருவறை தெய்வங்களாகிய அன்னையர்களுக்கு எனது மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்...

க.சைலஜா கணேசன் கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

அன்னையைப் போற்றுவோம்( 49
************************************

முகமதைப் பார்க்குமுன்பே/
அகமதை ஈர்த்த பண்பே//
சுகமதை வார்க்க என்றும்//
பகரமாய்க் கோர்க்கும் நன்றும்//
இகபரம் இரண்டிலுமே//
சக அருள் திரண்டே//
சிகரமாய் மின்னிடும்//
நிகரற்றவள் மண்ணிலும்//

பத்துமாதம் சுமந்தெடுக்கும்//
பத்திரமாய் வளர்த்தெடுக்கும்//
உத்தமப் பிறவியவள்//
சத்திய உறவவள்//
நித்திலம் உள்ளவரை//
நித்திய உள்ளத்தவள்//
வித்தையாய்த் தழைத்திட//
சித்தமாய் உழைப்பவள்//

தாயின் பாதத்திலே//
சேயின் சாதகமே//
நேய சுவர்க்கமும்//
வாய்க்கும் எவர்க்குமே//
கோயிலாய்ச் சிறந்தவள்//
தாயாகப் பிறந்தவள்//
வாயார வாழ்த்தியே//
தேயாமல் வாழ்வோமே//

அன்னையைப் போற்றுவோம்//
இன்னல்கள் போக்குவோம்//
யன்னல்கள் திறப்போம்//
நன்மைகள் நிறைப்போம்//
தன்மையாய் நறுமணம்//
பன்மையாய்ப்  பெற்று தினம்//
இன்மைகள் இல்லாமல்//
மேன்மை வெல்வோம்//

பஸ்லா பர்ஸான் 
காத்தான் குடி 
இலங்கை

*****************************

       ***அன்னையர் தினம் ***  (50
 
உதிரத்தில் உறைந்த ஒருதுளியை  //
 
உருவமாய் வார்தெடுத்து உலகிற்கு //
 
உயிர் தந்த தேவதையின் தியாகம்   //
 
போற்றிடவே இத்திருநாள் உருவானது //
 
ஈறைந்து மாதங்கள் கருவினில்  - நமை //
 
சுமந்து இரவுப்பகல் பாராது தன்னுறக்கம் //
 
தொலைத்து கண்விழித்துக் காத்துக்கிடந்து //
 
     இரத்தத்தை பாலாக்கி நித்தமும் சோறூட்டி  //
 
     மகிழும் அன்பின் அடிப்படை அவள் //
 
     நாம் மீண்டும் அமரமுடியா சிம்மாசனத்தின்  //
 
     பொக்கிஷ புதுமை நகல்  - இவ்வுலகின்  //
 
     ஒப்பிட இயலா உன்னதம் அவள்   //
 
     அன்னைக்கு ஆலயங்கள் கட்டாவிடினும் சரி //
 
     அன்பு செலுத்த முற்படுவோம் - ஆதரவையும் //
 
     அரவணைப்பையும் தாய்க்கே உரித்தாக்குவோம் //
 
     அன்னை என்ற ஒற்றை சொல்லில் தான் //
 
     பிரபஞ்சத்தின் மொத்த உயிர்களும் சுவாசம்பெற்று //
 
     மோட்சம் பெறுகின்றதென்பதே நிதர்சனம் //
 
       மதிப்புறு முனைவர் .நா.பாரதி  ( கள்ளக்குறிச்சி ) 
     @@@@@@@#@@@@@@@@@@@@@@@@@@@@
 
*தான் எழமுடியாமல் படுக்கையில் இருந்தாலும்,* ( 51


கால் பாதங்கள் இரண்டும் வீங்கி நடப்பதற்கே சிரமமாக இருந்தாலும்,  *தன்பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் உடனே தன்னால் முடிந்ததைச் செய்ய உத்வேகமாக கிளம்பிவிடும் உயிர்தாய்.*
     தள்ளாத வயதிலும் 
தைரியத்தை தனக்குள்ளே வைத்திருக்கும் மகாசக்தி.
     *பாரபட்சம் பாராமல் பக்குவமாய் தான் பெற்ற பிள்ளைகளை பாதுகாக்கும் பாசத்தாய்.*
     தன்னலம் தவிர்த்து
சேய்நலம் காக்கும்
குடும்பசேனையின்
குலவிளக்கு.
     *பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், தொல்லைகள் இல்லாமல் வாழ தினமும் தியானிக்கும் தீரமகள்.*
     தந்தையைவிட எப்போதும்
ஒருபடி உயர்ந்து நிற்கும்
ஒப்பற்ற குடும்பத்தலைவி.
     *அன்பை அளவிற்கு அதிகமாக தனக்குள்ளே உற்பத்தி செய்து பகிர்ந்து கொடுக்கும் தொழிற்சாலையின் தொழிலாளி, முதலாளி.*
     கஷ்டப்பட்டு நம்மை வளர்த்து
உருப்படியாக்கிய 
உன்னத தாயை
உள்ளம் நெகிழ 
எப்போதும் நம் அரவணைப்பில் காப்பதே நம் கடமை.
    *அன்னைக்கு என் வாழ்த்துகள்* 
அன்பின் அடிமை, 
 பிரபு கிருஷ்ணன்.
கோவில்பட்டி.

@@@@@@@@@@@@@@
*அன்னையைப் போற்றுவோம்* (52


அகிலத்தின் அடித்தளம்,
அனைத்திற்கும் ஆதாரம்.
மூன்று வார்த்தையில்
யாவும் அடங்கும்,
மூவுலகும் உன்னுள்ளே அடக்கம்.

அன்னையைப் போற்றிட ஒருநாள் போதுமோ?
அன்றாடமும் அம்மாவே
வணங்கும் இறையல்லவோ!


போற்றுதல் கவிதையை
வரைகின்றேன்  என் வார்த்தையில்.

வாசித்தெனை வாழ்த்திடுவாய்  
உந்தன் ஆசிகளால்..

இறை படைத்த பொம்மைக்கு,
கருவறையில் இடம் தந்தாய்.

துளிவழி உரு தந்து,
கொடிவழி உயிர் தந்தாய்.

இதயத் துடிப்பின்  இன்னிசையால்,
தாலாட்டு் கீதம் இசைத்தாய்.

உதைத்திட்ட என் கால்களுக்கு
இதமாய் முத்தமழை பொழிந்தாய்.

ஊண் உறக்கம் தொலைத்து,
என் உயிர் சுமந்தாய்.

எனக்கு பிறவி தந்திட,
செத்து உயிர் பிழைத்தாய்.

உயிர் குறைக்கும் வலிதாங்கி
இதழில் நிறை புன்னகையுடன்

சீம்பால் உடனே ஊட்டியவளே!
எப்படி சொல்வேன் நன்றியுனக்கு...

இதழ் சொல்லில் உரைத்து
கவி மடலில் வரைவது 

 ஈடிணை ஆகாது உனக்கு...
ஆதலால் தாயே 
காத்திருக்கிறேன் நான்..

அடுத்ததொரு பிறவியெனில்
எனக்கு நீ சேயாக
உனக்கு நான் தாயாக..

வர வேண்டி காத்திருக்கிறேன் 
வரம் வேண்டி தவமிருக்கிறேன்.

அன்னையே 
உனக்காக காத்திருப்பது ..
என் விழித்திரை மட்டுமல்ல 
என் கருவறையும்...


ஆவலுடன்
உன் தாயாக தவமிருக்கும் செவிலியசேய்

இர.பாக்யலட்சுமிசுந்தரம்.
கோவை

@@@@@@@######@@@@@

அன்னையை போற்றுவோம் (53
***************************************

முற்ச்செடி நடுவே பூத்த செடி போல் ஆகின்றேன் //

தாயே நீ இல்லா அந்த ஒரு கணத்தில்//

கல்லான  கடவுளை  நீ கை கூப்பச்சொன்னாய்//

கண்கண்ட தெய்வமே நீ கரம் பிடித்து சென்றாய் //

கோவில் கருவூலத்தை விட தாயே உன் கருவறையில் மீண்டும் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்//

கோவம் கொண்டவனும் மதி மயங்கி போவான்//

உன் மடி மீது உறங்கும் பொழுதில்//

தாயே என்னை வயிற்றில் சுமந்தாய்
தெய்வமாய் என்னை விட்டு பிரிந்தாய்//

மறுமுறை உன் மகளாய் பிறக்க நினைக்கிறேன்//

அம்மா என்று கதறும் முன்னே.‌‌
ஐயோ என பதறிடுவாய் //

வலியால் நானும் துடித்து அழ..
உன் மொழியில் என் வலி மறப்பேன்//

முன்னூறு நாட்களாக உன்னில்
சுமையான என்னை சுகமாய் ஏற்றாயே//

உயிரை பிதுங்கி உயிர் கொடுத்தவளே//

கல்லும் சுமந்தாய் மண்ணும் சுமந்தாய் எனக்காக//

பெற்றெடுத்த தெய்வமே கைமாறு ஏது செய்வேன்//

மீண்டும் ஓர் ஜென்மம் இருப்பின்...
உன் மகளாக நான்//

இப்பிறவியில் என் இதய சிம்மாசனத்தில் அரசியாக நீ//


கவிதாயினி 
அபிதா.வி
மூணார்.

@@@@@@@@@@@@@@@

தலைப்பு: *அன்னையை போற்றுவோம்* (54

தமிழிலே சிறந்த சொல் அன்னை/
தனக்கெது பிடிக்குமென தன்பிள்ளைக்கு காட்டாது/
உழைக்கும் தியாக வர்க்கம் அன்னையே/
ஒற்றை நொடி காலனின் பாதத்தை /
ஒற்றி தன்னுயிரை பணயம் வைத்தவள்/

 உதிரமதை பாலாக்கி பசியை போக்குபவள்/
உன்னத அன்பை வாரி பொழிபவள்/
அல்லி விழி மூடாமல் விழித்திருப்பாள்/
அல்லும் பகலும் பிள்ளைக்காய் வாழுபவள்/
ஞாலம் வரும்முன்னே ஞானத்திற்கு அத்திவாரமிட்டவள்/
ஞாபகம் வைத்தே பாராட்டி சீராட்டுபவள்/

 துயரங்களை தனக்குள்ளே புதைத்து புன்னகைப்பவள்/
துணிந்து போராடும் வல்லமை கொண்டவள்/
உலமதில் உன் புகழ்பாட புலவனில்லை/
உன் அன்புக்கு ஈடேது அன்னையே/
தரணியின் சுவாசம்நீயே சிரம்தாழ்த்தி போற்றுகிறோம்/
 *எம்.லீலா வினோதினி ராஜூ*
 *இலங்கை*
 
@@@@@@@@@@@@@@@
*அன்னையைப் போற்றுவோம்!* (55

அன்பின் வேரவள்.
ஆற்றலில் புவியவள்!
இன்பத்தை மட்டுமே
ஈன்றவள் ஊட்டுவாள்!

துன்பத்தைத்  தாங்கியே
துவளாது உழைப்பவள்!
என்பசி பொறுக்காள்.
தன்பசி மறைப்பாள்!

நோயினில் நானிருந்தால்
நோகாது  செவிலியாவாள்!
பாயினில்  படுக்காது
பார்த்தே  கவனிப்பாள்!

ஓய்வெடுக்காத்  தொழிலாளி!
உதவுவதில்  முதலாளி!
தேயாத நிலவுஅவள்!
எனக்கான பௌர்ணமி!

ஏழெட்டுப்  பிள்ளையையும்
சரிசமமாய்ப். பார்த்திடுவாள்!
ஏறெடுத்துப் பார்க்காதப்
பிள்ளைகளை என்னென்பது?

செக்குமாடாய் உழன்றவளும்
செயலிழந்து போய்விட்டால்
வக்கற்ற சீவனாய்
தெருவினிலே 
கிடந்திடுவாள்!

படிக்க வைத்த 
பாவத்துக்குக்
கிடைத்த பலன்
இதுதானோ?

காலமெல்லாம் உழைத்தவளைக்
கண்ணின் கருமணியாய்க்
காத்திடுவீர்!

கடமைதனை மறக்காதீர்!
நாளையுங்கள் கதியிதுதான்!
கனவினிலும்
மறக்காதீர்!

*முனைவர்.கிருட்டிணதிலகா*
போரூர்.
சென்னை.

@@@@@@@@@@@@@@
அன்னையைப் போற்றுவோம்! (56

பாடும் தாலாட்டில் பண்பினை ஊட்டி
ஊட்டும் பாலில் உணர்வினை செம்மையாக்கி
செம்மை வளர்ப்பினில் உயர்வினை உண்மையாக்கி
உண்மையை உள்ளத்தில் உறுதியின் உரமாக்கி
உரமாய் வாழ்வுக்குத்  தன்னையே தருபவள்!
அம்மா என்ற சொல்லில் அமிர்தம்
ஆய வளம் அத்தனையும் சொரிந்திடும்!
இல்லைஇல்லை இன்னலென இன்முகம் காட்டும்
ஈன்றவள் திருமுகம் திருவினை  கூட்டும்!
உன்னத அன்னைக்க இணை இங்கே யாதுமில்லை! 
ஊழ் வினையும் அடி பணியும் (அவள்) உழைப்பின் முன்னே!
மானுடம் தழைக்க இறைவனின் கொடை
              "அம்மா"!!!

@@@@@@@@@@@@@@

அன்னை மடி மறப்பேனா..  (57
_________________________

அன்பென்னும் மழை ஆசையாய் பொழிந்திட... 
இன்புற்று என்றும் ஈதலோடு வாழ்ந்திட... 
உடலென்ற ஊண் கொடுத்து... 
என்னாளும் ஏக்கம் கொள்ளாது... 
ஐந்திணை சுற்றிலும்... 
ஒன்றும் நேராது
ஓடிவந்து உன்னடி சேர்ந்தாலும்... 
ஔடதம் தேடாமல் உன்னன்பு தேடும்
அருமை மகவுக்கு. 

என்னியது எல்லாம் கிடைத்து இன்புற்று வாழ, 
தன்னுதிரம் ஈந்தவளே உனக்கு 
தக்காருமில்லை மிக்காரும் இல்லை...

உயிரொன்று உள் வந்து உதிரம் உண்டு உருபெற்று  உடல் பெருத்து உபாதைகள் பொருத்து உள்மூச்சு வாங்கி நான் இவ்வுலகைக்காண உன் சுகத்தையும் சுவையையும் தள்ளி மூச்சடைக்கி மூர்ச்சையாகி முனகலிட்டு கூச்சலோடு இவ்வுலகிற்கு என்னை கொண்டு வந்து சேர்த்தவளே உன்னை நான் முதியோர் இல்லத்தில் சேர்ப்பேனா...? 

சேராத இடம் சேர்ந்தாலும் கூடுவார் பேச்சைக் கேட்டாலும் கேடு எனக்கென்று கெஞ்சி உறைப்பாயே...

கொஞ்சி விளையாடி கொடுமைகள் பலப் பட்டாலும் கோபம் காட்டாமல் என்கூடப் படுத்துக்கொண்டே உலகத்தை எனக்குறைப்பாயே...

நீயுறங்க நான் தனிப்பாய் விரிப்பேனா...? 
இத் தரணியில் இழி பிறப்பென்று வாழ்வேனா...? 

ம. கரிகாலன் புதுச்சேரி

@@@@@@@@@@@@@@@
அன்னையர் தினம் (58

அன்னயே நீ ஒரு தெய்வம்
தெய்வத்தின் மறு வடிவம் அன்னை
உதிரத்தை பாலாக்கி தருகிறாள்
அன்பின் உறைவிடம் அன்னை
பண்பின் பிறப்பிடம் அன்னை
தன் சேய்க்கு ஒரு துன்பம் என்றால்
தாய் பதறிபோய் சேவை செய்வாள்
கணவனுக்கான பணிவிடையும் செய்வாள்
பெற்ற மகனின் கடமை தாயை காப்பது
இன்றைக்கு மட்டும் அல்ல
என்றைக்கும் அன்னையை போற்றதல் நன்று. 
தன் அனுபவத்தால்,  அன்னை ஒரு சிறந்த நிர்வாகி , குடும்பத்தின் வரவு செலவு அறிந்து தேவைகளை நிர்வகிப்பவர்
முத்தேவியின் வடிவம் அன்னை
பொறுமையின் மறுவடிவம் அன்னை
சிறு பெண்ணையும் அன்னையாக அழைப்பது நம் பண்பாடு
போற்றுவோம் என்றேன்றும் அன்னையை

கவிஞர் லலிதா  ஷ்யாம்
மதுரை.

@@@@@@@@@@@@@@

*அம்மா*.(  59

        தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று எனக்கு தெறியாது… ஆனா அன்பு என்ற சொல் நிச்சயம் அம்மாவிடம் இருந்து தான் வந்துருக்கும்… இந்த உலகத்தில் எனக்கு இறைவன் கொடுத்த முதல் முகவரி அம்மா…தன் உயிரைக் கொடுத்து, மற்றொரு உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம், அம்மா!உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியத சிம்மாசனம் தாயின் கருவறை!அம்மா என்றால் அன்பு. அன்பின் வழியது உயர்நிலை என்பதை தாரக மந்திரமாய் சுமந்து வாழ்வின் எப்படியிலும் நம்மை தாங்கி நிற்கும் அன்னையவளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்               ஈ. வாசுதேவன் தமிழாசிரியர் ஶ்ரீ வெஙகடேஸ்வரா சர்வதேச மேலநிலைப் பள்ளி, கோபி, நாமக்கல் மாவட்டம் .

@@@@@@@@@@@@#@

அன்னையர் தினம்--- கவிதை. ((60
அன்னைக்கு நிகர் அன்னையே.
               
கருவறையில் சுமந்த கற்பக மரமே!//
திருவுள மென்றும்
தண்ணிழ லாகுமே//
மறுரூபம் பெற்றிட மறிக்கொழுந்தாய்
பெற்றே//
பெரும்வலி பொறுத்து பெட்டகமாய் காத்தாயே!//
              
பத்து மாதம் பத்திரமாய் பாதுகாத்தே//
எத்தனை இடர்வந்தும் எதிர்த்து உறுதியோடே//
சுத்தனாய் பித்தனாய் சுட்டாலும் தந்தையே//
நித்தமும் காத்து நித்திலமாய் பெற்றவளே!//
உறக்கத்தை நீமறந்து உயிரோவியம் என்றெண்ணி//
பிறக்காத நாள்முன்னே  பலநாள் பட்டினியே,!//
பிறந்தும் செழித்து பாரினில் நான்வளரவே!//
துறந்தாய் உம்மகிழ்ச்சி தூயவள் அன்னையே!//

பெண்ணின் முழுமை பெற்றதால் அடைந்தே!//  கண்ணின் மணியாய் கரும்பாய் வளர்த்தே//
தன்னின் மகிழ்வில் தாலாட்டி  தூளிலே!//
மண்ணில் தழைக்கும் மனம்தான் அன்னையே!//
உள்ளத்து  மகிழ்வினி லுதிரத்தில் சுமந்தே!//
பள்ளம்  மேடுதான்  பலவும் தாண்டியே//
கள்ள மில்லாமல் கடுமையா யுழைத்தே! //
எள்ளல் பொறுத்த ஏணிதான் அன்னையே!//

பட்ட பாடுகள் பாரினி லில்லையே//
கொட்டிய உறவின் 
கோமாளிப் பார்வையே!//
வெட்டி உறவினை வேலிஎமக் கமைத்து //.
ஊட்டிய உரையா லுயர்த்திய அன்னையே!//

இடுப்புவலி பொறுத்து என்னைப் பெற்றவளே!//
துடுப்பாய் உம்முடனே தோள்கொடுக்கும் 
வேளையிலே!//
எடுப்பாய் இருக்கும்நீ ஏனோ விழுந்தாய்?//
கடுப்பாய் போனேன் காலனே  ஏன்வந்தாய்?//

இவண்,
இர.அலமேலுரூப்சேகர்,
அரக்கோணம்.

@@@@@@@@@@@@@@

       அன்னையர் தின
கவிதை (61
.......
ஜனனதத்தின்
......... சங்கீதம்

ஊனையும் 
உயிரையும்

ஊன் கருக்கோவில் தாங்கி

உயிர் உளியால் செதுக்கி
உயிர் சிற்பமென வடித்தது

எங்களை வார்த்தெடுத்த தாயே

பாசம் எனும் பாடம்
கற்று தந்த எங்கள்
குருகுல மே... கருவூல மே

உன் பசி முச்சுக் காற்றை விதையாக்கி

உழைப்பை உரமாக்கி

கண்டிப்பை‌ வேலியாக்கி

வாரிசை வளர்கிளையாக்கி 

நீ வார்த்தெடுத்த ஆலமரம்
 நம் வழமைமிகு குடும்பம்

உன் நாவின் சுவையடைக்கி 

உண்ணக் கொடுத்த கனியல்லவோ

நாங்கள் உன்னதமாய் வாழும் சொத்து சுகம்

நீர் துளி நிலம் சொட்ட
நின் நலன் கருதி... உழைப்பில் 
எஃகு என இதயம் உறுதி.,

... தினம்
நினைத்தால் உரையுதே குருதி

சொத்து சொர்க்க கொடை.... உன்
வாழ்வு காக்கும் குடை...

. தாய்
வழங்கியது உண்மை

உயர்வில் தாயை வணங்குதலே மேன்மை


அன்னையே வணங்குகிறோம் உன்னை

உன் வாழ்த்துடன் வைராக்கியம்
பகிர்ந்தளித்தால் 
பாங்குடன் வாழ்ந்திடுவோம்
பாரினிலே தாயே....

திரு மதுரை மைந்தன் 
மதுரை.

@@@@@@@@@@@@@@

அன்னையைப் போற்றுவோம் (62


வார்த்தைகளால்
 உன்னை வர்ணிக்க இயலாது அன்னையே!! 
உற்ற தோழியாய் தோள் கொடுப்பாள்!!
உடைந்து போனாலும் ஆறுதல் கூறுவாள்!! 
சமைக்கும் போது பெரிய காயம் ஏற்பட்டாலும் கண்டுகொள்ள மாட்டாள்!! 
எனக்கு சிறு காயம் என்றாலும் துடிதுடித்து போவாள்! 
எனக்கு உயிர் மெய் கொடுத்தவளே, 
என் உயிரினும் மேலானவள் நீ!! 
மூச்சடக்கி  ஈன்றாள்  என்னை, 
மூச்சுள்ள  வரை காப்பேன் உன்னை. 

 

கவிதை தலைப்பு : அன்னையை போற்றுவோம். 


ச. மதுமிதா,
இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு, 
தூய வளனார் கல்லூரி, 
திருச்சிராப்பள்ளி.

@@@@@@@@##@@@@@@
,,,,,,அன்னையர் தின கவிதை,,,,,, (63

. அழகு கொண்ட அன்பான வார்த்தையோடு பேசும் உள்ளம் இது அம்மாவின் உள்ளம்.. அழகு கொண்ட கோபமான வார்த்தையோடு பேசும் உள்ளம் இது அம்மாவின் உள்ளம்.. என்றும் அடித்தாலும் என்றும் திட்டினாலும் அந்த நிமிடமே மனதோடு மறந்து அரவணைக்கும் உள்ளம் இது அம்மாவின் உள்ளம்.. நம்  கருவறையில் இருக்கும்போதே பிறக்கப் போகும் முன்பு குழந்தை நினைத்து நினைத்து வாழும் உள்ளம் இது அம்மாவின் உள்ளம்.. எப்படி வாழக்கூடாது என்று நினைக்கும் இதயம் எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் இதயம் நம்ம பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் இது அம்மாவின் உள்ளம்.. என்றும் என்றுமே நேசத்தோடு என்றும் என்றுமே பாசத்தோடு நம் முகத்தை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கும் அம்மா நாம் இல்லாத போது நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கும் அம்மா நம்ம அம்மாவின் உள்ளம்.. நமக்கு ஏதேனும் எதிர்பாராமல் நம் உடலில் காயம் ஏற்பட்டால் நம் கண்களில் கண்ணீர் வருவதற்கு முன் பெற்ற மனசு அம்மாவின் மனசு முகத்தோடு கண்ணீர் விடுவேன் நம் அம்மாவின் உள்ளம்.. தான் சாப்பாடு சாப்பிடவில்லை என்றாலும் வருத்தப்படாது நம் பிள்ளை சாப்பிட வில்லை என்று வருத்தப்படுமே அம்மாவின் உள்ளம்.. மற்றவர்களுக்கு வாழ்க்கையை வாழாமல் பிள்ளைக்காக வாழ்க்கை வாழ வைக்குமே அம்மாவின் உள்ளம்.. நம் முகத்தில் சிரிப்பு புன்னகை கொடுத்து மகிழ்ச்சி கொடுத்து என்றும் உறுதுணையாக இருக்க வைக்குமே அம்மாவின் உள்ளம்.. மனதிற்கு வளர்ச்சி கொடுத்து நம்பிக்கை கொடுத்து தைரியம் துணிச்சல் கொடுத்து வாழ்க்கை வாழ வைக்கமே அம்மாவின் உள்ளம்.. பிள்ளை வாழ்க்கை வாழ்க்கையில் பாதி காலம் தன் வாழ்க்கையே இழக்கும் உள்ளம் நம் அம்மாவின் உள்ளம்.. நான் என் வாழ்க்கையில் ஒரு பக்கம் அம்மா என் வாழ்க்கையில் மறுபக்கம் இறைவன் என் வாழ்க்கையில் புது பக்கம் நமக்கு என்றும் அம்மா அம்மாவின் உள்ளம் நமக்காக,, என்றும் உங்கள் கவிஞர் சுஜி மாதேஸ் கிருஷ்ணகிரி,,

@@@@@@@@@@@@@@@@

*அன்னையர் தின கவிதை :-* (65

உலகமெல்லாம்
 உனை
 புகழ
 உலகம்
 அறியாது
 இருப்பவள் 
 *அம்மா* ..

 வெள்ளை
 சட்டை
 நீ போட
 வெயிலோடு உறவாடுபவள்
  *அம்மா* ..

 கல் சுமந்தேனும் 
மண் சுமந்தேனும் கல்லூரிக்கு 
அனுப்பும் 
 கலைமகள்
 *அம்மா* ..

 உயர் பதவி
 பல 
அடைந்தாலும் 
உனை
 புரிந்த 
ஒரு உயிர்
 *அம்மா* .. 

எல்லையற்ற
 தூரம்
 உன் அன்பு 
என்றாலும் 
அதை
 மிஞ்சிவிட
 ஏங்கும் மனம் ..

 வாய்ப்பில்லை என்றதும்
 உன் அருகில்
 இருப்பதே
 வரம்
 என 
வீழும் ... 

 
 எனை
 படைத்த 
தெய்வம்
 உனக்கு 
பெரிதாக
 என்ன 
செய்துவிட 
முடியும் 
என்னால் ...

தராசை
 சமன்
 செய்யும்
 முயற்சியில் 
 உன் 
அன்பிடம்
 கடைசி வரை 
தோற்றுக் கொண்டே தானே 
இருக்க
 முடியும் 
என்னால்... 

பகையற்ற
 பகை தரும்...

நஞ்சில்லாத
 நஞ்சு தரும் ...

பயிற்சி அற்ற 
பயிற்சி தரும்...

அறமும் 
ஆன்மீகமும் 
சேர்ந்த 
கற்பகத்தரு 

 *அருள் தரும் அம்மா* ....

தான் பட்ட துன்பம் தன் பிள்ளைகள் படக்கூடாது என எண்ணும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் ..

 கவிஞர் ஆ . சுதா அம்பாசமுத்திரம் .

@@@@@@@@@@@@@@@@@@@

065.நீதானே அம்மா.... 

நான் உன்னுள் கருவானவுடன்
எனக்காய் உருவானவள் 
நீதானே அம்மா...
கருவறையில் மட்டுமல்ல
தட்டுதடுமாறி தடுக்கி விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடித்தவளும்
நீதானே அம்மா...

தவறிழைக்கும் போதெல்லாம்
அதட்டியோ அடித்தோ சொன்னால்
அரண்டு விடுவேன் என்றெண்ணி
அன்பால் அரவணைத்து
அறிவுரை சொன்னவள்
நீதானே அம்மா...

வாழ்வின் சூட்சமங்களை
விளையாட்டாய் கற்று தந்தவளும்
நீதானே அம்மா....
என்மீது எனக்கே இல்லாத நம்பிக்கையை
எனக்கும் சேர்த்து
என்மீது வைத்தவள்
நீதானே அம்மா....

தாயை போல வலிமையானவள்
வேறு யாருமில்லை என்று
எனக்கு உணர்த்தியதும்
நீதானே அம்மா....
ஒரு குழந்தைக்கு முதல் ஆசான்
சிறந்த நண்பன் தாயின்றி
வேறேதம்மா....

ஒரு தாயின் வலிகளையும்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்
உணர்கிறேன் அம்மா
நானும் ஓர் தாயானபின்....

செல்வன் கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@

66. அன்னையை போற்றுவோம்


 "பசியோடு தாயிருப்பாள் இருந்தும் தன் பிள்ளைக்கு, தவறாமல் பால் கொடுப்பாள்!

 புத்தாடை உனக்கு தந்து, கந்தலை புத்தாடையாய் உடுத்திடுவாள்!

 சுடும் தரையில் அவள் நடப்பால் தன் இடுப்பில் உனை சுமப்பால்!

 பரீட்சைக்கு நீ படிக்க துணையாக விழித்திருப்பாள்!

 கருவிலே சுமந்த உன்னை மட்டுமன்றி, உன் புத்தகப் பையினையும் சுமந்திடுவாள்!

 தோல் அளவு வளர்ந்த உன்னை குழந்தை என்றே, குளிப்பாட்டுவாள்!

 முன்னாலே நீ நடக்க, பின் நின்று ரசித்திடுவாள்!

 பட்டத்தை நீ பெற, தாய் பட்ட கஷ்டத்தை சொன்னதில்லை! 

நான் நன்கு தூங்க நீ நடித்து சிரிப்பாய் அன்னையே!

 அன்னம் ஊட்ட நான் அழுதால் கன்னம் சிவக்க மகிழ்விப்பாய்!

 சிறிய காயம் என்றாலும் பதறி நீயும் மருந்தளிப்பாய்!

தாய்  அன்பு  என்பது அன்னத்தை ஊட்டும்!

 அன்பு கரங்களை நீட்டும்!

 சொந்தங்களை கூட்டும்!

 பாசங்களை கொட்டும்!

 பெருமைகளை சூட்டும்!

 அறிவு திறனை தீட்டும்!

 தீமைகளை ஓட்டும்!

 நல்வழியை காட்டும்!

 அமைதியை நிலைநாட்டும்!

 உன்னை ஈனும் வரை உலகமே பெரிதென்பாள், உன்னை ஈன்ற பின் தன் உலகமே நீ என்பாள், அன்னை!

 தாயன்பு என்பது அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம்!

 வேண்டாத தெய்வமில்லை, உண்ணாத மருந்தில்லை!

 நோக்காத நோன்பில்லை, உன்னை கருவில் சுமக்க!

அன்பின் ஆழம் கடலாக, கடவுளின் வடிவம் தாயாக!!!

 -பெயர் மிஜினா ஊர் புதுவை 

#@@@@@@@@@#@@@@@@

067.அன்னையை போற்றுவோம் 

அன்னையர் தினம்

அன்னையை வர்ணிப்ப‌தே தனிசுகம்

கருணை குணம் கடவுள் தந்த வரம்

தாயே உன் மனம் அன்பு பாசம்

நிறைந்த இடம்

தாயே உன் இடம் தாலாட்டு கேட்பது

சுகம்

மடியில் தலை வைத்து உறக்கா என்

கவலை எல்லாம் மறக்க

என் வாழ்க்கையில் பல தடைகளை 

உடைக்க

உறுதுணையாக நீ இருக்க

தாய் அன்பு நிறைந்து இருக்க

அழகான உலகில் நான் பிறந்து இருக்க

உறவுகள் இணைந்து இருக்க

முதல் காரணமாய் நீ இருக்க 

அம்மா என்ற வார்த்தையை நான்

உச்சரிக்க

கவிஞர் சேலம் எஸ்.தாரா பி.ஏ.

@@@@@@@@#####@@@@@

068.அன்னையர்தினக் கவிதை
                 --------------------------------------------------

இருளிலும் அருள்சுரக்கும் திருவறை 
அன்னையின் கருவறை தானே!
அண்டத்தைப் பிளந்திடும் வலிதனை
உயிர்ச்சேயின் பிறப்பினில் மறந்தாயே!!

கருவாகி உருவாகும் நாள்வரை
மெழுகாக உருகிடும் தாயே!
நலமாக அழகாக சேய்தந்து
குலம் காக்கும் தெய்வமே தாயே!!

மழலை பேசும் அழகு மொழியால் 
மழைமேகம் கண்ட மயிலானவள் தாயே!
பலநாட்கள் பகலிரவு உறக்கத்தை
மனதார துறந்து மறந்தவள் தாயே!!

புன்னகை சிந்தும் குழந்தைக்கு இன்னகையால்
பொன்னகை சூட்டி மகிழ்பவள் தாயே!
வாழ்வினில் விழுந்திடாது காத்து நின்று
வானளவு உயர்த்திட விழைபவள் தாயே!!

உயர்ந்ததும் உள்ளத்தைத் தொலைத்திட்டு
உயர்த்திய இதயத்தை உடைத்திடுவாய் நீயே!
அன்னையர் தினத்தில் மனதைத் திருத்து
அனுதினமும் அன்னையை மனதில் நிறத்து!!

                           சே.சண்முகவேல்,
                 முதுகலை தமிழாசிரியர்,
              அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி,
                        சத்தியமங்கலம்.

@@@@@@@@@@@@@@@

69.அன்னையைப் போற்றுவோம்
         என் ஆதியும் அந்தமும் அவளே..!
அவள் இன்றி இமையும் இமைக்க மறந்து விடும் என் உலகம்...!! 
காலத்தின் கணக்குகளை கண் நுனியில் குவிப்பவள்...!!! 
கவிதைகளும் கதைத்திட இயலா காவியம் அவள்...!!!! 
பாடசாலைகள் பல நூறு இருந்தாலும் என் கரும்பலகை அவளே..!!!!! 
காயங்களை எல்லாம் காகிதமாய் மாற்றி கப்பல் செய்திட கற்றுக் கொடுத்தவள்...!!!!!! 
கோபம் கூட கோபுரமாய் அழகுர தோன்றுவது அவளிடம் மட்டுமே...!!!!!!! 
உறவுகள் உலகளவு குவிந்துகிடந்தாலும் உள்ளம் தேடுவது என்னவோ அவளை மட்டும் தான்....!!!!!!!! 
விழியோரம் விளையும் வினாக்களுக்கு ஒரே விடை அவள் மட்டுமே..!!!!!!!!! 
விரலோடு விளையாடும் மோதிரம் அல்ல அவள்
 விழியோடு ஓடிடும் உதிரம் அவள்...!!!!!!!! 
அவளின் முகவரியை வரிகளில் வடித்திட இயலுமோ.. ??
இன்னொரு ஜென்மம் தான் கூடுமே அவள் அன்பை அள்ளி பருகிட. ... .
அன்னையைப் போற்றுவோம் அகிலம் உள்ளளவும்....

 

(உறுதி மொழி) 
      இது என்னுடைய சொந்த படைப்பு... வேறு எந்த தளத்திலும் பதிவிடப்படவில்லை. 


   ரா. ராதிகா
இளங்கலைத் தமிழ்
பாரதியின் எழுத்துகளில் முளைத்தவள்
புதுக்கோட்டை மாவட்டம்

@@@@@@@@@@@@@@

070.அன்னையர் தின வாழ்த்து கவிதை

உயிரெழுத்தின் மொத்தமும் நீயே என் தாயே!
அன்பின் வடிவமான அன்னையே! ஆரோக்கியத்தைக் காத்தவளே! இதயக்கோவிலில் குடியிருக்கும் தெய்வமே!
 ஈடில்லா இன்பம் தந்தவளே! உதிரத்தையே உணவாய் ஊட்டியவளே! ஊக்கம் கொடுத்தவளே! எங்களின் வளர்ச்சியைப் பற்றியே நினைத்தவளே! ஏணியாய் ஏற்றம் கொடுத்து முன்னேற்றியவளே! ஐயம் தவிர்த்து வாழ செய்தவளே! ஒற்றுமையை உணர்த்தியவளே! ஓய்வில்லாமல் உழைப்பவளே! ஔவைக்கு நிகர் ஆசானானவளே! இஃதே அன்னையின் தோற்றம் என அறிய வைத்தவளே! இனிதே உங்களை வாழ்த்துகிறேன்! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! 

கலைவாணி என்கிற கவிகலை

வே.கலைவாணி, கோவில்பாளையம்
@@@@@@@@@@@@@@

071.இரும்பு மலர்கள்
*******************
குழந்தைகள் இடத்தில்
அன்பு கொண்டவர்//
இரவும் பகலும் அயராது
உழைப்பவர்//
பணிகளை சிறப்பாக
செய்து முடிப்பவர்//
தோல்வியை கண்டு
பயம் கொள்ளாதவர்//
துன்பம் வந்தபோதிலும்
சிரிப்பாக கொள்வர்//
எதிலும் முதல் இடத்தை
வகிப்பவர்//
கல்விப்பணியை சிறப்பாக செய்பவர்//
தூய்மை உள்ளத்தை
தலைநிமிந்து காப்பவர்//
வேலையிலும் பொது இடங்களிலும் காப்பவர்//
தூய்மையாளர் பணிகளிலும் பெண்கள்
தூய்மையானவர்கள்//
மருத்துவப் பணிகளிலும் நோய்களை தீர்ப்பவர்//
ஆசிரியராகவும் பேராசிரியராகவும் பணிகளில் திகழ்ப்பவர்//
முதலாலியாகவும்  தொழிலாலராகவும் பணிகளை செய்பவர்கள்//
விவசாயத்திலும் பயிர்கள் வளர்ச்சியிலும் முன்னோடிகள்//
மக்கள் மனதில்
தொடர்ந்து இருப்பவர்கள்//
ஆழ்ந்த சிந்தனையும்
சிறந்த அறிவானவர்கள்//
தேர்விலும் தேர்ச்சி
பெற்று முதலானவர்கள்//
பெண்கள் இரும்பு மலர்களை போன்றவர்கள்//

த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@

072.

கவிதைத் தலைப்பு:*

*அன்னையைப் போற்றுவோம்*
 

அன்னையானவள்......
கதிரவன் எழுமுன்னே எழும்....

சுறு சுறுப்பில் தேனீ ஆனவள்....!

எதிரியையும் தன்வயப்படுத்தும் அன்புக் காந்தமானவள்....!

தன்னலம் இல்லாத தங்கத் தாரகையானவள்....!

பொன்னைக்கண்டு புன்னகைக்காமல் தன் பிள்ளையின்...

தேவைக்கு அடகு வைக்கும் வள்ளலானவள்.... !

தரணியையே தாங்கக்கூடிய தன்னம்பிக்கை ஆனவள்.....

அம்மாவின் முதல் எழுத்தும்.....

அன்பின் முதல் எழுத்தும் அகரம் ஆகுமே.....!

அகிலத்தில் எனைத் தோற்றுவித்த அன்னையே....!

ஆனந்தகீதம் பாடி உறங்க வைத்த அன்னையே.....!

இன்னல் வரும் வேளையில் அதை...

இன்பமாய் மாற்றித் தந்த அன்னையே.....!

தன்னலம் இன்றி பிறருக்காக உருகும்

மெழுகுவர்த்தி போன்ற தாயே.....!

உன் பத்து மாதப் பத்தியத்திற்குப்.....

பாரினில் ஈடு இணையேது தாயே....!

பட்ட மரத்தையும் உன் பாசத்தால்....

துளிர வைக்கும் அன்புத் தாயே....! 

தனக்கு உணவில்லை எனினும் தன்னைச்....

சார்ந்தவர்க்கு அன்னமிடும்  அன்னபூரணி தாயே....!

அகிலத்தையே அன்பினால் பிணைத்த அன்னையை....

என்றென்றும் போற்றுவோம்...! போற்றுவோம்...!

ப. லாவண்யா,
விக்கிரவாண்டி

@@@@@@@@@@@@@@@@

073.அன்னையைப் போற்றுவோம்
கருவில் உருவாக்கி -
உதிரம் பாலாக்கி
முன்னூறு நாள் தவமிருந்து – உன்
மூச்சுக்காற்றை கடன் வாங்கி
நான் வந்தேன் - பூமிக்கு
என் வாழ்வு நீ தந்த யாசகம்
யாசகத்தில் நான் பெற்ற பொக்கிஷங்கள்
அன்பையும் அதிகார தோரணையில்
கற்றுத் தந்தவள் - நீ
நம்பிக்கையின் நம்பிக்கை
தன்னம்பிக்கையை – என்னுள்
துளிர்வித்தவள் நீ
வீழ்ந்தாலும் எழும்பி நடக்கும்
வீரத்தை என்னுள் விதைத்தவள் - நீ
தோல்வியில் துவண்டு விடாது
முயற்சியோடு பயிற்சி செய்து
வெற்றிக்கு முகவரி தந்தவள் - நீ
கற்றலும், பெற்றலும், கற்பித்தலும்
தான் வாழ்க்கை - என்று
கல்வி தந்தவள் - நீ
கஷ்டத்திலும், கவலையிலும்
கால் தடம் மாறாத கற்பை, கண்ணியத்தை
கற்பித்தவள் - நீ
அம்மா!
உன் நிழலும், மடியும், - முந்தானை சேலையும்
நிரந்தர சொர்க்கம் எனக்கு
உனக்கென்று புகழ் மாலை சூட
இலக்கணக் கவிதையில் வரிகள்
தேடினேன் - அம்மா
என்ற ஒற்றை சொல் கிடைத்தது
அ - உயிர் எழுத்து
ம் – மெய்யெழுத்து
மா - உயிர்மெய் எழுத்து
தமிழ் எழுத்தின் பிறப்பும்
உன்னுள் வசப்படும் - ஆனால்
உன் உயிரும் மெய்யும்
என்னுள் வசப்படும்.
                                                                                              என்றும் உன் நிழல் அன்பு மகள்,
எ.விக்னேஷ்வரி
ஆசிரியை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஆவாரம்பாளையம்
கோயம்புத்தூர் -6

@@@@@@@@@@@@@@#@#

074.அன்னையர் தினம்

அ முதல் ஃ வரை

அ - அன்பை அற்புதமாய் பரிமாறுபவள்

ஆ - ஆசையை அடக்கி  ஆசை ஆசையாய் நம்மை வளர்ப்பவள்

இ -  இன்முகத்துடன் இறுதி வரை நமக்காக வாழ்பவள்

ஈ - ஈசன்வில்லை போன்று அனைத்திற்கும் வளைந்து தருபவள்

உ - உடற்குறை இருந்தாலும் உலகமே நீ தான் என்பவள்

ஊ - ஊதாரியானாலும்
ஊக்கம் அளித்து வளர்ப்பவள்

எ- எட்டுதிசையும் வியக்க எழுதுகோலாய் விளங்குபவள்

ஏ - ஏவுகணையாய் இருந்து ஏறிட்டு பார்க்க வளர்ப்பவள்

ஐ - ஐராவதம் போன்று பலத்துடன் சிறந்த செய்பவள்

ஒ - ஒத்தாசை செய்து ஓங்காரமாய் திகழ்பவள்

ஓ - ஓயாமல் உழைத்து ஒற்றுமையை ஊட்டுபவள்

ஔ - ஔவை வழி யை அனுதினமும் கடைபிடிப்பவள்

ஃ - எஃகாய் உறுதி கொள்பவள்.

கு.வேலம்மாள்
கமுதி வட்டம் இராமநாதபுரம் மாவட்டம்

@@@@@@@@#@#@#@@@@

075.அன்னை

பத்துமாதம் சுமந்த பத்தினி//

பத்திலும் பாதுகாத்த முத்து நீ//

படுக்கையறையை கருவறையாக தந்த நீ//

பஞ்சி மெத்தையாக்கி காத்த நீ//

கேட்காமலே கொடுக்கும் புதையல் நீ//

சலிக்காது பதிலலிக்கும் ஆசான் //

முதலெட்டின் படி நீ//

முன்னேர வழி நீ//

பித்து மன வைரம்//

தத்துவம் சொல்லும் தங்கம்//

உதிரத்தை உணவாக்கிய வைடூரியம்//

உலகில் இல்லை உவமை உமக்கு//

வையகத்தின் பொக்கிஷம் நீ//

அன்பின் உறைவிடம் நீ//

பொறுமையின் பிறப்பிடம் நீ//

தியாகத்தின் வேர் நீ// 

 ஆக்கத்தின் விதை நீ/ 

குடும்பத்தின் தலை நீ// 

அறிவுச் சுடர் நீ//

ஆளும்யின் அஸ்திவாரம் நீ//

எழுச்சி வீராங்கனை நீ//

வீழ்ந்ததை மரமாக்குபவள் நீ//

கண்சாடையில் உருவாக்குபவள் நீ// 

கல்லமில்லா குழந்தை நீ// 

       *ஜஸூரா ஜலீல்*

@@@@@@######@@@@@@@

076.அன்னையைப் பொற்றுவோம்...

கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் 

இனிதாய் தொடரும் ஒரு பந்தம் 

அது தாய் என்னும் சொந்தம்… 

உதிரத்தை உணவாக்கி தனதுடலை உரமாக்கி 

பனிக்குட நீற்றினிலே அழுங்காமல் குழுங்காமல்

அழகழகாய்ப் பலக்  கதைகளும் சொல்லி

வளர்த்தவள் நம் அன்னையன்றோ அவளைநாம்…

கண்ணைப் போல் காத்திட்டால் காணாமவல் 

போய்விடுமே நம்மை நெருங்கும் துன்பம் எல்லாம்

கண்டிடுவீர் உலகத்தாரே இதுவே தாய்மையின் 

உன்னதமான உணர்வதனின் உண்மை அறமன்றோ… 

உயிர்த் தேனே உயிர்த்தேனே உன்னால் 

உயர்த் தேனேய் இம்மண்ணில் உயிர்த்தேனே…

“அம்மா” உறவுகள் ஆயிரம் இருப்பினும் 

எம்மைச் சுமந்தவளே உன்னைப் போல் 

ஒரு ஜீவன் உண்டோ இவ்வுலகினிலே… 

எத்தனை துன்பங்கள் உன்னை வாட்டினாலும் 

அத்தனையும் உன்னுள்ளே மறைத்துக் கொண்டு 

புன்னகை காட்டி வளர்த்தவளே அம்மா… 

தாயைக் காக்கும் தனையன்கள் இத்தரணியில் 

உள்ள வரை தரணியவளும் காத்திடுவாளே 

நம்மை அன்பெனும் உயர் உள்ளத்தானே

தரணி அவளுக்கும் சொல்லி விடுவோமே 

உலக அன்னையர் தின வாழ்த்தினையே… 

- முனைவர் அ. ஞானவேல், தருமபுரி மாவட்டம்.

@@@######@@@@@@@

077அன்னையைப் பொற்றுவோம்...

கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் 

இனிதாய் தொடரும் ஒரு பந்தம் 

அது தாய் என்னும் சொந்தம்… 

உதிரத்தை உணவாக்கி தனதுடலை உரமாக்கி 

பனிக்குட நீற்றினிலே அழுங்காமல் குழுங்காமல்

அழகழகாய்ப் பலக்  கதைகளும் சொல்லி

வளர்த்தவள் நம் அன்னையன்றோ அவளைநாம்…

கண்ணைப் போல் காத்திட்டால் காணாமவல் 

போய்விடுமே நம்மை நெருங்கும் துன்பம் எல்லாம்

கண்டிடுவீர் உலகத்தாரே இதுவே தாய்மையின் 

உன்னதமான உணர்வதனின் உண்மை அறமன்றோ… 

உயிர்த் தேனே உயிர்த்தேனே உன்னால் 

உயர்த் தேனேய் இம்மண்ணில் உயிர்த்தேனே…

“அம்மா” உறவுகள் ஆயிரம் இருப்பினும் 

எம்மைச் சுமந்தவளே உன்னைப் போல் 

ஒரு ஜீவன் உண்டோ இவ்வுலகினிலே… 

எத்தனை துன்பங்கள் உன்னை வாட்டினாலும் 

அத்தனையும் உன்னுள்ளே மறைத்துக் கொண்டு 

புன்னகை காட்டி வளர்த்தவளே அம்மா… 

தாயைக் காக்கும் தனையன்கள் இத்தரணியில் 

உள்ள வரை தரணியவளும் காத்திடுவாளே 

நம்மை அன்பெனும் உயர் உள்ளத்தானே

தரணி அவளுக்கும் சொல்லி விடுவோமே 

உலக அன்னையர் தின வாழ்த்தினையே… 

- முனைவர் அ. ஞானவேல், தருமபுரி மாவட்டம்.

#####@##@@@@@@@@@@@

078.அன்னையைப் போற்றுவோம்

என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தெய்வமும் நீ தானே!

எனக்கு வலி ஏதும் தெரியாமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டதும் நீ தானே!

அன்பை அள்ளிக் கொடுத்து அரவணைத்ததும் நீ தானே!

ஆசை ஆசையாய் முதலில் முத்தம் கொடுத்ததும் நீ தானே!

பாகுபாடில்லாமல்  என்னை வளர்த்து ஆளாக்கியதும் நீ தானே!

பாசமிகு நட்புகளை உருவாக்க கற்றுக் கொடுத்ததும் நீ தானே!

தன் பசியை பொருட்படுத்தாமல் பிறருக்கு பசியமர்த்துவதும் நீ

 தானே!

தானம் செய்ய கற்றுக் கொடுத்ததும் நீ தானே!

பகிர்ந்து உண்ணப் பழக்கியதும் நீ தானே!

பாவாடைத் தாவணி பற்றி எடுத்துச் சொன்னதும் நீ தானே!

மனிதர்களிடையே மன்னிக்க கற்றுக் கொடுத்ததும் நீ தானே!

மாவீரர்களின் பெயர்களைக் கற்றுக் கொடுத்ததும் நீ தானே!

செல்வந்தர் வீட்டில் செல்ல மகளாய் வளர்ந்ததும் நீ தானே!

சராசரி மனிதனும் சாதனை மனிதனாகலாம்  என்று சொன்னதும் நீ தானே! 

அம்மா இந்ந அன்னையர் தினத்தில் உங்களை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறேன் அம்மா...

பெ.ராஜலட்சுமி,

ஆசிரியை,

ராஜபாளையம்.

@@@@@@@@@@@@@@@

079.வரமாய் வந்தாள் பெண்ணாக!!

 தவமாய் கிடைத்தாள் நல்வரவாக !!

அன்பின் துளி நீர் சுமந்து ! அவளின் உதிரத்தை தான் கொடுத்து !!

ஆணோ !பெண்ணோ! அடிவயிற்றில் தான் சுமந்து!!

 உதிரம் கொடுத்து உயிராய் வளர்த்து! நம்மை காத்து! 

உறக்கம் மருந்து !உணவு படைத்து! உடலும் மெலிந்து! உள்ளமும் நொந்து!

 நெஞ்சம்கனத்து சேவை செய்வாள்!நித்தம்,தன்னைக் கட்டிய கணவருக்கும் தான் பெற்ற பிள்ளைகளுக்கும் குடும்ப தேவை அறிந்துசேவை செய்வாள்!

தேவை என்ற போது! மாமன் ,மாமியாரை! தாயாக மதித்து! கடமை செய்வாள்!

 பெண்மைகள் "ஏழு வகை பருவம் கடந்து! ஏற்றம் பெற !நாம் வாழ எந்நாளும் !தன்னலம் பாராது!!

கண்ணின் இமையாய் நமை காத்து !

விரலென  "நாம் இருக்க நகமென அவள் இருந்து!

 நாட்டுக்கு நம்மை அறிமுகம் செய்து !

நாம் பேச முதல் பாசை தந்து!

 முதல் குருவாய் !

முதல் கடவுள் உருவாய்! நம் முன் அமர்ந்து!!

 நமக்காய் உயிர் துறக்கும் ,உலக அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஊ. முத்துமாணிக்கம், சங்கு பட்டி

@#@#@##@@@@@@@@@

 

080.