நொடி பொழுதில் மாறிய வாழ்க்கை..! 012

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

நொடி பொழுதில் மாறிய வாழ்க்கை..! 012

நொடி பொழுதில் மாறிய வாழ்க்கை

அழகிய மரங்கள், சல சலவென்று  ஓடும் நதிகள், அதன் மத்தியில்  கம்பீரமாக வீற்றிருந்த வெள்ளை மாளிகை, அதன் உள்ளே  அழகிய குடும்பம். அப்பா விஜய். அவர் ஓர் வைத்தியர் அம்மா சான்தி. அவரும் கணவனுக்கு தானும் சலித்தவள் அல்ல எனும் வகையில் அவரும் ஒரு வைத்தியர். இவர்கள் இருவருக்கும் பிறந்தவளே மதி மயக்கும் அழகுக்கே அழகு சேர்க்கும் தேவதை. எறும்பை போல் சுறுசுறுப்பானவள். சுதந்திரமாய் பட்டாம் பூச்சியாய் வீட்டையே தன் கைக்குள் வைத்து சிட்டாய் பறப்பவள். எங்கள் கதாநாயகி அய்ஷ்வரியா. கஷ்டங்கள் என்ன என்றே தெரியாமல் வளர்ந்தவள். ஆனால், இந்த தேவதையின் வாழ்க்கையிலும் விதியின் சதி விட்டு வைக்கவில்லை. பாவம் இதை அறியாத அவள், கட்டிலில் இன்று விரிந்த மொட்டு போல் நித்திரையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

 அம்மா சான்தி காலை கடன்களை முடித்துவிட்டு அவளை எழுப்ப சென்றாள். வழமையாய் உரிய நேரத்துக்கு எழும்ப வேண்டும் என்று  கடிகாரத்தில் அலார்ம் வைத்து விட்டு தூங்கினாலும் அய்ஷ்வர்யா எழும்ப மாட்டாள் என்று நினைக்காதீங்க. அவள் அலார்முக்கு முன்பே எழுந்தாலும், எழும்ப மாட்டாள். ஏனென்றால், அவள் அம்மா சான்தி அவளை  கொஞ்சி.. குலாவி.. முத்தமிட்டு.. பாசமா எழுப்பும் வரை அவள் கட்டிலில் தூக்கம் போல் நடித்துக் கொண்டு இருப்பாள். அதை நன்கு புரிந்து வைத்து கொண்டே அவளை நினைத்து மனதில் சிரித்து கொண்டே போய் அவளை எழுப்பினாள் சான்தி. அய்ஷூமா எழுந்திரிடா தங்கம், ஏன்ட செல்லமில்ல என்று. அவள் எழுப்பவே.. வேண்டும் என்றே மறுபக்கம் திரும்பி படுத்தால் அய்ஷூ. இப்போ நீ எழுப்ப மாட்ட அப்படிதானே... மணி 8:00  ஆகிவிட்டது  என்று கூறவே  அவசர அவசரமாக எழுந்து நின்றால் அய்ஷ்வரியா. அதன் பின்னர் சொல்லவா வேண்டும். மின்னல் வேகத்தில் தயாராகி பாடசாலை செல்ல ஆயத்தமாகிவிட்டாள். பாடசாலை என்றால் அவளுக்கு உயிரு. ஏனென்றால், அங்கே அவளுடைய நண்பிகள் கூட்டம் இவளை சுற்றி இருப்ப ர்கள். இவள் அதிகம் படிப்பாளா? என்று பார்த்தால் அதுதான் இல்லை. சாதாரணமாகத்தான் படிப்பாள். அவளுக்கு படிப்புமேலே அவ்வளவு அக்கறை கிடையாது. சரியான விளையாட்டுப் பிள்ளை, சேட்டைக்கு இவளை மிஞ்சி யாருமே இருக்கமாட்டார்கள். அவ்வளவு சேட்டைக்காரி. எப்போதும் தானும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவள். இதனாலே என்னவோ,  அவள் நண்பிகளுக்கு இவள் செல்லப்பிள்ளையானாள் அய்ஷூ.. அய்ஷூ.. என்று அவள் நண்பி சரன்யா கூப்பிடவே... பின்னால் திரும்பி பார்த்தால் அய்ஷ்வரியா. என்ன சொல்லு சாரு? என்றதும் சரன்யா நேற்று நடந்த வீட்டு கதை நாட்டுகதை என்று கூற ஆரம்பிக்கும் போதே... மணி ஓசை கேட்கவும், இருவரும் அவசர அவசரமாக வகுப்பறையை நாடி ஓட்டமும் நடையுமாக ஓடினர். அங்கே அவளுடைய ஆசிரியை லட்சுமி முறைத்து கொண்டே இருவரையும்  உள்ளே போய் உட்கார செல்லிவிட்டு, பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.  சிறிது நேரத்தில் மணி ஓசை கேட்டதும் ஆசிரியர் செல்லவே... இவர்களின் ஆட்டம் ஆரம்பமானது. இவ்வாறே,  வழமை போல் அன்றைய நாள் முடிந்து பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று தனது வழமையான வேலைகளை செய்து முடித்து விட்டு பொற்றோரோடு  இரவு உணவை மகிழ்சியாக  உண்டுவிட்டு  தூங்க சென்றாள். இவ்வாறே நாட்கள் உருண்டு ஓடி பாடசாலை காலமும் நிறைவடைந்தது. 

அவளின் மேற் படிப்புக்கான காலம் வந்தது. அவளின் 
மேற்படிப்புக்காக பல்கலைக்கழகம் நோக்கி தனது வாழ்வின் முதல் தடவையாக விடுதியில் தங்கி படிக்க குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றாள். அங்கேதான் அவளுக்கான சதியும் உள்ளது என்று அறியாமலே..... தனது முதல் பிரயாணத்தை பல்கலைகழகம் நோக்கி பயணித்தாள்.  மகிழ்ச்சியாவே வாழ்ந்த அவளுக்கு அறியாத பலமுகங்கள். புதிய  இடம், அவளை கதிகலங்க வைத்தது. வீட்டை விட்டு பிரிந்த துயரம் அவளை வாட்டி வதைக்கவே, உடைந்து அழத்தொடங்கி விட்டாள். அப்போது ஒரு கை அவளின் தலையை வருடவே, நிமிர்ந்து பார்த்த அவளுக்கு புண்ணகையோடு நின்றிருந்தால் அவள். புது நண்பி சாமிலா. அவளை பார்த்த இவளுக்கு ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அவளோட உறவாட ஆரம்பித்தாள். நேரம் சென்றதும் தெரியாமல் வாடன் கதவை தட்டி தூங்க சொல்லவே.. இருவரும் அமைதியாக உறங்க சென்றனர். அன்றுமுதல் இருவரும் உயிர் நண்பிகளாய் ஆயினர். காலை கதிரவன் உதிக்கவே இருவரும் பல்கலைகழகம் சென்று அங்கு புது நண்பிகளுடன் தங்களது நட்பை வளர்த்து கொண்டனர். வழமை போல் அய்ஷூவின் குறும்பும் சேட்டையும் தலை தூக்கி நண்பர்களுடன் கலகல வென்று ஒன்றிவிட்டாள். இவள் சேட்டை, இவள் காட்டும் அன்புக்கு ஆசிரியர்கள் கூட அடிமையாகி விட்டதை பார்த்த சில மாணவிகள் பொறாமை கொள்ள ஆரம்பித்து விட்டனர். இதை அறியாத இவள்.. வழமைபோல சிரித்து மகிழ்ந்து கொண்டு இருந்தாள்.  

வழமை போல் பல்கலைகழகம் செல்ல தயாராகி சாமிலாவை எழுப்பவே.. சாமி.. சாமி.. அவசரமாக எழும்பு என்று எழுப்பவும், என்னால முடியாது நீ போ எனக்கு காய்ச்சலாய் இருக்குது  என்று முனங்கியவாறு கூற  ஆ..... காய்ச்சலா? இப்போ என்ன பன்றது? உன்ன விட்டு எனக்கும் தனியாக போக முடியாது. நானும் போகல்ல என்று சொல்லவும், நீ போ அய்ஷு எனக்கு சரியாகிவிடும் என்று கூறவே... இல்ல நான் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கவே... சாமிலா அவளை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தாள். அவளும் சரி என்று அரை மனதுடன் சென்றாள். அங்கே புத்தகம் எடுக்க வாசிக சாலையை நோக்கி சென்ற போது, அவள் நண்பி போல் நடித்து மனதளவில் எதிரியாய் உள்ள அவள் நண்பி அனுஷ்கா ஒரு காகிதத்தை கொண்டு வந்து கொடுத்து இதை சாமிலாவிடம் கொடு என்று கொடுத்து விட்டு சென்றுவிட்டாள்.  இவளும் அதை கணக்கெடுக்காது புத்தகத்தில் மூழ்கவே.. அவள் எதிரி அனுஷ்கா இளம் ஆசிரியரான சரத்திடம் சென்று உங்களுக்கு அய்ஷ்வரியா ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள்.  அவள் உங்களை வாசிக சாலைக்கு வர சொன்னா..  என்று கூறவே...  இவரும் வாசிகசாலை நோக்கி சென்றபோது, அவள் தனியாக இருப்பதை பார்த்து விட்டு அய்ஷூமா என்ன வர சொன்னீர்களா? என்று கேட்கவும், அவள் இல்லை என்று சொல்லி எழும்பும் போது.. காகிதம் கீழே விழவும் சரியாக இருந்தது. அவர் அந்த காகிதத்தை எடுத்து, படித்து விட்டு அருவறுப்பாய் அவளை பார்த்து விட்டு, காகிதத்தை எடுத்து கொண்டு காரியாலயம் நோக்கி நடை போட்டார். இவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஏன்? எதற்கு? இவர் அருவறுப்பாக பார்த்தார் என்று யோசிக்க ஆரம்பிக்க முன்பே, அவளின் சக நண்பிகள் வந்து அய்ஷூ உன்னை அதிபர் காரியாலயத்திற்கு அழைக்கிறார் என்று கூறவே... இவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. சும்மாதான் அழைக்கிறார் என்று நினைத்து கொண்டு காரியாலயம் நோக்கி சென்றால் அய்ஷூ...  அங்கே அனைத்து ஆசிரியர்களும் அசிங்கமாய் இவளை பார்ககவே... ஏன்? எதுக்கு? என்று புரியாமல் பேந்து பேந்து முளித்தாள். அப்போது அதிபர் கூறிய வார்த்தை அவளின் தலையில் சுத்தியலாள் அடித்தது போன்று இருந்தது. அவர் கூறினார், அய்ஷ்வரியா நாம் உங்கள் மேல் அதிகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தோம். ஆனால் நீங்கள் செய்த காரியத்தால அதெல்லாம் அடியோடே அழிந்து போய்விட்டது. இப்போது உங்களை பல்கலைகழகத்தை விட்டு நிறுத்துகிறோம். உங்கள்
 பெற்றோர் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, நீங்கள் போய் தயாராகி செல்லுங்கள் என்று சொல்லவும், பேய் அறைந்தது போல் பேச்சின்றி சிலையாகினாள். அடுத்து அடுத்து என்ன நடக்ககுதே... என்று அறியாமலே எல்லாம் நடந்து முடிந்தது அவள் வாழ்வில்...  பெற்றோரோடு வீடு வந்தடைந்த அவள். யாரோடும் பேசவில்லை. தானாகவே கால்கள் கட்டிலை நோக்கி சென்றது. அவளை எவ்வளவோ பேச வைக்க முயன்றும் பெற்றோர் தோற்றுப்போனனர். இவளை இப்படியே விடக்கூடாது என்று எண்ணி...  மனநல  வைத்தியரை நாடினர். அவர் அவளுக்கான ஆலோசனைகளை வழங்கி, அவளை அந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டி எடுத்தார்.

 அப்போதுதான் அவளுக்கு அனைத்துமே ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. அப்போது தான் அவள் முடிவு எடுத்தாள்.  இவர்கள் முன் இவர்களே தன்னை புகழ் படும் அளவுக்கு அதே பல்கலைகழகத்தில் கற்று வெற்றி மகுடம் சூட வேண்டும் என்று... உறுதியான எண்ணத்தை வைத்து அடுத்து அடுத்து அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.. தான் நிரபராதி என்பதை நிரூபித்து அவர்களையே மன்னிப்பு கேட்கவைத்து... அதே பல்கலைகழகத்தில் பயின்று வெற்றி மகுடம் சூடி தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி, உலகம் போற்றும் முன் மாதிரி பெண்ணாக மாறினாள்  அய்ஷ்வரியா என்னும் வீர மங்கை.
பட்டை தீட்டி உருவெடுத்த வைரமே இவள்.

   ஜஸூரா ஜலீல்
   மலேசியா