உலகப் பெருங்கடல் தினம்

கடல் தினம் கவிதை

உலகப் பெருங்கடல் தினம்

உலகப் பெரும் கடல் தினம்

பூமியின் பரப்பில் முக்கால் பாகம்
இதுவே மனிதர் வாழ்வின் ஆதாரம்
கடல் அன்னை தருகிறாள் உயிர்வளி-நாமோ
கண்மூடித் தனமாய் தருகிறோம் உயிர்வலி

குப்பை கூளங்கள் குவிக்கும் இடமா
குவிந்த செல்வம் மறையுமே மூடா
தொன்னூறு சதவீதம் மீன்கள் அழிய- மனிதா
தொல்லைத் தருகிறாய் கடலன்னை வாழ

மரங்கள் நட்டு பூமியை குளிரச்செய்
மாசில்லா நீரை கடலிலே கலக்கச்செய்
சாக்கடை தனிலே நெகிழி போடாதே-நீ
சாகின்ற வாழ்வை தேர்ந்து எடுக்காதே

கடல் அன்னையை காத்திட முயல்க
கருத்தாய் நடந்தே நல்லவை செய்க
உலக கடல்தினம் என்பதை ஏற்று- நாமும்
உலகை சுத்தமாய் வைத்திட முனைவோம்.

தகடூர் சு.தமிழரசன்
இயற்கையைக்காப்போம் அறக்கட்டளை
தருமபுரி