அண்ணா..! 056

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா..!   056

அண்ணா  மீட்டொரு நீ வந்தால்.......

அண்ணனென நீ இருந்தாய் அதற்கேற்ற
உடன்பிறப்பாய் வண்ணமுற நாங்கள் வாழ்ந்திருந்தோம் வாழ்வெல்லாம் போச்சுதையோ! திண்ணம் நீ வருவதெனில்  தித்திக்கும் நம் வாழ்வு
அண்ணன் கிடைத்ததனால் ஆட்கொள்ளும் பேரின்பம் எழுதுகின்ற கொலதனை எடுத்தே நீ பிடித்திட்டால் அழுத பிள்ளை வாய்மூடும்
அப்படியே உருகிவிடும்
பழுது மலி சமுதாயம்
பக்குவம் தான் பெற்றிடவே எழுதுகின்ற
கோல் கொண்டு எழுந்தொரு நாள் வந்திடுக!
பாராளுமன்றம் அதில்
பல்லறிஞர் முன்னிலையில் சீரான
சொல்லெடுத்து சிறப்புறவே ஆங்கிலத்தில் ஆராதனை புரிந்தீர்
அது கேட்க மீண்டும்
உமைப்பாரோர் அழைக்கின்றார்
பரிந்து ஒரு நாள் 
வந்திடுக!
தமிழ் நாடெனப் பெயரை தந்திட்ட பெரியீரே கமழ்கின்ற
கலை மணத்தை கைவழியும் வாய்வழியும்
 உமிழ்கின்ற ஆற்றலினை உடைமை
எனக் கொண்டவரே!
அமிழ்தே!எம் ஆருயிரே!
அழைகின்றோம் வந்திடுக!
இனியொரு நாள் நீ
வந்தால் இன்பம்,அன்பு
வளமை, புனிதம்,பெருமை
பண்பின் புகலிடமாகும்
உலகு.இனியொரு நாள்
நீ வந்தால் இலக்கியம்
பெருகும் உலகில் இனியொரு நாள் நீள
வந்தால் இலக்கியம்
பெருகும் உலகில் இனியொரு நாள் நீ 
வந்தால் இறைமை
தங்கும் உலகில் எழுதுகின்ற கோல் கொண்டு எழுந்தொரு நாள் வந்திடுக!
மனித குலம் முழுவதுமே
மண்டியிடுதும் உன் முன்னால் தனிமனித 
மானத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு
 முனிவன் என நீநின்று
முடிவான வழி நீ சொன்னாய்!


கவிஞர் ம.கீதா 
சென்னை