அக்னி புத்திரன்..! 007

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

அக்னி புத்திரன்..! 007

அகிலத்தின் ஆணிவேராய் அவதரித்த அக்னி புத்திரனே..

 ஆழ்கடலில் ஆங்கிலேயரை வேட்டையாடிய வேங்கையே

 அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை எதிர்கொள்ள

 மக்கள் மனதில் விடிவெள்ளியாய் உதித்தவரே

 கனல் தெறிக்கும் வசனங்களை ஈந்த வள்ளலே

 தமிழகத்தின் தலையெழுத்தை திருத்திய பிரம்மாவே

 ஈடில்லா நவநாயகனே நானிலம் போற்ற

 உரியைக்குரல்  கொடுக்க எட்டயபுரத்தில் அவதரித்த அரிமா 

ஊக்கமுடன் உலாவி அரும் மருந்தே 

பெரும் மழைக்கு முன் வரும் சிறு துளியாய்

 இன்று ஒரு பெரும் புரட்சிக்கு வித்திட்ட விருட்சமே

 விருட்சமே கருப்புக்குள் அங்குக்குள் ஒளிந்திருந்த காவியத்தலைவனே

 முண்டாசு கட்டிய போர் முரசு

 மேனி சிலிர்க்கும் மேதகு கவி படைத்து 

எட்டாவது புத்திக்கு கேட்டாலே பதிலாக்கி

 கேட்காத செவிகளிலே கேட்கும் திறனாக 

தேச விடுதலையை மக்கள் மனதில் விதைத்தவரே

 புதுக்கவிதையின் முன்னோடியே பைந்தமிழ் தேர் பாகனே

நான் வீழ்வேனென்று கர்ஜித்தவரே உம்மை வணங்குகிறேன்...


-முனைவர் ப.விக்னேஸ்வரி,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை