இலக்கிய இமயம் பாரதி...! 006

தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி

இலக்கிய இமயம் பாரதி...! 006

இலக்கிய இமயம் பாரதி..

இலக்கியம் இனிமைபெற

எட்டயப்புரம் ஈன்றெடுத்த
எழுச்சி மைந்தன்...!
கட்டுரைகளில் கருத்தாக்கத்தையும்
உரைநடைகளில் உயிரோட்டத்தையும் ஊட்டி
ஆட்சிப்புரிந்த கலைவேந்தன்...!
கவிவானில் சிறகடித்து
குயில்பாட்டின் மூலம் 
காதலை காவியமாக்கி
கவிபாடி பறந்து சென்றான்...!
காதலோடு நில்லாமல்,
முறையற்ற மூடத்தனங்களையும்
முறுக்குமீசை பாரதி
கவியெனும் தீப்பிழம்பால்
எரித்துமே கொன்றான்...!
பெண்ணுரிமைக்கு முன் நின்றான்...!
பெருமையோடு
மண்ணுரிமைக்காக பற்பல
மகத்தான கவிகளையே தந்தான்...!
மண்ணின் மைந்தனான எம் பாரதி...
பின்,
நவீன தமிழ்க்கவிதையின்
பிதாமகன் ஆனான்...!
மொழியையும் நாட்டையும்
விழிபோல காத்தான்...!
இவற்றிற்கு,
பங்கம் விளைந்தபோது
பாட்டினால் அவற்றையும்
பழித்துமே வெறுத்தான்..!
தங்கமகன் பாரதி...!
மண்ணுலகில் அவன்புகழோ
மங்காது விளங்கிடும்
சுடரும் சோதியாய் உறுதி...!

 

 -கவிதாயினி க.பிரீத்தா,
 கடலூர்.