பாரதியின் தமிழ் முழக்கம் ..! 069

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியின் தமிழ் முழக்கம் ..! 069

பாரதியின் தமிழ் முழக்கம்..!

அச்சமில்லை அச்சமில்லை என்று அஞ்சாதவன்
ஆண்மை தவறாத அக்னிக் குழம்பிவன்
இன்பத் தமிழே இனிமை என்றவன்
ஈடே ஏதுமில்லா வெற்றித் திலகம்
உண்மையை உடைத்து உரைக்கும் கவிஞன்
ஊக்க வரிகளின் உண்மை தலைவன்
எழுத்தின் உன்னதம் உணர்த்திய கலைஞன்
ஏழை வாழ்வின் எழுச்சி சுடரிவன்
ஐயமே இல்லா மகாகவி இவன்
ஒன்றோ இரண்டோ இவன் பெருமைகள்
ஓடும் நீர்போல் வார்த்தை கொண்டவன்
ஔடதம் போல் வரிகள் படைப்பவன்
கவிதை உலகின் கடவுள் இவன்
காணும் யாவையும் கவிதை ஆக்கியவன்
காலம் கடந்தாலும் கரையாது நின்புகழ் 
கரைந்திடாது நின் புகழ் வாழிய வாழியவே ...! 
- கருப்புச்சாமி ராஜா , பழனி