எப்போ வர போகிறாய் பாரதி? 038

தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி

எப்போ வர போகிறாய் பாரதி? 038

எப்போ வர போகிறாய் பாரதி?

இயற்கை வர்ணித்தாய்; ஞாயிறை வர்ணித்தாய்  ; நிலவை வர்ணித்தாய்; குயிலை வர்ணித்தாய்    ; 
பெண் புனிதம் போற்றினாய்,
உழைப்பை போற்றினாய்,
உயிர்களைப் போற்றினாய்,
பெண் விடுதலைப் வேண்டினாய்,
இவற்றை எல்லாம் அழிக்கும் வீணர்களை விரட்ட எப்போ வர போகிறாய் பாரதி?

ஜாதிகள் இல்லையடி பாப்பா  என்றாய்,
இன்னும் சாதி சண்டை ஓயவில்லை,
சமத்துவம் வந்திட விடுவதில்லை,
சாதிக்கு ஒரு கட்சி,
வீதிக்கு ஒரு காட்சி,
என வாழும் வீணர்களை சிதறடிக்க எப்ப வர போகிறாய் பாரதி?


காதல் புனிதம் என்றாய்,
குயிலின் காதல் கதைக்கு உயிர்  கொடுத்தாய் -இன்று
மனித காதல் புனிதம் கெட்டதம்மா,
காம பிசாசை குதிக்கால் கொண்டடித்து விழ்த்திடலாகும் என்றாய்-அந்த
காதலின் புனிதம் எடுத்துரைக்க எப்ப வர போகிறாய் பாரதி?


நெஞ்சு பொறுக்குதில்லையென்றாய்-ஆம்
இருக்கையை பிடிக்க முண்டியடிக்கும் இளைஞர் கூட்டம் , 
கயவரையும் பார்ப்பதில்லை,
கை குழந்தையையும் பார்ப்பதில்லை,
கர்ப்பிணி என்றும் பார்ப்பதில்லை,
கையில் கைபேசி இருந்து விட்டால்-போதும்
வயதான பட்டிக்கும் இடம் தருவதில்லை,
மாற்றுத்திறனாளிக்கும் இடம் தருவதில்லை,
வீணர்களை சரி செய்ய எப்போ வரப்போகிறாய் பாரதி?  


 -மை.மதலைமேரி                                ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
நரசிம்மநாயக்கன்பாளையம்,
கோயம்புத்தூர் -31