ஆசிகள் வேண்டி ஒரு கவி

Srbagavathkavithai,bagavath,

ஆசிகள் வேண்டி ஒரு கவி

ஆசிகள் வேண்டி ஓர் கவி

வாழும் வழிகாட்டியே...ஆம்

எம்குல மக்களுக்கு வாழச்சொல்லித்தந்தவரே...

தேடல் பல கொண்டு 

நாளெல்லாம் நலிவுற்றோம்...

நாங்கள் நலமுடன் வாழ்ந்திடவே 

உங்கள் அருளுரை போதுமய்யா...

எளிமை தோற்றம் கொண்டு யாவர்க்கும் உரியவராய்

உன்னத உரை ஆற்றினீர் 

எங்கள் அறிவில் தெளிவேற்றினீர் 

ஓடும் நதி போல் உங்கள் மனமது இயங்குவது என்றீர்..ஆம் 

அகத்திலே "சும்மா இருங்கள்" என்றீர் 

அறிவால் அனைத்தையும் அறியலாம் என்றிருந்தோம்,

அறிவின் இயலாமை அறிவதே அறிவுடைமை!_ ஆம் 

அறிவின் இயலாமை அறிவதே அறிவுடைமை!

எண்ணம் வேறு என்றீர் ; 

எண்ணுதல் வேறு என்றீர்..

இப்புரிதல் ஒன்றை தந்தே வாழ்வை வளமாக்கினீர்...

ஏற்றமிகு சமுதாயத்தை என்றுமே உருவாக்கிட 

எல்லோரும் இயன்றதைச்செய்து ...

வாழுகின்ற வழிகாட்டியாய்

நம் குருவிற்கு _ நற்சீடனாய் புரிதல் கொண்டோர்_செயலாற்றுவோம்!

இந்நாளில் நிறைவாய் இக்கவி எழுதி 

உங்கள் ஆசிகள் வேண்டுகிறேன்.

-சுபா,

தூத்துக்குடி