பார் போற்றும் பாரதி...! 037

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பார் போற்றும் பாரதி...! 037

பார் போற்றும் பாரதி

முண்டாசு கவிஞனே,முறுக்கு மீசை வீரனே........

எட்டயபுரத்தின் எட்டாப்புகழே......    

பழம்பெரும் பாரதத்தில் பிறந்த தீயே.....

பாரினிலே பாட்டினிலே சிறந்த பாரதியே....

வசன கவிதையின் தந்தையே....

வான் போற்றும் சிந்தையே....

எழுச்சிமிக்க கவிதைகளால் சுதந்திர வேட்கை தந்தவனே....

அக்னி கொண்ட சிறகுகளாய் ஒளிர்ந்து நின்ற தலைவனே.....

சமுதாய உயர்வுக்கோ பாப்பா பாட்டு.....

சமய கருகொண்டது கண்ணன் பாட்டு......

நானிலமாம் நமது தாய்நாடு.....

அந்நியரை எதிர்த்ததோ உன் தேசியபாட்டு......

பதுமை பெண்ணுக்கும் உரிமை தந்தாய்....

அதுவே புதுமை பெண்ணென்னும் பெருமை என்றாய்....

நிமிர்ந்த நன்னடையும்   நேர்கொண்ட பார்வையும்.....

நிலையாய் வேண்டுமென உணர வைத்தாய்.....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வாம்.....

கூடி வாழ கூவி அழைத்தாய்.....

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதி்ல்லையே....

ரௌத்திரம் பழகிடவும் சொல்லி தந்தாய்.....

பாங்காய் உரைத்தாயே பாட்டுக்கொரு புலவா.....

ஆம்,ஒருபோதும் நீ 
வீழவேயில்லை....

எங்களுள் வாழ்ந்து கொண்டே இருக்கிறாய்....

-சு.சுஷ்மிதா,
சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),
பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),
பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),
தருமபுரி (மாவட்டம்)
அஞ்சல் எண்: 636905