காஞ்சித் தலைவன் அண்ணா 006

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை

காஞ்சித் தலைவன் அண்ணா 006

காஞ்சித் தலைவன் அண்ணா

காஞ்சியில் உதித்த
உதய சூரியன்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
என்ற‌ தாரக மந்திரத்தை
உபதேசித்த உத்தமர்//

பசுமை நிறைந்த நினைவுகளோடு
பச்சையப்பன் கல்லூரியின்
முன்னாள் மாணவராய்
பின்னாளில் தமிழக முதல்வராய்//

தமிழ் மொழியிலிருந்து
பல கிளைமொழி
தோன்றியது போல்
உன் அரசியல் கட்சியிலிருந்து
இன்று பல கிளைகள்//

"அண்ணா"-என்ற ஆலமரத்தின்
பல விழுதுகள்
இன்று அவரின்
பெருமையை
தாங்கியபடி
வேரூன்றி நிற்கிறது//

அரசியல் கடந்து
தமிழுக்கும் சேவைசெய்து
இலக்கிய படைப்புகளை
இயற்றி தமிழின் அமுதை பருகியவர்//

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"-என்ற சிறந்த
வாக்கியத்தை கூறி
பகைவனுக்கும்‌ அருளும்
பண்பாளர்//

தென்னாட்டு "பெர்னாட்ஷா"-என்று
போற்றப்பட்ட அண்ணாவின்
புகழ்‌ உலகம் உள்ளவரை
நிலைத்திருக்கும்
"வாழ்க அண்ணா நாமம்"!//

- கவிப்புயல் தி.கோமதி
வேளச்சேரி
சென்னை.