சாதனைப் பெண்கள்..017

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

சாதனைப் பெண்கள்..017

சாதனைப் பெண்மணிகள். 

1. அஞ்சலை அம்மாள்  (தென்னிந்தியா வின் ஜான்சி ராணி) 

2.கிட்டூர் ராணி சென்னம்மா. (கர்நாடக த்தின் ஜான்சி ராணி) 

குறிப்பு சட்டகம் 

1.முன்னுரை 

2.அரசியல் வாழ்க்கை 

3.தென்னிந்தியாவின் ஜான்சி ராணி 

4.முடிவுரை

அஞ்சலை அம்மாள் 

1.முன்னுரை 

அஞ்சலை அம்மாள் 1890 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் ஒன்றாம் நாள் கடலூரில் முதுநகர் என்ற நகரில் ஒரு எளிய குடும்பத்தில் திரு முத்துமணி படையாட்சி ஐயா அவர்களுக்கும் திருமதி அம்மா கண்ணு அவர்களுக்கும் மகளாகப் பிறந்தார். 

2.அரசியல் வாழ்க்கை:

அஞ்சலை அம்மாள் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தார் .கணவர் முருகப்பா படையாச்சி ஒரு பத்திரிக்கையில் முகவராக இருந்தார். 

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு .
தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும் வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்காக பணத்தை செலவிட்டார். 

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். தனது ஒன்பது வயது குழந்தையை சிறையிலேயே வளர்த்தார். 

சிறையில் இருந்த அம்மா கண்ணு மற்றும் அஞ்சலை அம்மாள் இருவரையும் காந்தியடிகள் அடிக்கடி பார்வையிட்டார் .அம்மா கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறு பெயர் இட்டு தன்னுடன் வார்த்தா ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார் 

காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு நடத்திய உப்பு சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாக காயம் அடைந்தார். 


3.தென்னிந்தியாவின் ஜான்சி ராணி: 

1931-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை அம்மாள் தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு மற்றொரு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக இவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 
அந்த நேரத்தில் அஞ்சலை அம்மாள் கர்ப்பமாக இருந்தார் என்பதனால் பினையில் விடுவிக்கப்பட்டார் .
மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை அம்மாள் மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 

ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்த போது அஞ்சலை அம்மாவை சந்திக்க முயன்றார். 

ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் காந்தியடிகள் அஞ்சலை அம்மாளை சந்திக்க தடை விதித்தது. 

ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா உடை அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியடிகளை சந்தித்தார் .
இந்த அற்புதமான செயலை கண்ட காந்தியடிகள் அஞ்சலை அம்மாவை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என சிறப்பாக அழைத்தார். 

4.முடிவுரை:

 1947 இந்தியா விடுதலை அடைந்த பின்னர் அஞ்சலை அம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2. கிட்டு ராணி சென்னம்மா (கர்நாடகத்தின் ஜான்சிராணி) 

குறிப்பு சட்டகம் 

1.முன்னுரை 

2.இளமைப் பருவம் 

3.குடும்ப வாழ்க்கை 

4.கிட்டு ராணியின் ஆட்சி முறை 

5.ஆங்கிலேயருடன் நடத்திய போர் 

6.இந்திய அரசின் நினைவுச் சின்னங்கள் 

7.முடிவுரை

1.முன்னுரை :

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பெருந்திரளாக பங்கேற்றனர். போராட்டம் மட்டுமல்லாமல் ஆயுதமேந்திய போராட்டங்களிலும் பெண்கள் பலர் பங்கேற்று உயிர் தியாகம் செய்துள்ளனர். கொடுமையான தண்டனைகளையும் பெற்றுள்ளனர் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கிட்டுர் சென்னம்மா அவரைப்பற்றி கட்டுரையில் காண்போம். 

2. இளமைப் பருவம்: 

ராணி சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பிறந்தார்.  இவர் தனது சிறுவயதில் குதிரை ஏற்றம் ,வால் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார் .அது மட்டும் இல்லாமல் பிற நாட்டு மொழிகளான கன்னடம், உருது ,சமஸ்கிருதம், மராத்தி போன்ற மொழிகளில் புலமை பெற்றவராக விளங்கினார். 

3. குடும்ப வாழ்க்கை: 

கிட்டுர் என்ற ஊரின் அரசரான மல்ல சர்ஜா என்பவருடன் சென்னம்மாவுக்கு திருமணம் நடந்தது. அவரது கணவர் 1816 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் .அவரது ஒரே மகனும் 1824 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனவே சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரை தத்தெடுத்து அவருக்கே முடி சூட்டினார். 

4. சித்தூர் ராணியின் ஆட்சி முறை: 

சென்னம்மா பெரும்பாலான நேரங்களை வேதம் மற்றும் சத் சங்கங்களில் ஸ்லோகங்களை படிக்க செலவிட்டார். நீதிமன்றம் தீர்ப்பின் தீவிர உணர்வோடு செயல்பட்டார். 
கணவர் இறந்தவுடன் இவரே தன் நாட்டை ஆட்சி செய்தார்..இவர் நீதிநெறி தவறாமல் தன் நாட்டில் ஆட்சி செய்தார் இதுவே இவரது மிகச் சிறப்பான செயல்.

5. ஆங்கிலேயருடன் நடத்திய போர். 

கிட்டுரை அபகரிக்கும் எண்ணத்தில் ஆங்கிலேய அரசு இருந்தது .எனவே சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது ஆனால் ஆங்கிலேயர்கள் விதித்திருந்த வரி வசூல் விஷயத்தில் திருப்தி அடையாத சென்னம்மா இந்த உத்தரவை மதிக்கவில்லை இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு போர் தொடுத்து வர முடிவு செய்தது. 

சென்னம்மா நாட்டு வளங்களையும் மக்களையும் பாதுகாக்க எண்ணி ஆங்கிலேய அரசிடம் போர் நிறுத்தம் செய்யக்கோரி கோரிக்கை விடுத்தார். 

ஆனால் கிட்டுர் நாட்டின் வளங்களும் நகைகளும் ஆங்கிலேயர்களின் கண்ணை உறுத்தவே போர் நிறுத்தம் செய்ய மறுத்துவிட்டது .

இதனால் ஆங்கிலேயர்களும்  சென்னம்மா விற்கும் இடையே மிகப்பெரிய போர் மூண்டது சென்னம்மா மிகவும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பெரும் ஆற்றலுடனும் போரிட்டார். 

ராணியின் தாக்குதலையும் பராக்கிரமத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேய தளபதி சேப்ளின் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார் .
ஆனால் மீண்டும் ஒப்பந்தத்தை மறுத்து ஆங்கிலேய அரசு போர் தொடுத்து வந்தது. இதனால் கிட்டுர் ராணியின் செல்வாக்கும் போர்பலமும் குறைந்தது. 

6. இந்திய அரசின் நினைவுச் சின்னங்கள். 

நாட்டுப்புற கலை பாடல் லாவணி ,கி கி ,ப டா போன்ற வடிவங்களில் அவருடைய வீர கதை காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. 


பெங்களூரிலிருந்து கோலாலம்பூர்  செல்லும் அதிவேக ரயில் ராணி சென்னம்மா விரைவு ரயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

ஆண்டுதோறும் அக்டோபர் 22 -24 ஆம் தேதிகளில் கர்நாடக மாநிலம்  கிட்டூரில் நடைபெறும் கிட்டு உற்சவத்தில் ராணி சென்னம்மாவின் வீரமும் போரில் அவர் பெற்ற முதல் வெற்றியும் கொண்டாடப்படுகின்றன தேசிய அளவில் கௌரவப்படுத்தும் வகையில் 2007 செப்டம்பரில் நாடாளுமன்ற வளாகத்தில் அவருடைய சிலை நிறுவப்பட்டது. நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. 

முடிவுரை :

சென்னமாவை ஆங்கிலேய அரசு கைது செய்து பைல்ஹோங்கல் சிறையில் சிறை கைதியாக அடைத்தனர். அங்கு அவர்புனித நூல்களைப் படித்தும் பூஜைகளில் ஈடுபட்டும் தனது சிறை வாழ்வை கழித்தார் .
சென்னம்மா தன்னுடைய 51 வது வயதில் காலமானார் .இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண் வீராங்கனை ராணி சென்னம்மா. அவரைப் போல நாமும் தைரியத்துடனும் போராடும் குணத்தோடும் வாழ வேண்டும்.


-திருமதி. ச. கீதா வேதரத்தினம். 
சிதம்பரம்